தூக்குங்கடா அந்த தங்கத்த.. ரூ.17999 பட்ஜெட்ல OIS கேமரா.. AMOLED டிஸ்பிளே.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
அமேசான் விற்பனையில் (Amazon Sale) சாம்சங் பிரியர்கள் அடிச்சு புடிச்சு ஆர்டர் போடும்படியான பட்ஜெட் மற்றும் கூப்பன் டிஸ்கவுண்ட்டில் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் டெக்னாலஜி கொண்ட கேமரா, 1000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொண்ட சூப்பர் அமோலெட் டிஸ்பிளே, 45W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5000mAh போன்ற பீச்சர்களை பேக் செய்துள்ள சாம்சங் கேலக்ஸி எம்55எஸ் 5ஜி (Samsung Galaxy M55s 5G) போன் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த சாம்சங் போனின் பீச்சர்கள், டிஸ்கவுண்ட் விவரங்களை பார்க்கலாம்.
இந்த போனானது, மற்ற சாம்சங் மாடல்களை போலல்லாமல், டிசைனில் பட்டையை கிளப்புகிறது. டூயல் டோன் பேனல் மற்றும் டிரிபிள் ரியர் கேமரா சிஸ்டம் (Triple Rear Camera System) உடன் அல்ட்ரா பிரீமியம் லுக் கொடுக்கிறது. இந்த டிசைன் மட்டுமல்லாமல், பீச்சர்களிலும் தூக்கி சாப்பிட்டுள்ளது. முதலில் இந்த போனின் பீச்சர்களை பார்த்து விடுவோம்.

சாம்சங் கேலக்ஸி எம்55எஸ் 5ஜி அம்சங்கள் (Samsung Galaxy M55s 5G Specifications): இந்த சாம்சங் போனில் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (Optical Image Stabilization) மற்றும் விடிஐஎஸ் (VDIS) கொண்ட 50 எம்பி மெயின் கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2 எம்பி மேக்ரோ கேமரா வருகிறது. 50 எம்பி செல்பீ ஷூட்டர் உள்ளது.
4 ஜெனரேஷன் ஓஎஸ் அப்டேட் மற்றும் 5 வருடங்களுக்கான செக்யூரிட்டி அப்டேட்களுடன் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) வருகிறது. சாம்சங் நிறுவனத்தின் ஒன் யுஐ 6 (One UI 6) கொண்ட குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 1 4என்எம் (Qualcomm Snapdragon 7 Gen 1 4nm) சிப்செட் மற்றும் அட்ரினோ 644 ஜிபியு (Adreno 644 GPU) வருகிறது.
இந்த சாம்சங் கேலக்ஸி எம்55எஸ் 5ஜி போனில் 2 வேரியண்ட்கள் விற்பனைக்கு கிடைக்கின்றன. 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடல்களை ஆர்டர் செய்து கொள்ளலாம். இந்த மெமரி மட்டுமல்லாமல், கூடுதலாக 1 டிபிக்கான மைக்ரோ எஸ்டி கார்டு சிலாட் (micro SD Card Slot) பயன்படுத்தலாம்.
டிஸ்பிளேவும் பட்டையை கிளப்புகிறது. 6.7 இன்ச் (1080 × 2400 பிக்சல்கள்) ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) சூப்பர் அமோலெட் பிளஸ் (Super AMOLED Plus) டிஸ்பிளே வருகிறது. இதுவொரு 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 1000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொண்ட இன்பினிட்டி-ஓ டிஸ்பிளே (Infinity-O Display) மாடலாகும். ஆகவே, அவுட்புட் பிரீமியமாக இருக்கும்.
இந்த சாம்சங் போனில் 5000mAh பேட்டரி மற்றும் 45W ஃபாஸ்ட் சார்ஜிங் வருகிறது. இன்-டிஸ்பிளே ஃபிங்கர்ஃபிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor), டைப்-சி ஆடியோ (Type-C Audio) மற்றும் டால்பி அட்மோஸ் (Dolby Atmos) சப்போர்ட் வருகிறது. தண்டர் பிளாக் (Thunder Black) மற்றும் கோரல் கிரீன் (Coral Green) கலர்களில் கிடைக்கிறது.
இந்த போனின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மாடலின் விலை ரூ.19,999 ஆகவும், 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.22,999ஆகவும் இருக்கிறது. இப்போது, அமேசான் விற்பனையில் ரூ.2000 கூப்பன் டிஸ்கவுண்ட் உடன் விற்பனைக்கு வந்துள்ளது. அதேபோல ரூ.18,850 மதிப்பில் எக்ஸ்சேஞ்ச் போனஸ் கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications