வெளுத்துக்கட்டுது ஆர்டர்.. வெறும் ரூ.6,099 போதும்.. 12GB ரேம்.. 2TB மெமரி.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
இந்திய மார்கெட் அதிரும்படியான பட்ஜெட்டில் 12 ஜிபி ரேம், 2 டிபி மெமரி, ஏஐ கேமரா, எச்டிபிளஸ் டிஸ்பிளே, 5000mAh பேட்டரி மட்டுமல்லாமல், டைனாமிக் பார் பீச்சருடன் வெளியாகி மிகப்பெரும் வரவேற்பு பெற்ற ஐடெல் ஏ70 (itel A70) போனுக்கு அமேசான் விற்பனையில் (Amazon Sale) பட்டையை கிளப்பும் டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. இந்த பட்ஜெட்டுக்குள் எந்தெந்த பீச்சர்களை ஐடெல் ஏ70 போன் பேக் செய்கிறது? உடனடி டிஸ்கவுண்ட் எவ்வளவு கிடைக்கிறது? போன்ற முழு விவரங்களையும் இப்போது பார்க்கலாம்.
ரூ.7000 பட்ஜெட்டுக்குள் பக்கா பீச்சர்கள் மட்டுமல்லாமல், பிரீமியம் லுக் கொடுக்கும் போன்களை தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு இந்த ஐடெல் ஏ70 மாடலானது, பக்காவான தேர்வாக இருக்கும். ஏனென்றால், வெறும் 8.6 மிமீ தடிமனில் ஸ்லிம் டிசைன் மட்டுல்லாமல், 4 பிரீமியம் கலர்களில் இந்த ஐடெல் போன் விற்பனைக்கு கிடைக்கிறது.

ஐடெல் ஏ70 அம்சங்கள் (itel A70 Specifications): இந்த ஐடெல் போனில் 4 ஜிபி ரேம் + 8 ஜிபிக்கான விர்ச்சுவல் ரேம் (Virtual RAM) வருகிறது. ஆகவே, 12 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி, 12 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி, 12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்கள் கிடைக்கிறது. 2 டிபிக்கான மைக்ரோஎஸ்டி சப்போர்ட் வருகிறது.
6.6 இன்ச் (720 x 1612 பிக்சல்கள்) எச்டிபிளஸ் (HD+) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் 120Hz டச் சாம்பிளிங் ரேட், 500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மட்டுமல்லாமல் டைனாமிக் பார் (Dynamic Bar) பீச்சரும் வருகிறது. இந்த பீச்சர் மூலம் பேட்டரி ஸ்டேட்டஸ், இன்கம்மிங் கால்கள் மற்றும் அன்லாக்கிங் ஸ்டேட்டஸ் பார்க்கலாம்.
இந்த ஐடெல் ஏ70 போனில் ஆண்ட்ராய்டு 13 கோ எடிஷன் ஓஎஸ் (Android 13 Go Edition OS) பேஸ்டு ஐடெல் ஓஎஸ் 13 (itel OS 13) வருகிறது. இந்த பட்ஜெட்டுக்கு ஏற்ப மாலி ஜி57 எம்பி1 ஜிபியு (Mali G57 MP1 GPU) கிராபிக்ஸ் கார்டுடன் ஆக்டா கோர் யுனிசோக் டி603 12என்எம் (Octa Core Unisoc T603 12nm) சிப்செட் கொண்டிருக்கிறது.

13 எம்பி மெயின் கேமரா + ஏஐ லென்ஸ் (AI Lens) கொண்ட டூயல் ரியர் கேமரா சிஸ்டம் (Dual Rear Camera System) வருகிறது. 8 எம்பி ஷூட்டர் வருகிறது. இந்த கேமராவில் ஏஐ போர்ட்ராய்டு செல்பீ (AI Portrait Selfie) மற்றும் எச்டிஆர் (HDR) போன்ற பீச்சர்கள் வருகின்றன. டைப்-சி சார்ஜிங் (Type-C Charging) வருகிறது.
இந்த ஐடெல்லில் 5000mAh பேட்டரி வருகிறது. இந்த பேட்டரியுடன் 8.6 மிமீ தடிமனில் ஸ்லிம் லுக் கொடுக்கிறது. இந்த மாடலின் கனெக்டிவிட்டியை பார்க்கையில், 4ஜி வோஎல்டிஇ (4G VoLTE), வை-பை 802 (Wi-Fi 802), ப்ளூடூத் 5.0 (Bluetooth 5.0) ஆகியவை வருகின்றன. ஜிபிஎஸ் (GPS) கனெக்டிவிட்டியும் வருகிறது.
பாட்டம் போர்டெட் ஸ்பீக்கர்கள் இந்த ஐடெல் மாடலில் இருக்கிறது. பிரில்லியன்ட் கோல்டு, ஸ்டைலிஷ் பிளாக், ஃபீல்ட் கிரீன் மற்றும் அசுர் ப்ளூ ஆகிய 4 கலர்களில் விற்பனைக்கு கிடைக்கிறது. இந்த போனின் 12 ஜிபி ரேம் + 128 ஜிபி மாடலின் விலை ரூ.6,799ஆக இருக்கிறது. இப்போது, அமேசானில் ரூ.700 தள்ளுபடியுடன் விற்பனையாகிறது.


Click it and Unblock the Notifications








