இறுதி நேரத்தில் இறங்கி அடிக்கும் Flipkart.. 64எம்பி கேமரா.. 256ஜிபி மெமரி.. ஆஃபரில் போக்கோ 5ஜி போன்..
பிளிப்கார்ட் (flipkart) சிறப்பு விற்பனை நாளை நிறைவுபெறும். இந்நிலையில் மிகவும் அதிக எதிர்பார்க்கப்பட்ட போக்கோ எக்ஸ்6 5ஜி (Poco X6 5G) போனுக்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக 64எம்பி கேமரா, ஸ்னாப்டிராகன் சிப்செட், 256ஜிபி மெமரி உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் இந்த போன் வெளிவந்துள்ளது. இப்போது இந்த போக்கோ போனுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் அம்சங்களைப் பார்க்கலாம்.
பிளிப்கார்ட் சிறப்பு விற்பனையில் போக்கோ எக்ஸ்6 5ஜி போனுக்கு 32 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.16,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ.1250 தள்ளுபடியும் உள்ளது. எனவே இந்த போனை ரூ.15749 விலையில் வாங்கிவிட முடியும்.

போக்கோ எக்ஸ்6 5ஜி அம்சங்கள் (Poco X6 5G specifications): சக்திவாய்ந்த ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 2 சிப்செட்(Snapdragon 7s Gen 2 SoC) வசதியுடன் இந்த அசத்தலான போக்கோ எக்ஸ்6 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்னாப்டிராகன் சிப்செட் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். குறிப்பாக அனைத்து ஆப்ஸ்களையும் இந்த போனில் தடையின்றி பயன்படுத்தலாம்.
அதேபோல் 6.67-இன்ச் 1.5கே டிஸ்பிளேவை கொண்டுள்ளது போக்கோ எக்ஸ்6 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் 1220 x 2712 பிக்சல்ஸ், 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1,800 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ், டால்பி விஷன், 66 பில்லியன் பிளஸ் கலர்ஸ் உள்ளிட்ட தனித்துவமான டிஸ்பிளே அம்சங்களுடன் இந்த போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இதன் டிஸ்பிளே சிறந்த திரை அனுபவத்தை வழங்கும்.
குறிப்பாக ஆண்ட்ராய்டு 13 (Android 13) அடிப்படையிலான ஹைப்பர்ஓஎஸ் (HyperOS) மூலம் இந்த போன் இயங்குகிறது. ஆனாலும் இந்த போக்கோ ஸ்மார்ட்போனுக்கு மூன்று முக்கிய ஆண்ட்ராய்டு அப்டேட்கள் மற்றும் நான்கு வருட செக்யூரிட்டி அப்டேட்கள் கிடைக்கும் என்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. அதேபோல் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார்(in-display fingerprint sensor) வசதியும் இந்த போனில் உள்ளது.
64 மெகாபிக்சல் மெயின் கேமரா + 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட்-ஆங்கிள் கேமரா + 2 மெகாபிக்சல் மேக்ரோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் கொண்டுள்ளது இந்த போக்கோ எக்ஸ்6 5ஜி போன். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமரா இதில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இதில் உள்ளன.

மேலும் 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் வசதியைக் கொண்டுள்ளது இந்த போக்கோ எக்ஸ்6 5ஜி ஸ்மார்ட்போன் மாடல். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த போன் வெளிவந்துள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது. பின்பு இந்த போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.
இந்த போக்கோ எக்ஸ்6 5ஜி ஸ்மார்ட்போன் 5100mAh பேட்டரி உடன் வெளிவந்துள்ளது. எனவே இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 67W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. எனவே இந்த போனை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும். இதுதவிர பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இதில் உள்ளன.


Click it and Unblock the Notifications








