Home
Mobile

செம்ம டிமாண்ட்.. ரூ.16,000 பட்ஜெட்ல 7000mAh பேட்டரி.. 15W சார்ஜிங்.. 120Hz டிஸ்பிளே.. எந்த மாடல்?

இந்தியாவில் இருக்கும் ஒன்பிளஸ் பிரியர்களுக்கு லேட்டஸ்ட் மாடல்களில் பட்ஜெட்டில் கிடைக்கும் ஸ்மார்ட்போனாக ஒன்பிளஸ் 16 லைட் (OnePlus N6 Lite) மட்டுமே இருக்கிறது. இப்போது, அமேசான் தள்ளுபடியில் பட்டையை கிளப்பி வருகிறது. இந்த ஒன்பிளஸ் 16 லைட் ஸ்மார்ட்போனின் விலை, தள்ளுபடி மற்றும் பீச்சர்களை பார்க்கலாம்.

அமேசான் தளத்தில் 32 சதவீத தள்ளுபடி போக ரூ.16,999 விலைக்கு இந்த ஒன்பிளஸ் 16 லைட் ஸ்மார்ட்போன் கிடைக்கிறது. மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட கிரெடிட் கார்டுகளுக்கு ரூ.500 கேஷ் பேக் கிடைக்கிறது. ஆகவே, ரூ.16,499 விலைக்கு வாங்கலாம். இதுபோக அமேசான் பே ஐசிஐசிஐ கிரெடிட் கார்டுக்கு ரூ.494 கேஷ்பேக் கிடைக்கிறது.

செம்ம டிமாண்ட்.. ரூ.16,000 பட்ஜெட்ல 7000mAh பேட்டரி.. 15W சார்ஜிங்!

ஒன்பிளஸ் 16 லைட் அம்சங்கள் (OnePlus N6 Lite Specifications): 6.75 இன்ச் (1570 x 720 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவுக்கு எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன் மற்றும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது. மேலும், 900 நிட்ஸ் எச்பிஎம் பிரைட்னஸ் கொண்ட டிஸ்பிளேவாக இருக்கிறது. ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) பேஸ்டு ஆக்ஸிஜன்ஓஎஸ் 16 (OxygenOS 16) உள்ளது.

இந்த பட்ஜெட்டுக்கு ஏற்ப பர்ஃபாமென்ஸ் கொடுக்கும்படி ஆக்டா கோர் யுனிசோக் டி7250 12என்எம் (Octa Core UNISOC T7250 12nm) சிப்செட்டை இந்த ஒன்பிளஸ் 16 லைட் ஸ்மார்ட்போன் கிடைக்கிறது. மாலி ஜி57 எம்பி1 ஜிபியு (Mali G57 MP1 GPU) கிராபிக்ஸ் கார்டு கொடுத்துள்ளது. 64 ஜிபி மெமரி மட்டுமல்லாமல், 2 டிபிக்கு மைக்ரோஎஸ்டி (microSD) கார்டு சப்போர்ட் கொடுத்து இருக்கிறது.

ஓம்னிவிஷன் ஓவி13பி10 (OmniVision OV13B10) சென்சாருடன் 13 எம்பி மெயின் கேமராவை இந்த ஒன்பிளஸ் 16 லைட் ஸ்மார்ட்போன் கொடுக்கிறது. மேலும், 1080p வீடியோ ரெக்கார்டிங் கிடைக்கிறது. வீடியோ கால்கள் & செல்பீகளுக்காக 5 எம்பி செல்பீ கேமராவை கொடுத்துள்ளது. இந்த கேமராவுக்கு 720p வீடியோ ரெக்கார்டிங் மட்டுமே கிடைக்கிறது. ஏஐ அசிஸ்டன்ஸ் சப்போர்ட் கிடைக்கிறது.

15W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 7000mAh பேட்டரி கிடைக்கிறது. இந்த பேட்டரிக்கு 5W ரிவர்ஸ் சார்ஜிங் சப்போர்ட் கிடைக்கிறது. இந்த பேட்டரியுடன் 8.95 எம்எம் தடிமன் மற்றும் 215 கிராம் எடை வருகிறது. சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor) கொடுத்துள்ளது. பாட்டம் போர்டெட் ஸ்பீக்கர்கள் (Bottom Ported Speakers) கிடைக்கின்றன.

யூஎஸ்பி டைப்-சி ஆடியோ (USB Type-C Audio) கொடுக்கப்பட்டு இருக்கிறது. IP64 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் கொண்ட மாடலாக இந்த ஒன்பிளஸ் 16 லைட் ஸ்மார்ட்போன் கிடைக்கிறது. MIL-STD-810H சர்டிபிகேஷன் கொண்ட மிலிட்டரி கிரேடு டியூரபிலிட்டி கொடுக்கப்பட்டு இருக்கிறது. டூயல் 4ஜி வோஎல்டிஇ (Dual 4G VoLTE) கொடுக்கப்பட்டு உள்ளது.

மேலும், வை-பை 6 (Wi-Fi 6), ப்ளூடூத் 5.2 (Bluetooth 5.2), ஜிபிஎஸ் (GPS) மற்றும் டைப்-சி சார்ஜிங் போர்ட் கிடைக்கிறது. மிட்நைட் ஹைப் (Midnight Hype) மற்றும் நியான் கிரீன் (Neo Green) ஆகிய கலர்களில் விற்பனைக்கு கிடைக்கிறது. இந்த பட்ஜெட்டுக்கு ஏற்ற பீச்சர்களை கொடுக்கிறது. இருப்பினும், சிப்டெட் மட்டும் யுனிசோக் அல்லாமல், ஸ்னாப்டிராகன் அல்லது மீடியாடெக்காக இருந்திருக்கலாம்.

Best Mobiles in India

English summary
32 Percent Discount on OnePlus N6 Lite With 4GB RAM in Amazon Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X