கிடுகிடுவென குறைந்த OnePlus நோர்ட் சிஇ 3 5ஜி விலை.. சோனி கேமரா.. 80W சார்ஜிங்.. 128ஜிபி மெமரி.. விட்றாதீங்க..
அமேசான் தளத்தில் ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 5ஜி (OnePlus Nord CE 3 5G) ஸ்மார்ட்போனுக்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக அமோலெட் டிஸ்பிளே, சோனி கேமரா, ஃபாஸ்ட் சார்ஜிங் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த போன். இப்போது ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 5ஜி போனுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் இதன் அம்சங்களைப் பார்க்கலாம்.
அமேசான் தளத்தில் ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 5ஜி ஸ்மார்ட்போனுக்கு 33 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.17,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ.1500 தள்ளுபடியும் உள்ளது. எனவே இந்த ஒன்பிளஸ் போனை ரூ.16499 விலையில் வாங்கிவிட முடியும்.

ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 5ஜி அம்சங்கள் (Oneplus Nord CE 3 5G Specifications): சக்திவாய்ந்த ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 782ஜி 6என்எம் மொபைல் (Octa Core Snapdragon 782G 6nm Mobile) சிப்செட் வசதியுடன் இந்த அசத்தலான ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்தது. அதேபோல் இந்த போனில் அட்ரினோ 642எல் ஜிபியு (Adreno 642L GPU) கிராபிக்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக 6.7-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் அமோலெட் டிஸ்பிளே வசதியுடன் இந்த ஒன்பிளஸ் போன் வெளிவந்தது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 2412 x 1080 பிக்சல்ஸ், எச்டிஆர் 10 பிளஸ், 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 950 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 2160Hz PWM டிம்மிங் உள்ளிட்ட பல்வேறு டிஸ்பிளே அம்சங்கள் உள்ளன. இதுதவிர பல்வேறு அம்சங்களைக் கொண்டுள்ளது இதன் டிஸ்பிளே.
அதன்படி 240Hz டச் சாம்பிளிங் ரேட் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 (Corning Gorilla Glass 5) புரொடெக்சன் கொண்டுள்ளது இதன் டிஸ்பிளே. மேலும் ஆக்ஸிஜன்ஓஎஸ் 13.1 (OxygenOS 13.1) சார்ந்த ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) மூலம் இந்த போன் இயங்குகிறது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
அதேபோல் 50எம்பி சோனி ஐஎம்எக்ஸ்890 (Sony IMX890) சென்சார் + 8எம்பி சோனி ஐஎம்எக்ஸ்355 (Sony IMX355) சென்சார் + 2எம்பி மேக்ரோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த போன். மேலும் 20x டிஜிட்டல் ஜூமிங், 4K வீடியோ ரெக்கார்டிங் சப்போர்ட், அல்ட்ரா ஸ்டெடி மோட் (Ultra Steady Mode), டூயல் வியூ வீடியோ (Dual-view Video), எச்டிஆர் (HDR), நைட்ஸ்கேப் (Nightscape), போர்ட்ராய்டு மோட் (Portrait Mode), வீடியோ போர்ட்ராய்டு (Video Portrait) போன்ற கேமரா அம்சங்கள் இதில் உள்ளன.

செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கொண்டுள்ளது இந்த போன். குறிப்பாக 1080p வீடியோ ரெக்கார்டிங் மற்றும் ஸ்டெடி மோட் சப்போர்ட் கொண்டுள்ளது இதன் செல்பி கேமரா. சுருக்கமாக கூறவேண்டும் என்றால் இந்த போனின் கேமரா அமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ஒன்பிளஸ் நிறுவனம்
இந்த ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 5ஜி ஸ்மார்ட்போன் 5000mAh பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 80W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. குறிப்பாக இந்த போனை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும். டூயல் 5ஜி நானோ சிம், 12 5ஜி பேண்டு சப்போர்ட், புளூடூத் 5.3, வைஃபை 6, என்எப்சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன.


Click it and Unblock the Notifications