Home
Mobile

இதுபோதுமே.. ஆர்டர் பிச்சிக்குது.. முழுசா ரூ.8000 தள்ளுபடி.. 50MP கேமரா.. 6000mAh பேட்டரி.. சாம்சங் போனாச்சே!

முழுதாக 32 சதவீத தள்ளுபடி உடன் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட டிஸ்பிளே, குவாட் கேமரா, 25W ஃபாஸ்ட் சார்ஜிங், 6000mAh பேட்டரி போன்ற அட்டகாசமான அம்சங்களுடன் சாம்சங் கேலக்ஸி எம்33 (Samsung Galaxy M33) போன் பிளிப்கார்ட்டில் (Flipkart) கிடைக்கிறது.

நம்மில் பலர் அமேசான், பிளிப்கார்ட் போன்ற தளங்களில் பாதிக்குப்பாதி தள்ளுபடி கிடைக்கும் வரை கொக்குபோல காத்திருந்து போன்களை வாங்க திட்டம் போட்டிருப்போம். அவர்களுக்கான நேரம் இப்போது, வந்துவிட்டது. 32 சதவீத தள்ளுபடி மட்டுமல்லாமல், பேங்க் ஆஃபர்களுடன் சாம்சங் கேலக்ஸி எம்33 போன் விற்பனை செய்யப்பட்டுவருகிறது. எவ்வளவு தள்ளுபடி கிடைக்கிறது? அந்த போனின் முழு அம்சங்கள் என்ன? உள்ளிட்ட விவரம் பின்வருமாறு.

முழுசா ரூ.8000 தள்ளுபடி! 50MP கேமரா.. 6000mAh பேட்டரி.. சாம்சங் மாடல்!

சாம்சங் கேலக்ஸி எம்33 அம்சங்கள் (Samsung Galaxy M33 Specifications): இந்த சாம்சங் போன் 6.6 இன்ச் (1080x2400 பிக்சல்கள்) ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) டிஸ்பிளே கொண்டிருக்கிறது. இந்த டிஸ்பிளேவில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 240Hz டச் சாம்ப்ளிங் ரேட் வருகிறது. மொத்தமாக டிஸ்பிளேவுக்கு கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 (Corning Gorilla Glass 5) பாதுகாப்பு உள்ளது.

ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ் (Android 12) கொண்ட சாம்சங் ஓன் யுஐ 4.1 (Samsung One UI 4.1) உடன் ஆக்டா-கோர் எக்ஸினோஸ் 1280 (Octa-Core Exynos 1280) சிப்செட் கொடுக்கப்பட்டுள்ளது. அதோடு மாலி ஜி68 ஜிபியு (Mali-G68 GPU) கிராபிக்ஸ் கார்டு வழங்கப்பட்டுள்ளது.

இந்த சாம்சங் கேலக்ஸி போன் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி என்று இரண்டு வேரியண்ட்களில் விற்பனைக்கு வருகிறது. அதோடு 1 டிபி வரை மைக்ரோஎஸ்டி (microSD) கார்டு சப்போர்ட் உள்ளது.

குவாட் (Quad) ரியர் கேமரா செட்டப் கொண்ட 50 எம்பி மெயின் (Main) கேமரா + 5 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் (Ultra-Wide-Angle) கேமரா + 2 எம்பி டெப்த் சென்சார் (Depth Sensor) + 2 எம்பி மேக்ரோ சென்சார் (Macro Sensor) கொடுக்கப்பட்டிருக்கிறது. 20 எம்பி செல்பீ கேமரா வருகிறது.

இந்த போனில் பிரம்மாண்ட அம்சமாக 25W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்ட 6000mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பேட்டரி தொடர்ந்து 4 நாட்களுக்கு பேக்கப் கொடுக்கும். இந்த சாம்சங் கேலக்ஸி எம் 33 போன் எமரால்டு பிரவுன் (Emerald Brown), மிஸ்டிக் கிரீன் ( Mystique Green) மற்றும் டீப் ஓஷன் ப்ளூ ( Deep Ocean Blue) ஆகிய கலர்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.

இந்த போன் முதலில் ரூ.24,999 விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. அதன்பின் விலையில் மாற்றம் செய்யப்பட்டு ரூ. 18,499 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. இந்த விலையில், 32 சதவீத தள்ளுபடியை பிளிப்கார்ட் (Flipkart) கொடுத்து வருகிறது. அதுமட்டுமல்லாமல், வங்கிகள் வழங்கும் தள்ளுபடியும் இருக்கிறது.

இந்த 32 சதவீதம் ஆஃபர் போக மீதமுள்ள ரூ.16,990 விலைக்கு சாம்சங் போனை வாங்க முடியும். இந்த விலையில், எச்டிஎஃப்சி பேங்க் கிரெடிட் கார்டுக்கு ரூ.1,250 தள்ளுபடி வழங்கப்படுகிறது. அதோடு ஆக்சிஸ் பேங்க் கார்டுகளுக்கு 5 சதவீதம் கேஸ்பேக் கொடுக்கப்படுகிறது. கம்மி பட்ஜெட்டில் சாம்சங் போன் வாங்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இந்த போன் நல்ல சாய்ஸாக இருக்கும்.

அதோடு நல்ல பேட்டரி பேக்கப் கிடைப்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும், தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

More from GizBot

Best Mobiles in India

English summary
32 Percent Discount on Samsung Galaxy M33 5G in Flipkart Price Specifications Offer Details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X