Home
Mobile

ஆர்டருக்கு மேல ஆர்டர்.. 33 சதவீத டிஸ்கவுண்ட்டில் 8000mAh பேட்டரி ஸ்மார்ட்போன்.. 80W சார்ஜிங்.. எந்த மாடல்?

இந்திய ஸ்மார்ட்போன் மார்கெட்டில் பெரிய பேட்டரியை கொண்ட மாடல்களுக்கு தனி வரவேற்பு இருக்கிறது. இதில் 8000mAh பேட்டரியுடன் வெளியாகிய ரியல்மி பி4எஸ் 5ஜி (Realme P4s 5G) ஸ்மார்ட்போன் இப்போது தள்ளுபடி விலைக்கு கிடைக்கிறது. இந்த ரியல்மி பி4எஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் விலை, டிஸ்கவுண்ட் மற்றும் பீச்சர்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

பிளிப்கார்ட் தளத்தில் 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.36,999 ஆக இருக்கிறது. இந்த விலையே 33 சதவீத டிஸ்கவுண்ட் போக கிடைக்கிறது. மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட கிரெடிட் கார்டுகளுக்கு ரூ.4,700 தள்ளுபடி கிடைக்கிறது. ஆகவே, ரூ.32,299 விலைக்கு இந்த ரியல்மி பி4எஸ் 5ஜி ஸ்மார்ட்போனை வாங்கலாம்.

ஆர்டருக்கு மேல ஆர்டர்.. 33 சதவீத டிஸ்கவுண்ட்டில் 8000mAh பேட்டரி!

மேலும், 9 மாதங்களுக்கு நோ-காஸ்ட் ஈஎம்ஐ சலுகையிலும் இந்த ரியல்மி பி4எஸ் 5ஜி ஸ்மார்ட்போனை வாங்கி கொள்ளலாம். எஸ்பிஐ கிரெடிட் அல்லது டெபிட் கார்டு இருந்தால், ரூ.3,000 டிஸ்கவுண்ட் கிடைக்கும். இதுபோக எக்ஸ்சேஞ்ச் சலுகையும் இந்த ரியல்மி பி4எஸ் 5ஜி ஸ்மார்ட்போனுக்கு கிடைக்கிறது. இப்போது பீச்சர்களை தெரிந்து கொள்ளலாம்.

ரியல்மி பி4எஸ் 5ஜி அம்சங்கள் (Realme P4s 5G Specifications): 6.78 இன்ச் (1272 x 2772 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே மற்றும் புரொடெக்னுக்காக ஏஜிசி டிடி ஸ்டார் டிபிளஸ் (AGC DT Star D+) கிளாஸ் கிடைக்கிறது. 144Hz ரெஃப்ரெஷ் ரேட் மட்டுமல்லாமல், 1.5K ரெசொலூஷன் மற்றும் 6500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் இந்த ரியல்மி பி4எஸ் 5ஜி ஸ்மார்ட்போனுக்கு கிடைக்கிறது.

இதுவொரு சாம்சங் எம்14 (Samsung M14) பேனலாக இருப்பதால், பிரீமியம் குவாலிட்டி மற்றும் அவுட்புட் எதிர்பார்க்கலாம். ஓடிடி பிரியர்களுக்கு ஏற்ப 450 பிபிஐ பிக்சல் டென்சிட்டி மற்றும் எச்டிஆர்10பிளஸ் (HDR10+) கிடைக்கிறது. மேலும், 3000Hz இன்ஸ்டன்ட் டச் சாம்பிளிங் ரேட் கேமிங் பிரியர்கள் விரும்பும்படி கொடுக்கப்பட்டு இருக்கிறது.

ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) மற்றும் ரியல்மி யுஐ 7.0 (Realme UI 7.0) கிடைக்கிறது. பக்கா பர்ஃபாமென்ஸ் கொடுக்கும்படி ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7400 அல்ட்ரா (Octa Core MediaTek Dimensity 7400 Ultra) சிப்செட் கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஆர்ம் மாலி ஜி615 ஜிபியு (Arm Mali G615 GPU) கிராபிக்ஸ் கார்டு கிடைத்து இருக்கிறது.

கேமராவிலும் பட்டையை கிளப்பி இருக்கிறது. ஏனென்றால், ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) டெக்னாலஜி கிடைக்கிறது. இந்த டெக்னாலஜியுடன் 50 எம்பி மெயின் கேமரா வருகிறது. மேலும், 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஆட்டோ போகஸ் (Auto Focus) செய்து கொள்ளும். இதுபோக, 4K வீடியோ ரெக்கார்டிங் கிடைக்கிறது.

IP65 ரேட்டிங் + IP66 ரேட்டிங் கொண்ட டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ஸ் கொண்ட மாடலாக இந்த ரியல்மி பி4எஸ் 5ஜி இருக்கிறது. ஆகவே, அண்டர்வாட்டர் (Underwater) கேமரா சப்போர்ட் கிடைக்கிறது. 80W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 8000mAh பேட்டரி உள்ளது. இன்-டிஸ்பிளே ஆப்டிகல் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Optical Fingerprint Sensor) கிடைக்கிறது.

Best Mobiles in India

English summary
33 Percent Discount on Realme P4s 5G With 8GB RAM in Flipkart Check Offer Price Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X