Home
Mobile

பிளிப்கார்ட் பிச்சுக்கும் பாருங்க.. 50MP கேமரா.. 5000mAh பேட்டரி.. ஆஃபரில் விவோ 5ஜி போன்.. எந்த மாடல்?

பிளிப்கார்ட் தளத்தில் விவோ டி2எக்ஸ் 5ஜி (vivo T2x 5G) ஸ்மார்ட்போனுக்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. 50எம்பி கேமரா, மீடியாடெக் சிப்செட், 5000எம்ஏஎச் பேட்டரி உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் வெளிவந்தது இந்த விவோ ஸ்மார்ட்போன்.

தற்போது பிளிப்கார்ட் (flipkart)தளத்தில் விவோ டி2எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனுக்கு 33 சதவீதம் வழங்கப்பட்டு ரூ.11,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ.500 தள்ளுபடியும் உள்ளது. எனவே இந்த போனை ரூ.11499 விலையில் வாங்கவிட முடியும். இப்போது இந்த போனின் அம்சங்களைப் பார்க்கலாம்.

பிளிப்கார்ட் பிச்சுக்கும் பாருங்க.. ஆஃபரில் விவோ 5ஜி போன்.. எந்த மாடல்

விவோ டி2எக்ஸ் 5ஜி அம்சங்கள் (vivo T2x 5G Specifications): 6.58-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே (Full HD+ IPS LCD Display) வசதியுடன் விவோ டி2எக்ஸ் ஸ்மார்ட்போன் வெளிவந்தது. 2408 × 1080 பிக்சல்ஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே. பெரிய டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

தரமான மீடியாடெக் டைமன்சிட்டி 6020 (Dimensity 6020) சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது விவோ டி2எக்ஸ் ஸ்மார்ட்போன் மாடல். இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் ஆண்ட்ராய்டு 13 (Android 13) இயங்குதள வசதியுடன் இந்த விவோ டி2எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக விவோ டி2எக்ஸ் ஸ்மார்ட்போன் 50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி bokeh கேமரா சென்சார் என்கிற டூயல் ரியர் கேமரா செட்டப் கொண்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் தெளிவான புகைப்படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமரா கொண்டுள்ளது இந்த போன். இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

அதேபோல் 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்டுள்ளது இந்த விவோ எ2எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் மாடல். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த இந்த போனில் எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு உள்ளது. குறிப்பாக இந்த போனின் வடிவமைப்பு மற்றும் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

பிளிப்கார்ட் பிச்சுக்கும் பாருங்க.. ஆஃபரில் விவோ 5ஜி போன்.. எந்த மாடல்

இந்த விவோ டி2எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 5000 எம்ஏஎச் பேட்டரி வசதியுடன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு 18 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி, கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த போன்.

5ஜி, டூயல்-பேண்ட் வைஃபை, புளூடூத், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த போன். விவோ டி2எக்ஸ் ஸ்மார்ட்போனின் எடை 184 கிராம் ஆகும். குறிப்பாக அனைத்து சிறப்பு அம்சங்களுடன் பட்ஜெட் விலையில் இந்த போன் கிடைப்பதால் நம்பி வாங்கலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
33 Percent Discount on vivo T2x 5G With 128GB Storage in Flipkart Sale Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X