Home
Mobile

ஆர்டர் மிரள விடுது.. வெறும் ரூ.9,717 பட்ஜெட்ல 5000mAh பேட்டரி.. 45W சார்ஜிங்.. IP54 ரேட்டிங்.. எந்த மாடல்?

பிளிப்கார்ட் தளத்தில் ஓப்போ ஏ3எக்ஸ் 5ஜி (OPPO A3x 5G) ஸ்மார்ட்போனுக்கு தள்ளுபடி கொடுக்கப்படுகிறது. பேங்க் தள்ளுபடிக்கு போகாமலேயே நேரடி விலை குறைப்பில் மலிவான விலைக்கு வாங்கி கொள்ளலாம். 5000mAh பேட்டரி, 45W ஃபாஸ்ட் சார்ஜிங், IP54 ரேட்டிங் வாட்டர் ரெசிஸ்டன்ஸ் மட்டுமல்லாமல், மிலிட்டரி கிரேடு புரொடெக்சன் கொடுக்கப்படுகிறது. மீடியாடெக் டைமன்சிட்டி 6300 6என்எம் சிப்செட் கொண்ட இந்த ஓப்போ ஏ3எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் விலை மற்றும் முழு பீச்சர்கள் குறித்த விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

4 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.12,499 ஆகவும், 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.13,499 ஆகவும் இருக்கிறது. இப்போது, பிளிப்கார்ட் தளத்தில் 4 ஜிபி + 64 ஜிபி மெமரி வேரியண்ட் ரூ.9,717 விலைக்கு கிடைக்கிறது. இந்த விலைக்கு ஸ்பார்க்கிள் பிளாக் (Sparkle Black) கலர் மாடலை வாங்கி கொள்ளலாம்.

ஆர்டர் மிரள விடுது.. வெறும் ரூ.9,717 பட்ஜெட்ல 5000mAh பேட்டரி!

ஸ்டார்லிட் ஒயிட் (Starlight White) கலர் மாடல் ரூ.9,899 விலைக்கு கிடைக்கிறது. அதேபோல 4 ஜிபி + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் ஸ்டார்லிட் ஒயிட் கலர் மாடல் ரூ.12,999 பட்ஜெட்டில் கிடைக்கிறது. ஸ்பார்க்கிள் பிளாக் கலர் மாடல் ரூ.10,877 விலைக்கும், ஸ்டார்ரி பர்பிள் (Starry Purple) கலர் மாடல் ரூ.10,999 பட்ஜெட்டிலும் வாங்க கிடைக்கிறது. முழு பீச்சர்களை தெரிந்து கொள்ளலாம்.

ஓப்போ ஏ3எக்ஸ் 5ஜி அம்சங்கள் (OPPO A3x 5G Specifications): இந்த ஓப்போ ஸ்மார்ட்போனில் ஸ்பிளாஷ் டச் (Splash Touch) சப்போர்ட் கொண்ட 6.67 இன்ச் (1604 x 720 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவில் எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன் மற்றும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது. மேலும், 1,000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது.

இதுபோக பாண்டா கிளாஸ் புரொடெக்சன் (Panda Glass Protection) கிடைக்கிறது. இப்படி டிஸ்பிளேவுக்கு மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த பாடிக்கும் எம்ஐஎஸ்-எஸ்டிடி-810எச் (MIL-STD-810H) சர்டிபிகேஷன் கொண்ட மிலிட்டரி கிரேடு டியூரபிலிட்டி கிடைக்கிறது. இதுபோக IP54 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) கிடைக்கிறது.

இந்த ஓப்போ ஏ3எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனில் 8 எம்பி மெயின் கேமரா மற்றும் 5 எம்பி செல்பீ கேமரா கிடைக்கிறது. மெயின் கேமராவில் ஆட்டோ போகஸ் (Auto Focus) மற்றும் செல்பீ கேமராவில் பிக்சட் போகஸ் (Fixed Focus) கிடைக்கிறது. இதுபோக ஓப்பன்-லூப் போகஸ் மோட்டார் (Open-loop Focus Motor) கிடைக்கிறது.

1080p வீடியோ ரெக்கார்டிங் மற்றும் ஓப்போ மாடல்களில் வழக்கமாக கிடைக்கும் போர்ட்ராய்டு ரீடச் மோட் (Portrait Retouch Mode) கிடைக்கிறது. இந்த ஓப்போ ஏ3எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) பேஸ்டு கலர்ஓஎஸ் 14 (Color OS 14) கிடைக்கிறது. 2 ஜெனரேஷன் ஓஎஸ் அப்டேட்கள், மூன்று வருடங்களுக்கான செக்யூரிட்டி அப்டேட்கள் உள்ளது.

இதுபோக டிரினிட்டி என்ஜின் சப்போர்ட் கொண்ட ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 3என்எம் (Octa Core MediaTek Dimensity 6300 6nm) சிப்செட் கிடைக்கிறது. ஓப்போ ஏ3எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனில் 45W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் (Fast Charging) கொண்ட 5000mAh பேட்டரி மற்றும் டைப்-சி சார்ஜிங் (Type C Charging) கிடைக்கிறது. சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் உள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
33 Percent Discount on OPPO A3x 5G With 4GB RAM in Flipkart Sale Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X