அமேசான் அதிருது.. டிஸ்கவுண்ட்டில் ரூ.5,999 போதும்.. 12GB ரேம்.. 2TB மெமரி.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
அமேசான் (Amazon) தளத்தில் ஆர்டர் அறக்க பறக்கும் விதமாக 12 ஜிபி ரேம், 2டிபி மெமரி, ஆக்டா கோர் சிப்செட், எச்டிபிளஸ் டிஸ்பிளே, 5000mAh பேட்டரி போன்ற பீச்சர்களை கொண்ட ஐடெல் ஏ70 (itel A70) போன் தள்ளுபடியில் விற்பனைக்கு வந்துள்ளது.
ரூ.7,000 பட்ஜெட் செக்மெண்ட்டில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த ஐடெல் ஏ70 மாடலானது, விலை குறைப்பு மற்றும் தள்ளுபடி காரணமாக ரூ.5000 பட்ஜெட்டில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த பட்ஜெட்டுக்கு இந்த போனில் என்னென்ன பீச்சர்கள் வருகின்றன, விலை மற்றும் தள்ளுபடி விவரங்கள் எப்படி?

ஐடெல் ஏ70 அம்சங்கள் (itel A70 Specifications): இந்த ஐடெல்லில் ஆக்டா கோர் யுனிசோக் டி603 1 என்எம் (Octa Core Unisoc T603 12nm) சிப்செட் வருகிறது. ஆண்ட்ராய்டு 13 கோ எடிஷன் (Android 13 Go Edition) மற்றும் மீடியம் பர்ஃபாமென்ஸ் கொண்ட மாலி ஜி57 எம்பி1 ஜிபியு (Mali G57 MP1 GPU) கிராபிக்ஸ் கார்டு கொண்டிருக்கிறது.
ஐடெல் ஓஎஸ் 13 (itel OS 13) வருகிறது. 13 எம்பி மெயின் கேமரா + AI லென்ஸ் கொண்ட டூயல் ரியர் கேமரா சிஸ்டம் (Dual Rear Camera System) வருகிறது. இதுவொரு சூப்பர் எச்டிஐர் கேமரா மாடலாகும். அதேபோல ஏஐ போர்ட்ராய்டு (AI Portrait) சப்போர்ட் கொண்ட 8 எம்பி செல்பீ ஷூட்டர் வருகிறது.
60Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 6.6 இன்ச் (720 x 1612 பிக்சல்கள்) எச்டி பிளஸ் (HD+) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் 120Hz டச் சாம்பிளிங் ரேட், 500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது. இந்த போனில் ஐபோன்களில் கொடுக்கப்படும் டைனாமிக் ஐலேண்ட் போலவே டைனாமிக் பார் (Dynamic Bar) பீச்சர் கொடுக்கப்பட்டுள்ளது.

சார்ஜிங் அனிமேஷன், காலிங் அனிமேஷன் மற்றும் பேஸ் அன்லாக்கிங் அனிமேஷன் போன்ற நோட்டிபிகேஷன்களை இதன் மூலம் பார்த்து கொள்ளலாம். இந்த ஐடெல்லில் 4 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி, 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 4 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட 3 வேரியண்ட்கள் விற்பனைக்கு கிடைக்கின்றன.
இந்த 4 ஜிபி ரேம் மட்டுமல்லாமல், கூடுதலாக 8 ஜிபி டைனாமிக் ரேம் மற்றும் 2 டிபிக்கான மைக்ரோஎஸ்டி (microSD) கார்டு சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. 5000mAh பேட்டரி வருகிறது. ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொடுக்கப்படவில்லை. டைப்-சி (Type-C) சார்ஜிங் போர்ட் வருகிறது. சைடு ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side Fingerprint Sensor) கொண்டிருக்கிறது.
எஸ்டி கார்டு சிலாட் (SD Card Slot), டூயல் சிம் சிலாட் (Dual SIM Slot), பாட்டம் போர்டெட் ஸ்பீக்கர்கள் (Bottom Ported Speakers) வருகின்றன. அதேபோல 3.5 மிமீ ஆடியோ ஜாக் (Audia Jack) கொண்டிருக்கிறது. இந்த மாடலில் பிரில்லியண்ட் கோல்டு (Brilliant Gold), ஸ்டைலிஷ் பிளாக் (Stylish Black), ஃபீல்ட் கிரீன் (Field Green) மற்றும் அசூர் ப்ளூ (Azure Blue) ஆகிய 4 கலர்கள் வருகின்றன.
இந்த ஐடெல் ஏ70 போனின் 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.6,799ஆக இருக்கிறது. இருப்பினும், அமேசான் (Amazon) தளத்தில் ரூ.1000 உடனடி டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது. இதை கனரா பேங்க் கிரெடிட் கார்டு பயன்படுத்தி பெறலாம். அதேபோல மல்டிபிள் டெபிட், கிரெடிட் கார்டுகளுக்கு ரூ.500 டிஸ்கவுண்ட் கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications