அனல் பறக்கும் ஆர்டர்.. கிட்டத்தட்ட பாதிக்கு பாதி விலையில் Google Pixel போன்.. எந்த மாடல்?
கூகுள் (Google) நிறுவனம் கூடிய விரைவில் அதன் பிக்சல் 9ஏ (Pixel 9a) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. இது மார்ச் 19 ஆம் தேதி அறிமுகமாகும் என்றும், பின்னர் மார்ச் 26 ஆம் தேதி முதல் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் பழைய பிக்சல் 8 (Google Pixel 8) ஸ்மார்ட்போன் ஆனது பிளிப்கார்ட் வலைத்தளம் வழியாக மிகப்பெரிய தள்ளுபடி விலையின் கீழ் விற்பனை செய்யப்படுகிறது.
தற்போது பிளிப்கார்ட் வலைத்தளத்தில் கூகுள் பிக்சல் 8 ஸ்மார்ட்போனின் பேஸிக் 8ஜிபி ரேம் + 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ஆனது, அதன் அசல் எம்ஆர்பி விலையான ரூ.75,999 க்கு பதிலாக 34% நேரடி தள்ளுபடியை பெற்று ரூ.49,999 க்கு வாங்க கிடைக்கிறது.

கூடவே, பிளிப்கார்ட் வலைத்தளத்தில் பிக்சல் 8 ஸ்மார்ட்போனின் மீது ரூ.3000 எச்டிஎப்சி பேங்க் கிரெடிட் கார்டு இஎம்ஐ தள்ளுபடியும் கிடைக்கிறது. இப்படியாக பிக்சல் 8 ஸ்மார்ட்போனின் இறுதி ஆபர் விலையை ரூ.46,999 க்கு கொண்டுவர முடியும். இது கிட்டத்தட்ட அசல் விலையில் "பாதிக்கு பாதி" விலையாகும்.
இப்போது பிக்சல் 8 ஸ்மார்ட்போனை நம்பி வாங்கலாமா? கண்டிப்பாக வாங்கலாம் - அதற்கான 5 காரணங்கள் இதோ: முதல் காரணம் - பிக்சல் 8 ப்ரோ ஸ்மார்ட்போனின் மாறுபட்ட வடிவமைப்பு: ரியர் கவர் முழுவதுமான, சற்று தடிமனான ஹாரிசாண்டல் கேமரா யூனிட், பெரிஸ்கோப் லென்ஸ் உட்பட மூன்று கேமராக்கள் என வரவேற்கத்தக்க மாற்றத்தை பெற்றுள்ளது.
இரண்டாவது காரணம் - அனைத்தை விடவும் பிரகாசமான டிஸ்பிளே. இதன் 6.7 இன்ச் டிஸ்ப்ளேவானது 2400 நிட்ஸ் வரை பிரைட்னஸை வழங்குகிறது. இது "கண்மூடித்தனமான" ப்ரைட்னஸை வழங்குகிறது. வலுவான சூரிய வெயிலின் கீழே கூட பிக்சல் 8 ப்ரோவின் டிஸ்பிளே தெளிவாக இருக்கிறது மற்றும் தெளிவான வண்ணங்களில் புகைப்படங்களையும் வீடியோக்களையும் காட்டுகிறது.
மூன்றாவது காரணம் - கில்லர் கேமராக்கள் மற்றும் சில கூலான ஏஐ அம்சங்கள்: சந்தேகத்திற்கு இடமின்றி சிறந்த கேமரா செட்டப்பை கொண்டுள்ளது. நான்காவது காரணம்: இது தனித்துவமான வெப்பநிலை சென்சார் உடன் வருகிறது. ஐந்தாவது காரணம் - இதுவொரு முழுமையான ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் ஆகும்.
பிக்சல் 8 மாடலை போலவே பிளிப்கார்ட் வலைத்தளத்தில் பிக்சல் 8ஏ ஸ்மார்ட்போனும் தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் 8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் அதன் அசல் எம்ஆர்பி விலையான ரூ.52,999 க்கு பதிலாக 28% தள்ளுபடியை பெற்று ரூ.37,999 க்கு வாங்க கிடைக்கிறது. இதன்மீதும் ரூ.3000 எச்டிஎப்சி பேங்க் கிரெடிட் கார்டு இஎம்ஐ தள்ளுபடி கிடைக்கிறது.
கூகுள் பிக்சல் 8ஏ ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்களை பொறுத்தவரை, இது 1080 x 2400 ரெசல்யூஷன், 430 பிபிஐ, 120 ஹெர்ட்ஸ் வரையிலான ரெஃப்ரெஷ் ரேட், கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு உடனான 6.1-இன்ச் ஓஎல்இடி டிஸ்பிளேவை கொண்டுள்ளது. பிக்சல் 7ஏ உடன் ஒப்பிடும் போது பிக்சல் 8ஏ மாடலின் டிஸ்பிளே 40 சதவீதம் பிரகாசமாக இருப்பதாக கூகுள் கூறுகிறது.
இது கூகுளின் டென்சர் ஜி3 சிப்செட் மற்றும் டைட்டன் எம்2 செக்யூரிட்டி கோப்ராசசர் மூலம் இயக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 8ஜிபி LPDDR5x ரேம் உள்ளது. கேமராவை பொறுத்தவரை இதில் 64 மெகாபிக்சல் மெயின் லென்ஸ் மற்றும் 13 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் லென்ஸ் என்கிற டூயல் ரியர் கேமரா செட்டப் உள்ளது. முன்பக்கத்தில் 13 மெகாபிக்சல் செல்பீ கேமரா உள்ளது.
இந்த கேமரா செட்டப்பில் சில ஏஐ அம்சங்களும் உள்ளன. அதில் பெஸ்ட் டேக், மேஜிக் எடிட்டர், ஆடியோ மேஜிக் ஏரேசர் போன்றவைகள் அடங்கும். மேலும் இந்த ஸ்மார்ட்போனில் கூகுளின் பில்ட் இன் ஏஐ அசிஸ்டென்ட் ஆன ஜெமினியும் இணைக்கப்பட்டுள்ளது. இது பயனர்களுக்காக பல்வேறு பணிகளை செய்யும். கடைசியாக து 4492mAh பேட்டரியுடன் வருகிறது, கூகுளின் கூற்றுப்படி, இது ஒரு நாள் முழுவதும் நீடிக்கும். ரீடெயில் பாக்ஸில் ஒரு சார்ஜர் இருக்கும் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications