இவ்ளோ தள்ளுபடியா? முழுசா ரூ.8000 குறைப்பு! ரூ.15000 பட்ஜெட்டில் சாம்சங் 5G போன்! எந்த மாடல்?
பிளிப்கார்ட் (Flipkart) தளத்தில் சாம்சங் கேலக்ஸி எம் 33 5ஜி (Samsung Galaxy M33 5G) போனுக்கு முழுசா ரூ.8000 தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லால், பேங்க் ஆஃபர் மற்றும் ஸ்பெஷல் டிஸ்கவுண்ட் கொடுக்கப்படுகிறது. இதுகுறித்த முழு விவரங்களை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
சாம்சங் கேலக்ஸி எம் 33 5ஜி அம்சங்கள் (Samsung Galaxy M33 Specifications): இந்த சாம்சங் போன் 6.6 இன்ச் (1080x2400 பிக்சல்கள்) ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) டிஸ்பிளே கொண்டுள்ளது. இந்த டிஸ்பிளேவில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் வருகிறது. கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 (Corning Gorilla Glass 5) பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ் (Android 12) உடன் ஆக்டா-கோர் எக்ஸினோஸ் 1280 (Octa-Core Exynos 1280) சிப்செட் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த போன் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் என்று இரண்டு வேரியண்ட்களில் விற்பனைக்கு வருகிறது. 1 டிபி வரையில் மைக்ரோஎஸ்டி (microSD) சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.
குவாட் ரியர் கேமரா செட்டப் கொண்டுள்ளது. 50 எம்பி மெயின் (Main) கேமரா + 5 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் (Ultra-Wide-Angle) கேமரா + 2 எம்பி டெப்த் சென்சார் (Depth Sensor) + 2 எம்பி மேக்ரோ சென்சார் (Macro Sensor) கொடுக்கப்பட்டுள்ளது. 20 எம்பி செல்பீ கேமரா வருகிறது.
இந்த சாம்சங் கேலக்ஸி எம் 33 5ஜி போன் 25W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்ட 6000mAh பேட்டரி கொண்டுள்ளது. டீப் ஓஷன் ப்ளூ ( Deep Ocean Blue), மிஸ்டிக் கிரீன் ( Mystique Green) மற்றும் எமரால்டு பிரவுன் (Emerald Brown) ஆகிய நிறங்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.
இதுவொரு மிட்-ரேன்ஞ் விலை போன் என்பதால், முதலில் ரூ.24,999 பட்ஜெட்டில் விற்பனைக்கு வந்தது. இதையடுத்து அதிரடியாக விலை குறைக்கப்பட்டு, ரூ.18,499 ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்த விலையில் 32 சதவீத தள்ளுபடியை பிளிப்கார்ட் (Flipkart) அறிவித்துள்ளது. அதுபோக ரூ.663 எக்ஸ்ட்ரா ஸ்பெஷல் டிஸ்கவுண்ட் மற்றும் பேங்க் ஆஃபர்கள் ஏராளமாக உள்ளது.
அதாவது, ரூ.24,999 விலையில் இருந்து 32 சதவீதம் ஆஃபர் போக ரூ.16,885க்கு விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலையில் ரூ.663 எக்ஸ்ட்ரா டிஸ்கவுண்ட் மற்றும் ஆக்சிஸ் பேங்க் கிரெடிட் கார்டுக்கு ரூ.750 தள்ளுபடி கிடைக்கிறது. அதேபோல எச்டிஎஃப்சி பேங்க் கிரெடிட் கார்டுக்கு ரூ.1,250 தள்ளுபடி கிடைக்கிறது. இந்த தள்ளுபடி எல்லாம் பெற்றால், சாம்சங் கேலக்ஸி எம் 33 போன் ரூ.15 பட்ஜெட்டில் கிடைக்கும்.
ஒரு சாம்சங் நிறுவனத்தின் 5ஜி போனுக்கு, இவ்வளவு தள்ளுபடி கிடைப்பது அந்த ஸ்மார்ட்போன் பிரியர்களை குஷிப்படுத்தி இருக்கிறது. மேலும், தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications








