மட்ட ரேட்ல SAMSUNG.. ரூ.9,499 பட்ஜெட்ல 5G போன்.. 4 OS அப்கிரேட்.. 50MP கேமரா.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
அமேசான் தளத்தில் அடிமட்ட விலைக்கு சாம்சங் கேலக்ஸி எம்06 5ஜி (Samsung Galaxy M06 5G) ஸ்மார்ட்போன் கிடைக்கிறது. இப்போது, விலை குறைப்பு போக கம்மியான விலைக்கு வாங்கி கொள்ளலாம். 50 எம்பி கேமரா, 25W ஃபாஸ்ட் சார்ஜிங், 5000mAh பேட்டரி போன்ற பீச்சர்களை கொடுக்கிறது. மீடியாடெக் டைமன்சிட்டி 6300 சிப்செட் கொண்ட இந்த கேலக்ஸி எம்06 5ஜி ஸ்மார்ட்போனின் முழு விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
ரூ.10,000 பட்ஜெட்டைவிட கம்மியான விலைக்கு 4 ஜெனரேஷன் ஓஎஸ் அப்டேட்கள் மட்டுமல்லாமல், 4 வருடங்களுக்கான செக்யூரிட்டி அப்டேட்களுடன் இந்த சாம்சங் கேலக்ஸி எம்06 5ஜி ஸ்மார்ட்போன் வெளியாகியது. இதுவே கம்மியான பட்ஜெட்டாக இருப்பதால், சாம்சங்கள் பிரியர்கள் மட்டுமல்லாமல், பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் பிரியர்களையும் தட்டித்தூக்கியது.

இப்போது, அமேசான் தளத்தில் விலை குறைப்பில் வாங்க கிடைப்பதால், விற்பனை மேலும் சூடுபிடித்துள்ளது. அதாவது, மார்கெட் விலையை பார்க்கையில், 4 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட்டின் விலை ரூ.9,999ஆகவும், 6 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட்டின் விலை ரூ.11,499ஆகவும் இருக்கிறது. இதில் விலை குறைப்பு போக வாங்க கிடைக்கிறது.
ஆகவே, 4 ஜிபி ரேம் வேரியண்ட்டின் விலை ரூ.9,499ஆகவும், 6 ஜிபி ரேம் வேரியண்ட்டின் விலை ரூ.10,999ஆகவும் இருக்கிறது. இந்த விலை குறைப்பு போக குறிப்பிட்ட பேங்க் கார்டுகளுக்கு டிஸ்கவுண்ட் கொடுக்கப்படுகிறது. அதேபோல ரூ.10,350 மதிப்பில் எக்ஸ்சேஞ்ச் சலுகையை கஸ்டமர்கள் பெற்று கொள்ளலாம். பீச்சர்களும் பட்ஜெட்டைவிட கூடுதலாக இருக்கின்றன.
சாம்சங் கேலக்ஸி எம்06 5ஜி அம்சங்கள் (Samsung Galaxy M06 5G Specifications): இந்த கேலக்ஸி ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) கிடைக்கிறது. ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 6என்எம் (Octa Core MediaTek Dimensity 6300 6nm) சிப்செட் மற்றும் மாலி ஜி57 ஜிபியு (Mali G57 GPU) கிராபிக்ஸ் கார்டு பேக் செய்துள்ளது. பட்ஜெட் மாடல் யுஐ கிடைக்கிறது.
ஆகவே, சாம்சங் நிறுவனத்தின் ஒன் யுஐ 7 (One UI 7) பெற்று கொள்ளலாம். இந்த சாம்சங் கேலக்ஸி எம்06 5ஜி ஸ்மார்ட்போனில் 6.7 இன்ச் (720 x 1600 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த பிஎல்எஸ் மாடலில் எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன் மற்றும் 800 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. மேலும், 90Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 16 மில்லியன் கலர் டெப்த் வருகிறது.
ரூ.10,000 பட்ஜெட்டில் கிடைத்தாலும், ஃபுல்எச்டி (FHD) வீடியோ ரெக்கார்டிங் கொண் 50 எம்பி மெயின் கேமரா கிடைக்கிறது. இந்த கேமராவுக்கு 2 எம்பி டெப்த் கேமரா சப்போர்ட் மற்றும் 10X டிஜிட்டல் ஜூமிங் (Digital Zooming) கொடுக்கப்பட்டு இருக்கிறது. 8 எம்பி செல்பீ கேமராவை கொடுக்கிறது. ஆகவே, பட்ஜெட்டிலும் மிட்-ரேஞ்ச் கேமரா அவுட்புட் எதிர்பார்க்கலாம்.
25W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5000mAh பேட்டரி மற்றும் டைப்-சி சார்ஜிங் போர்ட் கொண்ட மாடலாக இருக்கிறது. ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் கிடையாது, பாட்டம் போர்டெட் ஸ்பீக்கர் (Bottom Ported Speaker) மட்டுமே கிடைக்கிறது. அதேபோல சைடு-பிங்கர்பிரிண்ட் உள்ளது. இந்த மாடலில் பிளேசிங் பிளாக் (Blazing Black) மற்றும் சேஜ் கிரீன் (Sage Green) ஆகிய கலர்கள் ஆர்டருக்கு கிடைக்கின்றன.


Click it and Unblock the Notifications








