Home
Mobile

பொசுக்குனு டிஸ்கவுண்ட்.. ரூ.15,999 பட்ஜெட்ல 3D டிஸ்பிளே.. SONY கேமரா.. 5500mAh பேட்டரி.. எந்த மாடல்?

பிளிப்கார்ட் விற்பனையில் 3டி கர்வ்ட் அமோலெட் டிஸ்பிளே, சோனி சென்சார் கேமரா, 5500mAh பேட்டரி, 45W சார்ஜிங் மற்றும் IP69 ரேட்டிங் போன்ற மிட்-ரேஞ்ச் பீச்சர்களுடன் வெளியான போக்கோ எக்ஸ்7 5ஜி (POCO X7 5G) போனுக்கு நேரடியாக ரூ.5,000 விலை குறைப்பு கிடைக்கிறது.

போகோ எக்ஸ்7 5ஜி பிளிப்கார்ட் விற்பனை (POCO X7 5G Flipkart Sale): இந்த போகோ போனின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் மார்கெட் விலை ரூ.21,999ஆகவும், 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் மார்கெட் விலை ரூ.23,999ஆகவும் இருக்கிறது. இப்போது, பிளிப்கார்ட் விற்பனையில் 128 ஜிபி வேரியண்ட் ரூ.16,999 பட்ஜெட்டில் கிடைக்கிறது.

பொசுக்குனு டிஸ்கவுண்ட்.. ரூ.15,999 பட்ஜெட்ல 3D டிஸ்பிளே.. SONY கேமரா!

ஆகவே, ரூ.5,000 விலை குறைப்பில் வாங்கி கொள்ளலாம். இதுபோக எஸ்பிஐ, எச்டிஎப்சி, ஆக்சிஸ், ஐசிஐசிஐ போன்ற பேங்குகளின் கிரெடிட் கார்டு மூலம் ஆர்டர் செய்தால், ரூ.1000 உடனடி டிஸ்கவுண்ட் பெற்று கொள்ளலாம். ஆகவே, ரூ.15,999 பட்ஜெட்டில் இந்த போக்கோ எக்ஸ்7 5ஜி போனை வாங்கி கொள்ளலாம். இதேபோல ரூ.23,999 மார்கெட் விலை கொண்ட 256 ஜிபி ரேம் மாடலுக்கும் விலை குறைப்பு கிடைக்கிறது.

இப்போது, ஆர்டர் செய்தால் ரூ.18,999 பட்ஜெட்டில் அதை வாங்கி கொள்ளலாம். அதேபோல ரூ.1000 பேங்க் டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. ஆகவே, இந்த மாடலை ரூ.17,999 பட்ஜெட்டில் வாங்கி கொள்ளலாம். ஈஎம்ஐ ஆப்ஷனில் ஆர்டர் செய்தாலும் ரூ.1000 டிஸ்கவுண்ட் கிடைக்கும். இந்த பட்ஜெட்டுக்கு என்னென்ன பீச்சர்களை இந்த போகோ எக்ஸ்7 5ஜி போன் கொடுக்கிறது என்பதை தெரிந்து கொள்ளலாம்.

போகோ எக்ஸ்7 5ஜி அம்சங்கள் (POCO X7 5G Specifications): இந்த போகோவில் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) கொண்ட 4என்எம் ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7300 அல்ட்ரா (4nm Octa Core MediaTek Dimensity 7300 Ultra) சிப்செட் கிடைக்கிறது. சியோமி ஹைப்பர் ஓஎஸ் (Xiaomi Hyper OS) மற்றும் மிட்-ரேஞ்ச் மாடல்களில் கிடைக்கும் மாலி ஜி615 ஜிபியு (Mali G615 GPU) கிராபிக்ஸ் கார்டு உள்ளது.

சோனி எல்ஒய்டி 600 (Sony LYT 600) சென்சார், ஓஐஎஸ் டெக்னாலஜி (OIS Technology) மற்றும் 4K வீடியோ ரெக்கார்டிங் சப்போர்ட் கொண்ட 50 எம்பி மெயின் கேமரா வருகிறது. இந்த கேமராவுக்கு 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா + 2 எம்பி மேக்ரோ கேமரா கொண்ட செகண்டரி சிஸ்டம் உள்ளது. மோஷன் டிராக்கிங், டூயல் வீடியோ போன்ற பீச்சர்கள் வருகின்றன. 20 எம்பி செல்பீ கேமரா கிடைக்கிறது.

போக்கோ எல்லோ (POCO Yellow) கலர் உள்ளது. காஸ்மிக் சில்வர் (Cosmic Silver) அல்லது கிளாசியர் கிரீன் (Glacier Green) ஆப்ஷன்கள் இருக்கிறது. கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 (Corning Gorilla Glass Victus 2) புரொடெக்சன் மற்றும் 3டி கர்வ்ட் டிசைனில் டிஸ்பிளே கிடைக்கிறது. 1.5K ரெசொலூஷன் ரெசொலூஷன் கொண்ட 6.67 இன்ச் (2712× 1220 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) பேனல் கிடைக்கிறது.

மேலும், 3000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 1920Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி, 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 240Hz டச் சாம்பிளிங் ரேட் உள்ளது. வோல்டேஜ் பூஸ்டர் சிப் (Voltage Booster Chip), சேப் சார்ஜிங் கன்ட்ரோல் (Safe Charging Control) போன்ற பீச்சர்கள் கொண்ட 5500mAh பேட்டரி மற்றும் 45W ஃபாஸ்ட் சார்ஜிங் கிடைக்கிறது. IP69 ரேட்டிங் வாட்டர் ரெசிஸ்டன்ட் உள்ளது. இந்த பட்ஜெட்டுக்கு ஏற்ப பீச்சர்கள் உள்ளன.

அஃபிலியேட் லிங்க் வெளிப்படுத்துதல்: இந்த வலைத்தளத்தில் உள்ள அஃபிலியேட் லிங்க் மூலம் செய்யப்படும் கொள்முதல்களில் இருந்து கிஸ்பாட் வலைத்தளம் கமிஷன்களை சம்பாதிக்கிறது. தயாரிப்புகள் நேர்மையான கருத்துக்கள் மற்றும் தனிப்பட்ட அனுபவத்தின் அடிப்படையில் பரிந்துரைக்கப்படுகின்றன, உங்களுக்கு எந்த கூடுதல் செலவும் இல்லாமல்!

More from GizBot

Best Mobiles in India

English summary
32 Percent Discount on POCO X7 5G With 8GB RAM in Flipkart Sale Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X