பொளக்குது விற்பனை.. வெறும் ரூ.6000 போதும்.. 7000mAh பேட்டரி.. 18W சார்ஜிங்.. AI கேமரா.. எந்த மாடல்?
கம்மியா கொடுக்கலாம், அதுக்குனு இப்படியா? என்று மூக்கில் விரல் வைக்கும் விதமாக பிளிப்கார்ட் (Flipkart) தள்ளுபடியில் 7000mAh பேட்டரி, 18W சார்ஜிங், டூயல் கேமரா, 8ஜிபி ரேம் கொண்ட ஐடெல் பி40 பிளஸ் (itel P40 Plus) போன் விற்பனைக்கு வந்துள்ளது.
ஐடெல் பி40 பிளஸ் அம்சங்கள் (itel P40 Plus Specifications): இந்த ஐடெல்லில் 6.8 இன்ச் (720 x 1640 பிக்சல்கள்) எச்டிபிளஸ் (HD+) டிஸ்பிளே வருகிறது. இதுவொரு பஞ்ச்-ஹோல் (Punch-Hole) டிசைன் கொண்ட ஐபிஎஸ் (IPS) டிஸ்பிளே மாடலாகும். 90Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்டிருக்கிறது.

180Hz டச் சாம்பிளிங் ரேட் (Touch Sampling Rate) வருகிறது. அதுமட்டுமல்லாமல், மாலி ஜி57 எம்பி1 (Mali-G57 MP1) கிராபிக்ஸ் கார்டு வருவதால் ஸ்மூத் மற்றும் மீடியம் கேமிங் பர்ஃபாமென்ஸ் கிடைக்கும். ஆக்டா கோர் யுனிசோக் டி606 எஸ்ஓசி (Octa Core Unisoc T606 SoC) சிப்செட் வருகிறது.
இதுவொகு 4ஜி சிப்செட் மாடலாகும். ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) கொண்டிருக்கிறது. இந்த ஐடெல் போனில் 8 ஜிபி ரேம் (4 ஜிபி ரேம் + 4 ஜிபி விர்ச்சுவல் ரேம்) + 128 ஜிபி மெமரி சப்போர்ட் கொண்ட வேரியண்ட் விற்பனைக்கு கிடைக்கிறது. 1 டிபிக்கான மைக்ரோஎஸ்டி கார்டு (microSD Card) பயன்படுத்தலாம்.
13 எம்பி டூயல் ஏஐ ரியர் கேமரா (Dual AI Rear Camera) வருகிறது. அதேபோல 8 எம்பி ஏஐ செல்பீ ஷூட்டர் வருகிறது. இந்த ஐடெல் பி40 பிளஸ் போனில் 18W ஃபாஸ்ட் சார்ஜிங் (Fast Charging) சப்போர்ட் கொண்ட 7000mAh பேட்டரி வருகிறது. டைப்-சி (Type-C) சப்போர்ட் கொண்டிருக்கிறது.

இந்த பேட்டரி ஸ்டான்ட்பை மோடில் 18 நாட்கள் பேக்கப் கொடுக்கும். ஆகவே, பக்கா பேட்டரி பேக்கப் கொண்ட மாடலாக இந்த போன் இருக்கிறது. சைடு ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side Fingerprint Sensor), பேஸ் அன்லாக் (Face Unlock) மற்றும் ஜி சென்சார் (G Sensor) சப்போர்ட் கொண்டிருக்கிறது.
இந்த போனில் 3.5 எம்எம் ஆடியோ ஜாக் (Audio Jack), பாட்டம் போர்டெட் ஸ்பீக்கர்கள் Bottom Ported Speakers), டூயல் நானோ சிம் சிலாட் (Dual Nano SIM Slot), மைக்ரோஎஸ்டி கார்டு சிலாட் (microSD Card Slot) வருகிறது. அதேபோல ப்ளூடூத் 5.0 (Bluetooth 5.0), வை-பை 802 (Wi-Fi 802), ஜிபிஎஸ் (GPS) கனெக்டிவிட்டி வருகிறது.
டூயல் 4ஜி வோஎல்டிஇ (Dual 4G VoLTE) சப்போர்ட் கொண்டிருக்கிறது. இந்த ஐடெல் பி40 பிளஸ் போனில் ஃபோர்ஸ் பிளாக் (Force Black) மற்றும் ஐஸ் சியான் (Ice Cyan) ஆகிய 2 கலர்கள் விற்பனைக்கு வருகிறது. இந்த போனின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.6,709ஆக இருக்கிறது.
இந்த விலைக்கு 7000mAh பேட்டரி வருவதால், விற்பனையில் சக்கைப்போடு போட்டு வருகிறது. இந்த விற்பனையை மேலும் சூடு பிடிக்க வைக்கும் விதமாக பிளிப்கார்ட் தளத்தில் ரூ.671 உடனடி டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது. இந்த டிஸ்கவுண்ட்டை எச்எஸ்பிசி கிரெடிட் கார்டு பயன்படுத்தி பெறலாம். ஆகவே, இந்த போனை ரூ.6,038 பட்ஜெட்டில் வாங்கலாம்.


Click it and Unblock the Notifications








