Home
Mobile

பிளிப்கார்ட் தீபாவளி ஆஃபர்.. 50எம்பி கேமரா.. 5000mAh பேட்டரி.. குறைந்த விலையில் Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?

பிளிப்கார்ட் தளத்தில் பிளிப்கார்ட் பிக் தீபாவளி சேல் (Flipkart Big Diwali sale) எனும் சிறப்பு விற்பனை நடைபெறுகிறது. இந்த சிறப்பு விற்பனையில் மிகவும் அதிகம் விவோ டி2எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனுக்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக டைமன்சிட்டி சிப்செட், 50எம்பி கேமரா, 5000mAh பேட்டரி உள்ளிட்ட அம்சங்களுடன் இந்த போன் வெளிவந்துள்ளது. இப்போது இந்த போனுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் அம்சங்களைப் பார்க்கலாம்.

தற்போது பிளிப்கார்ட் தளத்தில் விவோ டி2எக்ஸ் 5ஜி (vivo T2x 5G) ஸ்மார்ட்போனுக்கு விவோ டி2எக்ஸ் 5ஜி போனுக்கு 32 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ12,230 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் 5 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. எனவே இந்த போனை இன்னும் குறைந்த விலையில் வாங்கிவிட முடியும்.

பிளிப்கார்ட் தீபாவளி ஆஃபர்..குறைந்த விலையில் Vivo 5ஜி போன்..

விவோ டி2எக்ஸ் 5ஜி அம்சங்கள் (vivo T2x 5G specifications): 6.58-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே (Full HD+ IPS LCD Display) வசதியைக் கொண்டுள்ளது இந்த விவோ போன். மேலும் 2408 × 1080 பிக்சல்ஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே. பெரிய டிஸ்பிளே வசதி இதில் இருப்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி bokeh கேமரா சென்சார் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது விவோ டி2எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் அசத்தலான படங்களை எடுக்க முடியும். செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமரா கொண்டுள்ளது இந்த போன்.

மேலும் எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த போன். 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்டுள்ளது இந்த விவோ டி2எக்ஸ் 5ஜி மாடல். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இதில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த இந்த போனில் எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு உள்ளது. அதேபோல் இந்த போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது

சக்திவாய்ந்த மீடியாடெக் டைமன்சிட்டி 6020 (Dimensity 6020) சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது இந்த விவோ டி2எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் மாடல். மேம்பட்ட செயல்திறன் வழங்கும் இந்த மீடியாடெக் டைமன்சிட்டி 6020 சிப்செட். பின்பு ஆண்ட்ராய்டு 13 (Android 13) இயங்குதள வசதியுடன் இந்த விவோ டி2எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. பின்பு இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

5000mAh பேட்டரி வசதியுடன் வெளிவந்துள்ளது விவோ டி2எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன். எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் கொடுக்கும் இந்த போன். பின்பு 18 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி, கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த போன்.

அதேபோல் 5ஜி, டூயல்-பேண்ட் வைஃபை,புளூடூத், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த விவோ டி2எக்ஸ் 5ஜி போன். இந்த ஸ்மார்ட்போனின் எடை 184 கிராம் ஆகும். அனைத்து சிறப்பான அம்சங்களுடன் இந்த போன் குறைந்த விலையில் கிடைப்பதால் நம்பி வாங்கலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
32 Percent Discount on vivo T2x 5G with 6GB Ram in Flipkart Sale Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X