பிளிப்கார்ட் பிச்சிக்குது.. ரூ.46,901 விலை குறைப்பு.. அடிமட்ட பட்ஜெட்ல iPhone.. 512GB வேரியண்ட்.. எந்த மாடல்?
பிளிப்கார்ட் விற்பனையில் (Flipkart Sale) ஆப்பிள் பிரியர்கள் கனவிலும் நினைக்காத விலை குறைப்பில் ஐபோன் 14 பிளஸ் (iPhone 14 Plus) போன் ஆர்டருக்கு வந்துள்ளது. பொசுக்குனு ரூ.46,901 குறைக்கப்பட்டுள்ளது. இதுபோக பேங்க் டிஸ்கவுண்ட் மற்றும் எக்ஸ்சேஞ்ச் போனஸ் கிடைக்கிறது. செராமிக் சீல்டு புரொடெக்சன் கொண்ட ஓஎல்இடி டிஸ்பிளே, போட்டோனிக் என்ஜின் கொண்ட மெயின் கேமரா, மேக்சேப் வயர்லெஸ் சார்ஜிங் கொண்ட லித்தியம் பேட்டரி மற்றும் 512 ஜிபி மெமரி கொண்ட இந்த போனின் விவரங்கள் இதோ.
ஐபோன் 14 பிளஸ் அம்சங்கள் (iPhone 14 Plus Specification): இந்த மாடலில் ஐஓஎஸ் 16 (iOS 16) வருகிறது. அல்ட்ரா பிரீமியம் பர்ஃபாமென்ஸ் கொடுக்கும் ஏ15 பயோனிக் 5என்எம் சிக்ஸ்-கோர் (A15 Bionic 5nm Six-Core) சிப்செட் வருகிறது. இதுபோக கேமிங் அவுட்புட் கொடுக்கும் 5 கோர் ஜிபியு (5 Core GPU) மற்றும் 16 கோர் நியூரல் என்ஜின் (16 Core Neural Engine) வருகிறது.

ஓஎல்இடி (OLED) பேனல் கொண்ட 6.7 இன்ச் (2778 × 1284 பிக்சல்கள்) சூப்பர் ரெடினா எக்டிஆர் (Super Retina XDR) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் 458 பிபிஐ பிக்சல் டென்சிட்டி, எச்டிஆர் (HDR), ட்ரூ டோன் (True Tone) மற்றும் 1200 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது. இந்த பிரீமியம் டிஸ்பிளேவுக்கு செராமிக் ஷீல்டு புரொடெக்சன் (Ceramic Shield Protection) வருகிறது.
இந்த ஐபோனில் மூன்று மெமரி வேரியண்ட்கள் இருக்கின்றன. ஆகவே, 128 ஜிபி, 256 ஜிபி மற்றும் 512 ஜிபி மெமரி மாடல்கள் விற்பனைக்கு வருகின்றன. 15W மேக்சேப் வயர்லெஸ் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட லித்தியம்-அயன் பேட்டரி வருகிறது. இந்த பேட்டரி மூலம் 26 மணி நேரங்களுக்கு பேக்கப் பெற்று கொள்ளலாம். IP68 வாட்டர் ரெசிஸ்டன்ட் வருகிறது.
இந்த போனில் 12 எம்பி வைடு ஆங்கிள் கேமரா + 12 எம்பி அல்ட்ரா வைடு கேமரா கொண்ட ரியர் கேமரா சிஸ்டம் வருகிறது. வழக்கமான 12 எம்பி ட்ரூடெப்த் (TrueDepth) செல்பீ ஷூட்டர் வருகிறது. வைடு ஆங்கிள் கேமராவில் சென்சார்-ஷிப்ட் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (Sensor-shift Optical Image Stabilisation) டெக்னாலஜி வருகிறது.
அதேபோல போகஸ் பிக்சல் (Focus Pixels) மற்றும் போட்டோனிக் என்ஜின் (Photonic Engine) உள்ளது. மேலும், 4K வீடியோ ரெக்கார்டிங், எச்டிஆர் (HDR) மற்றும் டால்பி விஷன் (Dolby Vision) சப்போர்ட் வருகிறது. அதேபோல ட்ரூ டோன் ஸ்பிளாஷ் (True Tone Flash) பேக் செய்யப்பட்டுள்ளது. 2X ஆப்டிகல் ஜூம் மற்றும் 5X டிஜிட்டல் ஜூம் சப்போர்ட் வருகிறது.
ஐபோன் 14 பிளஸ் விலை (iPhone 14 Plus Price): இந்த போனின் 512 ஜிபி மெமரி மாடலானது, ரூ.1,19,900 பட்ஜெட்டில் வெளியாகியது. ஆனால், இப்போது, ரூ.46,901 விலை குறைந்து, வெறும் ரூ.72,999 பட்ஜெட்டில் விற்பனை கிடைக்கிறது. பிளிப்கார்ட் தளத்தில் ஆர்டர் செய்து கொள்ளலாம். யுபிஐ மூலம் ஆர்டர் செய்தால், கூடுதலாக ரூ.1000 டிஸ்கவுண்ட் கிடைக்கிறது.
இந்த விலை குறைப்பு மற்றும் டிஸ்கவுண்ட் போக ரூ.53,350 மதிப்பில் எக்ஸ்சேஞ்ச் போனஸ் கொடுக்கப்படுகிறது. ஆகவே, இந்த ஐபோன் 14 பிளஸ் போனின் 512 ஜிபி மாடலை ரூ.71,999 பட்ஜெட்டில் வாங்கி கொள்ளலாம். இதேபோல 128 ஜிபி மற்றும் 256 ஜிபி மாடல்களுக்கும் விலை குறைப்பு, பேங்க் டிஸ்கவுண்ட் மற்றும் எக்ஸ்சேஞ்ச் போனஸ் கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








