Home
Mobile

பிளிப்கார்ட்டில் அள்ளுங்க.. ரூ.10,749 பட்ஜெட்ல 50எம்பி கேமரா.. AMOLED டிஸ்பிளே.. 128ஜிபி மெமரி.. எந்த மாடல்?

பிளிப்கார்ட் தளத்தில் சாம்சங் கேலக்ஸி எப்16 5ஜி (Samsung Galaxy F16 5G) ஸ்மார்ட்போன் ஆனது தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் 6 ஜெனரேஷன் ஓஎஸ் அப்டேட்கள், 50எம்பி கேமரா, டைமன்சிட்டி சிப்செட் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. இப்போது இந்த போனுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் இதன் சிறப்பு அம்சங்களைப் பார்க்கலாம்.

பிளிப்கார்ட் தளத்தில் 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி வசதி கொண்ட சாம்சங் கேலக்ஸி எப்16 5ஜி ஸ்மார்ட்போனுக்கு 32 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.10.749 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் 5 சதவீதம் கேஷ்பேக் சலுகையும் உள்ளது. எனவே இந்த போனை குறைந்த விலையில் வாங்கிவிட முடியும்.

பிளிப்கார்ட்டில் அள்ளுங்க.. ரூ.10,749 பட்ஜெட்ல 50எம்பி கேமரா..

சாம்சங் கேலக்ஸி எப்16 5ஜி அம்சங்கள் (Samsung Galaxy F16 5G Specifications): 6.7 இன்ச் ஃபுல் எச்டி பிளஸ்சூப்பர் அமோலெட் டிஸ்பிளே (Super AMOLED) டிஸ்பிளே வசதியுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 1080 x 2340 பிக்சல்கள், 16 மில்லியன் கலர் டெப்த் , 90Hz ரெஃப்ரெஷ் ரேட் உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன.

ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 எஸ்ஓசி (Octa Core MediaTek Dimensity 6300 SoC) சிப்செட் உடன் சாம்சங் கேலக்ஸி எப்16 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. இந்த சிப்செட் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) மூலம் இந்த போன் இயங்குகிறது. ஆனாலும் 6 ஜெனரேஷன் ஓஎஸ் அப்டேட்கள் மற்றும் செக்யூரிட்டி அப்டேட்கள் இந்த போனுக்கு கிடைக்கும்.

50 எம்பி மெயின் கேமரா + 5 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2 எம்பி மேக்ரோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமராக்கள் உடன் சாம்சங் கேலக்ஸி எப்16 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 13எம்பி கேமரா இதில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி வசதியுடன் சாம்சங் கேலக்ஸி எப்16 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த சாம்சங் போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

5000mAh பேட்டரி வசதியுடன் சாம்சங் கேலக்ஸி எப்16 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 25W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் இந்த போனில் உள்ளது. ப்ளூடூத் வி5.3 (Bluetooth v5.3), வை-பை 802 (Wi-Fi 802), என்எப்சி (NFC), ஜிபிஎஸ் (GPS) மற்றும் குளோனஸ் (Glonass) போன்ற கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன.

பிளிங் பிளாக் (Bling Black), கிளம் கிரீன் (Glam Green) மற்றும் வைபிங் ப்ளூ (Vibing Blue) ஆகிய நிறங்களில் இந்த போன் வாங்க கிடைக்கும். மேலும் இந்த ஸ்மார்ட்போனின் எடை 191 கிராம் ஆகும். அனைத்து சிறப்பான அம்சங்களுடன் இந்த போன் கம்மி விலையில் கிடைப்பதால் நம்பி வாங்கலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
32 Percent Discount on Samsung Galaxy F16 5G in Flipkart sale check specification, price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X