வெறும் ரூ.7249 போதும்... 50எம்பி கேமரா.. 5000எம்ஏஎச் பேட்டரி.. ஆஃபரில் MOTO போன்.. எந்த மாடல்?
பிளிப்கார்ட் தளத்தில் மோட்டோ ஜி24 பவர் (MOTO g24 Power) ஸ்மார்ட்போனுக்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த போன் 50எம்பி கேமரா, 6000எம்ஏஎச் பேட்டரி மற்றும் பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் வெளிவந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது இந்த போனக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் இதன் அம்சங்களை இந்த பதிவில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.
அதாவது 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட மோட்டோ ஜி24 பவர் ஸ்மார்ட்போனுக்கு 33 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.7,999 விலையில்
விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ.750 தள்ளுபடியும் கிடைக்கும்
எனவே இந்த போனை ரூ.7249 இருந்தால் வாங்கவிட முடியும்.

மோட்டோ ஜி24 பவர் அம்சங்கள் (moto g24 Power specifications): 6.5-இன்ச் எச்டி பிளஸ் எல்சிடி டிஸபிளே வசதியுடன் இந்த அசத்தலான மோட்டோ ஜி24 பவர் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் டிஸ்பிளேவில் 1612 x 720 பிக்சல்ஸ், 20:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ (20:9 aspect ratio), 500 நிட்ஸ் ப்ரைட்னஸ், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது.
மீடியாடெக் ஹீலியோ ஜி85 (Octa Core MediaTek Helio G85)சிப்செட் வசதியுடன் இந்த மோட்டோ ஜி24 பவர் ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை இயக்குவதற்கு அருமையாக இருக்கும். குறிப்பாக ஹீலியோ ஜி85 சிப்செட் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும். இதுதவிர ஆர்ம் மாலி-ஜி52 2EEMC2 (ARM Mali-G52 2EEMC2 GPU) கிராபிக்ஸ் கார்டு இதில் வருகிறது.
அதேபோல் 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் வசதியைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான மோட்டோ ஜி24 பவர் ஸ்மார்ட்போன். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் 1டிபி வரை மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக My UX சார்ந்த ஆண்ட்ராய்டு 14 (Android 14) இயங்குதள வசதியுடன் இந்த மோட்டோ ஜி24 பவர் ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் ஐபி52 ரேட்டிங் கொண்டுள்ளது இந்த அசத்தலான மோட்டோ ஸ்மார்ட்போன். இதுதவிர ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டால்பி அட்மோஸ், எஃப்எம் ரேடியோ உள்ளிட்ட பல்வேறு சிறப்பான வசதிகளுடன் இந்த மோட்டோ ஜி24 பவர் போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
மோட்டோ ஜி24 பவர் ஸ்மார்ட்போன்50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி மேக்ரோ என்கிற டூயல் ரியர் கேமரா உடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனேவ இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் அசத்தலான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த போன். அதேபோல் எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இவற்றுள் அடக்கம்.
இந்த மோட்டோ ஜி24 பவர் ஸ்மார்ட்போன் 6000எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது. எனவே இந்த போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 30W ஃபாஸ்ட் டர்போபவர் சார்ஜிங் ஆதரவும் உள்ளது. எனவே இந்த போனை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.ஐஸ் ப்ளூ (Ice Blue) மற்றும் கிளாசியர் ப்ளூ (Glacier Blue) நிறங்களில் மோட்டோ ஜி24 பவர் போன் வெளிவந்துள்ளது.
சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் (Side-mounted Fingerprint Scanner) வசதியைக் கொண்டுள்ளது மோட்டோ ஜி24 பவர் ஸ்மார்ட்போன். மேலும் டூயல் 4ஜி எல்டிஇ, வைஃபை 802.11ஏசி, புளூடூத் 5.0, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த போன். மோட்டோ ஜி24 பவர் போனின் எடை 197 கிராம் ஆகும்.


Click it and Unblock the Notifications