பிச்சிக்கிட்டு போகுது.. வெறும் ரூ.13140 போதும்.. 108MP கேமரா.. 45W சார்ஜிங்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
108 எம்பி கேமரா மட்டுமல்லாமல், 3X ஜூமிங் கொடுக்கும் ரியல்மி 12 5ஜி (Realme 12 5G) போனானது, இதுவரையில் கிடைக்காத அடிமட்ட விலைக்கு வந்துள்ளது. அமேசான் விற்பனையில் (Amazon Sale) பட்டையை கிளப்பும்படி ஆர்டர் குவிந்து வருகிறது. 108எம்பி கேமராவுக்கு அடுத்தபடியாக 45W சூப்பர்வூக் சார்ஜிங், 5000mAh பேட்டரி, 6என்எம் ஆக்டா கோர் சிப்செட், டூயஸ் ஸ்பீக்கர்கள், 8 ஜிபி டைனாமிக் ரேம் போன்ற பட்ஜெட்டைவிட கூடுதல் பீச்சர்களை பேக் செய்துள்ளது. முழு விவரங்கள் இதோ.
இந்திய கேமரா பிரியர்களுக்கான சூப்பர் குரூப் மோட் (Super Group Mode), நைட் மோட் (Night Mode) மற்றும் ஃபிலிம் பில்டர்களுடன் (Film Fliters) டூயல் கேமரா செட்டப் கொண்டிருக்கிறது. மேலும், ஐசோசெல் எச்எம்6 (ISOCELL HM6) சென்சார் மற்றும் 3X இன்-சென்சார் ஜூமிங் (In-sensor Zooming) கிடைக்கிறது. 108 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி டெப்த் கேமரா கிடைக்கிறது.
ரியல்மி 12 5ஜி அம்சங்கள் (Realme 12 5G Specifications): இந்த ரியல்மி போனில் 6என்எம் ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6100 பிளஸ் (6nm Octa Core MediaTek Dimensity 6100+) சிப்செட் மற்றும் ரியல்மி யுஐ 5.0 (realme UI 5.0) பேக் செய்யப்பட்டுள்ளது. ஜிபியுவை பொறுத்தவரையில் மாலி ஜி57 எம்சி2 (Mali G57 MC2) கிடைக்கிறது. ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) உள்ளது.
5ஜி லோவ் பவர் ஸ்மார்ட் ஹாட்ஸ்பாட் (5G Low Power Smart Hotspot), ஸ்மார்ட் 5ஜி (Smart 5G) பீச்சர்கள் கிடைக்கின்றன. டிஸ்பிளேவில் அமோலெட் மட்டும் இருக்காது. இருப்பினும், ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன் மற்றும் 950 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொண்ட 6.72 இன்ச் (2400 × 1080 பிக்சல்கள்) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த எல்சிடி (LCD) டிஸ்பிளேவில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் வருகிறது.
மேலும், 240Hz டச் சாம்பிளிங் ரேட் மற்றும் 16.7 மில்லியன் கலர் டெப்த் பெற்று கொள்ளலாம். ரியர் கேமராவுக்கு அடுத்தபடியாக 1080P ஷூட்டிங் சப்போர்ட் கொண்ட 8 எம்பி செல்பீ கேமரா கிடைக்கிறது. இந்த ரியல்மி 12 5ஜி போனில் 8 ஜிபி ரேம் + 8 ஜிபி விர்ச்சுவல் ரேம் + 128 மெமரி கொண்ட வேரியண்ட் விற்பனைக்கு வருகிறது. 2 டிபி மெமரிக்கான எஸ்டி சிலாட் உள்ளது.
கேமரா மற்றும் சிப்செட்டை போல பேட்டரி சிஸ்டமும் பட்ஜெட்டைவிட கூடுதலாக இருக்கிறது. ஏனென்றால், 45W சூப்பர்வூக் (SUPERVOOC) சார்ஜிங்குடன் 5000mAh பேட்டரியை கொடுக்கிறது. இந்த பேட்டரிக்கு டைப்-சி சார்ஜ் (Type C Charge) மற்றும் 30 நிமிடங்களில் 50 சதவீத சார்ஜிங் சப்போர்ட் கிடைக்கிறது. டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Dual Stereo Speakers) கிடைக்கிறது.

ஹை-ரெஸ் ஆடியோ (Hi-Res Audio) உறுதி செய்யப்பட்டுள்ளது. சைடு மவுண்டெட் ஃபிங்கர்ப்ரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor) மற்றும் 7.69 மிமீ தடிமனில் ஸ்லிம் பாடி கொண்டிருக்கிறது. 3.5 எம்எம் ஆடியோ ஜாக் (Audio Jack), 5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ (5G SA/NSA) மற்றும் டூயல் 4ஜி வோஎல்டிஇ (Dual 4G VoLTE) கனெக்டிவிட்டியை கொடுக்கிறது.
இந்த ரியல்மியின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டில் விலை ரூ.17,999ஆக இருந்தது. ஆனால், இப்போது வெறும் ரூ.14,140 பட்ஜெட்டில் அமேசான் விற்பனையில் (Amazon Sale) கிடைக்கிறது. ரூ.1000 பேங்க் ஆப் பரோடா கிரெடிட் கார்டுக்கு டிஸ்கவுண்ட் இருக்கிறது. டிவிலைட் பர்பிள் (Twilight Purple) மற்றும் வுட்லேண்ட் கிரீன் (Woodland Green) கலர்கள் உள்ளன.


Click it and Unblock the Notifications








