ஆர்டருக்கு மேல ஆர்டர்.. வெறும் ரூ.18000 பட்ஜெட்ல AMOLED டிஸ்பிளே.. 50MP கேமரா.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
ரூ.20000 பட்ஜெட்டில் வேகன் லெதர் பேனலுடன் மிட்-ரேஞ்ச் பீச்சர்களுடன் கூடிய சாம்சங் போன் வேண்டுமானால், பட்டையை கிளப்பும் டிஸ்கவுண்ட்டில் விற்பனைக்கு வந்திருக்கும் சாம்சங் கேலக்ஸி எப்55 5ஜி (Samsung Galaxy F55 5G) போன் பக்கா தேர்வாக இருக்கும். அமேசான் விற்பனையில் (Amazon Sale) இந்த சாம்சங் கேலக்ஸி எப்55 5ஜி போனுக்கு கிடைக்கும் டிஸ்கவுண்ட் மற்றும் எக்ஸ்சேஞ்ச் விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
சாம்சங் கேலக்ஸி எப்55 5ஜி அமேசான் சேல் (Samsung Galaxy F55 5G Amazon Sale): இந்த சாம்சங் போனின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.26,999ஆக இருந்தது. இப்போது, அமேசான் விற்பனையில் ரூ.19,748 பட்ஜெட்டில் ஆர்டருக்கு வந்துள்ளது. இந்த கம்மி விலையிலும் ரூ.1483 மதிப்பில் உடனடி டிஸ்கவுண்ட் கிடைக்கிறது.

பேங்க் ஆப் பரோடா கிரெடிட் கார்டுக்கு இந்த டிஸ்கவுண்ட் கொடுக்கப்படுகிறது. இதுபோக ரூ.18,750 மதிப்பில் எக்ஸ்சேஞ்ச் போனஸ் கிடைக்கிறது. ஆகவே, சாம்சங் கேலக்ஸி எப்55 5ஜி போனை வெறும் ரூ.18,790 பட்ஜெட்டில் ஆர்டர் செய்து கொள்ளலாம். ஒன்கார்டு மூலம் ஈஎம்ஐ ஆப்ஷனில் வாங்கினால் ரூ.1,250 மதிப்பில் உடனடி டிஸ்கவுண்ட் கிடைக்கிறது.
சாம்சங் கேலக்ஸி எப்55 5ஜி அம்சங்கள் (Samsung Galaxy F55 5G Specifications): டிஸ்பிளே, சிப்செட், பேட்டரி மற்றும் கேமரா மட்டுமல்லாமல் வேகன் லெதர் டிசைனிலும் இந்த போன் மிட்-பிரீமியமாக இருக்கிறது. 7.8 மிமீ அல்ட்ரா ஸ்லிம் பாடியில் வேகன் லெதர் பேனலுடன் அப்ரிகட் கிரஸ் (Apricot Crush) மற்றும் ரேசியன் பிளாக் (Raisin Black) கலர்களில் கிடைக்கிறது.
வெறும் 180 கிராம் எடை உள்ளது. 50 எம்பி மெயின் கேமரா + 5 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2 எம்பி டெப்த் சென்சாருடன் டிரிபிள் ரியர் கேமரா சிஸ்டம் (Triple Rear Camera System) வருகிறது. பஞ்ச்-ஹோல் டிசைனில் 50 எம்பி செல்பீ ஷூட்டர் கிடைக்கிறது. ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் டெக்னாலஜி (Optical Image Stabilizyion Technology) கிடைக்கிறது.
ஆட்டோ போகஸ் (Auto Focus), 10x டிஜிட்டல் ஜூமிங் மற்றும் 4K வீடியோ ரெக்கார்டிங் இருக்கிறது. இந்த சாம்சங் போனில் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மட்டுமல்லாமல், 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டும் ஆர்டருக்கு வருகிறது. ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 1 4என்எம் (Octa Core Snapdragon 7 Gen 1 4nm) ப்ராசஸர் வருகிறது.
இந்த சிப்செட்டுக்கு ஏற்ப அட்ரினோ 644 ஜிபியு (Adreno 644 GPU) கிராபிக்ஸ் சப்போர்ட் இருக்கிறது. சாம்சங் நிறுவனத்தின் சாம்சங் ஒன் யுஐ 6.1 (Samsung One UI 6.1) பேஸ்டு ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) பயன்படுத்த கிடைக்கிறது. இந்த 4 ஜெனரேஷன் ஓஎஸ் அப்கிரேட் கிடைக்கும். ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷனுடன் 6.7 இன்ச் டிஸ்பிளே உள்ளது.
இந்த அமோலெட் பிளஸ் (Super AMOLED Plus) டிஸ்பிளே மாடலில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 1000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது. இந்த போனில் IP67 டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் உள்ளது. டைப்-சி போர்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5000mAh பேட்டரி வருகிறது. இந்த பேட்டரிக்கு 45W ஃபாஸ்ட் சார்ஜிங் பேக் செய்யப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications