அமேசான் பிச்சிக்குது.. ரூ.15,999 பட்ஜெட்ல Samsung 5G போன்.. AMOLED டிஸ்பிளே.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
அமேசான் கிரேட் ரிபப்ளிக் டே சேல் 2026 (Amazon Great Republic Day Sale 2026) தொடங்கிவிட்டது. இந்த சிறப்பு விற்பனையில் சாம்சங் ஸ்மார்ட்போன்களுக்கு இதுவரை கிடைக்காத தள்ளுபடி கொடுக்கப்படுகிறது. 33 சதவீத தள்ளுபடி விலையில் சாம்சங் கேலக்ஸி எம்36 5ஜி (Samsung Galaxy M36 5G) ஸ்மார்ட்போன் கிடைக்கிறது. இந்த தள்ளுபடி விவரங்களை பார்க்கலாம்.
இப்போது, அமேசான் தளத்தில் சாம்சங் கேலக்ஸி எம்36 5ஜி ஸ்மார்ட்போனின் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி மெமரி வேரியண்ட் ஆனது 33 சதவீத தள்ளுபடியுடன் ரூ.16,999 விலைக்கு கிடைத்துள்ளது. மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட கிரெடிட் கார்டுக்கு ரூ.1,000 தள்ளுபடி கிடைக்கிறது. ஆகவே, ரூ.15,999 விலைக்கு இந்த சாம்சங் கேலக்ஸி எம்36 5ஜி ஸ்மார்ட்போனை வாங்கி கொள்ளலாம்.

சாம்சங் கேலக்ஸி எம்36 5ஜி அம்சங்கள் (Samsung Galaxy M36 5G Specifications): ஆக்டா கோர் எக்ஸினோஸ் 1380 (Octa Core Exynos 1380) சிப்செட்டை இந்த சாம்சங் கேலக்ஸி எம்36 5ஜி ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது. மேலும், மாலி ஜி68 எம்பி5 ஜிபியு (Mali G68 MP5 GPU) கிராபிக்ஸ் கார்டு மற்றும் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) கிடைத்துள்ளது.
6 ஜெனரேஷன் ஓஎஸ் அப்கிரேட்கள் (OS Upgrades) மற்றும் 6 வருடங்குக்கான செக்யூரிட்டி அப்டேட்களை (Security Updates) இந்த சாம்சங் கேலக்ஸி எம்36 5ஜி ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது. 6.7 இன்ச் (1080 x 2340 பிக்சல்கள்) சூப்பர் அமோலெட் இன்பினிட்டி-யூ (Super AMOLED Infinity-U) டிஸ்பிளே கிடைத்துள்ளது. இதில் ஃபுல்எச்டி (FHD+) ரெசொலூஷன் கிடைத்துள்ளது.
மேலும், 120 Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது. கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ்பிளஸ் (Corning Gorilla Glass Victus+) டிஸ்பிளே புரொடெக்சனை கொடுத்துள்ளது. 50 எம்பி மெயின் கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2 எம்பி மேக்ரோ கேமராவை இந்த சாம்சங் கேலக்ஸி எம்36 5ஜி ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது. 4K வீடியோ ரெக்கார்டிங் கிடைத்துள்ளது.
மேலும், ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (Optical Image Stabilization) டெக்னாலஜி உள்ளது. போட்டோ ரீமாஸ்டர் (Photo Remaster), ஆப்ஜெக்ட் எரைசர் (Object Eraser) மற்றும் ஆட்டோ நைட் மோட் (Auto Night Mode) போன்ற பிரத்யேக கேமரா பீச்சர்களை கொடுத்துள்ளது. வீடியோ கால்கள் மற்றும் செல்பீகளுக்காக 13 எம்பி செல்பீ கேமரா கிடைக்கிறது.
சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor), இந்த சாம்சங் கேலக்ஸி எம்36 5ஜி ஸ்மார்ட்போனில் கிடைத்துள்ளது. மேலும், 25W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5000mAh பேட்டரி கிடைத்துள்ளது. 7.7 எம்எம் தடிமன் மட்டுமே உள்ளது. 197 கிராம் எடை உள்ளது. 5ஜி எஸ்ஏ / என்எஸ்ஏ கனெக்டிவிட்டிகளை கொடுத்துள்ளது.
ஆரஞ்சு ஹேஸ் (Orange Haze), வெல்வெட் பிளாக் (Velvet Black) மற்றும் செரீன் கிரீன் (Serene Green) ஆகிய கலர்களில் ஆர்டர் செய்து கொள்ளலாம். 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி மெமரி வேரியண்ட் மட்டுமல்லாமல், 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்களும் விற்பனைக்கு கிடைக்க உள்ளன.


Click it and Unblock the Notifications








