SALE வெளுத்து கட்டுது.. ரூ.5,510 விலை குறைப்பு.. 3D டிஸ்பிளே.. OIS கேமரா.. 4700mAh பேட்டரி.. எந்த மாடல்?
இந்திய மார்கெட்டில் அல்ட்ரா பிரீமியம் பீச்சர்களுடன் சியோமி 15 (Xiaomi 15) மற்றும் சியோமி 15 அல்ட்ரா (Xiaomi 15 Ultra) மாடல்கள் களமிறங்கி இருக்கின்றன. இந்த நேரத்தில் சத்தமே இல்லாமல் சியோமி 14 சிவி (Xiaomi 14 CIVI) போனானது ரூ.5,510 விலை குறைப்பில் ஆர்டருக்கு வந்துள்ளது. குவாட் கர்வ்ட் டிஸ்பிளே, லெய்கா ஆப்டிக்ஸ் கேமரா சிஸ்டம், மெட்டல் ஃபிரேம் மற்றும் லெதர் பேனல் பாடி போன்ற பீச்சர்களில் மிரளவிடும் இந்த சியோமியின் விவரங்கள் இதோ.
குவாட் கர்வ்ட் டிஸ்பிளே மட்டுமல்லாமல், கர்வ் பாடி, மெட்டல் ஃபிரேம் மற்றும் நானோ -டெக் வேகன் லெதர் பேனல் டிசைனில் பிரீமியம் லுக் கொடுக்கிறது. 7.4 எம்எம் தடிமனில் அல்ட்ரா ஸ்லிம் பாடி கிடைக்கிறது. இதற்கு 6X வியர் ரெசிஸ்டன்ட் (Wear Resistent) கிடைக்கிறது. ஆகவே, டிசைனில் ஆப்பிள், சாம்சங் போன்களுக்கு நிகரான ஃபீல் கொடுக்கும்.

சியோமி 14 சிவி அம்சங்கள் (Xiaomi 14 CIVI Specifications): இந்த சியோமி போனில் பிரீமியம் பர்ஃபாமென்ஸ் கொண்ட ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 3 4என்எம் (Snapdragon 8s Gen 3 4nm) சிப்செட் மற்றும் அட்ரினோ 735 ஜிபியு (Adreno 735 GPU) கிராபிக்ஸ் கார்டு கிடைக்கிறது. ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) பேஸ்டு சியோமி ஹைப்பர்ஓஎஸ் (Xiaomi HyperOS) உள்ளது.
8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மற்றும் 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்கள் விற்பனைக்கு கிடைக்கின்றன. கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 (Corning Gorilla Glass Victus 2) பாதுகாப்பு மட்டுமல்லாமல், 1.5K ரெசொலூஷன், 3000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொண்ட 6.55 இன்ச் குவாட் கர்வ்ட் அமோலெட் (Quad Curved AMOLED) டிஸ்பிளே கிடைக்கிறது.
இந்த அல்ட்ரா பிரீமியம் டிஸ்பிளேவில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 240Hz டச் சாம்பிளிங் ரேட் மற்றும் 68 பில்லியன் கலர் டெப்த் கிடைக்கிறது. மேலும், டால்பி விஷன் (Dolby Vision), எச்டிஆர்10பிளஸ் (HDR10+) மற்றும் பி3 கலர் காமட் சப்போர்ட் கிடைக்கிறது. இந்த சியோமியில் லைட் ஹண்டர் 800 (Light Hunter 800) சென்சாருடன் 50 எம்பி லெய்கா மெயின் கேமரா கிடைக்கிறது.
50 எம்பி லெய்கா டெலிபோட்டோ கேமரா + 12 எம்பி லெய்கா அல்ட்ரா வைடு கேமரா கிடைக்கிறது. மெயின் கேமராவில் ஓஐஎஸ் டெக்னாலஜி (OIS Technology) உள்ளது. டெலிபோட்டோவில் 2X ஆப்டிகல் ஜூமிங் மற்றும் சாம்சங் ஜேஎன்1 (Samsung JN1) கிடைக்கிறது. 20X டிஜிட்டல் ஜூமிங், 4K வீடியோ ரெக்கார்டிங் கிடைக்கிறது. சியோமி ப்ரோபோகஸ் (Xiaomi ProFocus) உள்ளது.
இந்த போகஸ் மூலம் மோஷன் டிராக்கிங் (Motion Tracking), ஐ டிராக்கிங் (Eye Tracking) சப்போர்ட் கிடைக்கிறது. இந்த சியோமி 14 சிவி போனில் 32 எம்பி செல்பீ ஷூட்டர் உள்ளது. ஸ்லிம் பாடி இருப்பதால், 4700mAh பேட்டரி மட்டுமே கிடைக்கிறது. இந்த பேட்டரிக்கு 67W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் சியோமி ஐஸ்லூப் சிஸ்டம் (Xiaomi IceLoop System) சப்போர்ட் வருகிறது.
ஒட்டுமொத்த அல்ட்ரா பிரீமியம் பீச்சர்களை கொண்டிருப்பதால், இந்த சியோமி போனின் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் மார்கெட் விலை ரூ.42,999ஆக இருக்கிறது. இருப்பினும், அமேசான் தளத்தில் ரூ.37,489 பட்ஜெட்டில் வாங்கி கொள்ளலாம். இதுபோக பேங்க் டிஸ்கவுண்ட் மற்றும் எக்ஸ்சேஞ்ச் சலுகை கிடைக்கிறது. ரூ.5,510 விலை குறைப்பில் வாங்கலாம்.


Click it and Unblock the Notifications








