வெளுத்து கட்டுது ஆர்டர்.. ரூ.12,000 பட்ஜெட்ல 108MP கேமரா.. 5030mAh பேட்டரி.. 33W பாஸ்ட் சார்ஜிங்.. எந்த மாடல்?
ரெட்மி பிரியர்களுக்கு அடிமட்ட விலையில் 108 எம்பி மெயின் கேமரா கொண்ட மாடலாக ரெட்மி 13 5ஜி (Redmi 13 5G) வெளியாகியது. இப்போது, பிளிப்கார்ட் (Flipkart) விற்பனையில் மிரளவிடும் டிஸ்கவுண்ட்டில் ஆர்டருக்கு கிடைக்கிறது. 108 எம்பி கேமரா மட்டுமல்லாமல், 33W ஃபாஸ்ட் சார்ஜிங், 5030mAh பேட்டரி, கார்னிங் கொரில்லா கிளாஸ் புரொடெக்டன் டிஸ்பிளே, சாம்சங் ஐசோசெல் சென்சார், இன்பிராரெட் சென்சார் போன்ற ஒட்டுமொத்த பீச்சர்களிலும் பின்னிப்பெடல் எடுத்துள்ளது. இந்த ரெட்மி போனின் பீச்சர்கள், விலை மற்றும் டிஸ்கவுண்ட் விவரங்கள் இதோ.
தீபாவளி பண்டிகை முடிந்தும், பல ஸ்மார்ட்போன்களுக்கு பட்டையை கிளப்பும் தள்ளுபடியை பிளிப்கார்ட் கொடுக்கிறது. இதில் ரூ.13,999 பட்ஜெட்டில் வெளியான ரெட்மி 13 5ஜி போனுக்கு எந்தவொரு பேங்க் கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டுகளும் இல்லாமலேயே விலை குறைக்கு செய்யப்பட்டிருக்கிறது. முதலில் இந்த போனின் பீச்சர்களை பார்த்துவிடுவோம்.

ரெட்மி 13 5ஜி அம்சங்கள் (Redmi 13 5G Specifications): பிரீமியம் லுக் கொடுக்கும் கிரிஸ்டல் கிளாஸ் டிசைன் (Crystal Glass Design) மற்றும் டூயல்-சைடுடெட் கிளாஸ் (Dual-sided Glass) பாடி கொண்டுள்ளது. ரிங் ஃபிளாஷ் (Ring Flash) கொண்ட டூயல் ரியர் கேமரா சிஸ்டம் (Dual Rear Camera System) கிடைக்கிறது. 108 எம்பி மெயி்ன் கேமராவில் சாம்சங் ஐசோசெல் எச்எம்6 (Samsung ISOCELL HM6) சென்சார் உள்ளது.
2 எம்பி மேக்ரோ கேமரா மற்றும் 13 எம்பி செல்பீ ஷூட்டர் கிடைக்கிறது. இந்த டூயல் கேமராவில் ஃபிலிம் ஃபில்டர்கள், எச்டிஆர் மோட் மற்றும் ஆட்டோ நைட் மோட் கிடைக்கிறது. அமோலெட் டிஸ்பிளே கிடையாது. இருப்பினும், இந்த ரெட்மி போனில் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 (Corning Gorilla Glass 3) புரொடெக்சனுடன் எல்சிடி (LCD) டிஸ்பிளே கிடைக்கிறது.
ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷனுடன் 6.79 இன்ச் (2460 x 1080 பிக்சல்கள்) பேனல் வருகிறது. மேலும், 120Hz அடாப்டிவ் சிங்க் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 550 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. ரெட்மி நிறுவனத்தின் ஹைபர்ஓஎஸ் (Hyper OS) பேஸ்டு ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) மற்றும் அட்ரினோ 613 ஜிபியு (Adreno 613 GPU) கிராபிக்ஸ் கார்டு கிடைக்கிறது.

இந்த ரெட்மி 13 5ஜி போனில் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 4 ஜென் 2 ஏஇ 4என்எம் (Octa Core Snapdragon 4 Gen 2 AE 4nm) சிப்செட் கிடைக்கிறது. 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட 2 மாடல்கள் ஆர்டருக்கு கிடைக்கின்றன. 8 ஜிபி விர்ச்சுவல் ரேம் சப்போர்ட் வருகிறது. அதேபோல 1 டிபி எஸ்டிகார்டு சிலாட் கிடைக்கிறது.
பட்ஜெட் மாடலாக இருந்தும், 33W ஃபாஸ்ட் சார்ஜிங் மட்டுமல்லாமல், 5030mAh பேட்டரி பேக் செய்துள்ளது. இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிண்ட் கிடையாது. இருப்பினும், சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சாருடன் (Side-mounted Fingerprint Sensor), இன்பிராரெட் சென்சாரும் (Infrared Sensor) கிடைக்கிறது. பிளாக் டயமெண்ட் (Black Diamond) கலர் உள்ளது.
மேலும், ஹாவாயன் ப்ளூ (Hawaiian Blue) மற்றும் மூன்ஸ்டோன் சில்வர் (Moonstone Silver) கலர்களும் உள்ளது. 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.13,999 ஆக இருந்தது. ஆனால், பிளிப்கார்ட் விற்பனையில் ரூ.12,100 பட்ஜெட்டில் இப்போது கிடைக்கிறது. இதற்கு டெபிட் அல்லது கிரெடிட் கார்டுகள் தேவையில்லை. பிளாக வேரியண்ட்டுக்கு இந்த டிஸ்கவுண்ட் வருகிறது.


Click it and Unblock the Notifications








