Home
Mobile

பிளிப்கார்ட் அதிரடி.. 50எம்பி கேமரா.. 44W சார்ஜிங்.. ஆஃபரில் Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?

விவோ (Vivo) நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்யும் ஒவ்வொரு போன்களுக்கும் நல்ல வரவேற்பு உள்ளது. அதாவது தனித்துவமான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் விவோ போன்கள் வெளிவருகின்றன. எனவே தான் இந்தியா முழுவதும் விவோ போன்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. இந்நிலையில் அசத்தலான ஒரு விவோ போனுக்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.

அதாவது விவோ ஒய்58 5ஜி (vivo Y58 5G) போனுக்கு தான் பிளிப்கார்ட் தளத்தில் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த தளத்தில் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட விவோ ஒய்58 5ஜி போனுக்கு 31 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.16,376 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் 5 சதவீதம் கேஷ்பேக் சலுகையும் உள்ளது.

பிளிப்கார்ட் அதிரடி.. ஆஃபரில் Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?

விவோ ஒய்58 5ஜி அம்சங்கள் (vivo Y58 5G specifications): 50எம்பி மெயின் கேமரா + 2 எம்பி போர்ட்ரெயிட் கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா கொண்டுள்ளது விவோ ஒய்58 5ஜி ஸ்மார்ட்போன். செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமரா வசதி இதில் உள்ளது. இதுதவிர பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 4 ஜென் 2 (Octa Core Snapdragon 4 Gen 2 ) சிப்செட் உடன் இந்த விவோ ஒய்58 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. அதேபோல் அட்ரினோ 613 ஜிபியு (Adreno 613 GPU) கிராபிக்ஸ் சப்போர்ட் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். குறிப்பாக கேமிங் பயனர்கள் இந்த போனை நம்பி வாங்கலாம்.

விவோ ஒய்58 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.72 இன்ச் ஃபுல் எச்டிபிளஸ் (FHD+) எல்டிசி (LCD) டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது வெளிவந்துள்ளது. மேலும் இந்த டிஸ்பிளேவில் 2408×1080 பிக்சல்கள், 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 1024 நிட்ஸ் HBM பிரைட்னஸ், 1400: 1 கான்ட்ராஸ்ட் ரேஷியோ உள்ளிட்ட பல்வேறு டிஸ்பிளே அம்சங்கள் இதில் உள்ளன.

குறிப்பாக 8ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வசதியைக் கொண்டுள்ளது இந்த விவோ ஒய்58 5ஜி மாடல். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு உள்ளது.

ஃபன்டச் ஓஎஸ் (Funtouch OS) சார்ந்த ஆண்ட்ராய்டு 14 இயங்குதள வசதியுடன் விவோ ஒய்58 5ஜி போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பின்புசைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் (Side-mounted Fingerprint Scanner) உடன் இந்த போன் வெளிவந்துள்ளது.

IP64 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) மற்றும் டியூவி ரெயின்லேண்ட் லோவ் ப்ளூ லைட் சர்டிஃபிகேஷன் (TUV Rheinland Low Blue Light Certificati on) கொண்டுள்ளது இந்த விவோ போன். மேலும் ஸ்டீரியோ ஸ்பீக்கர் சிஸ்டம் (Stereo speaker setup), 300% ஆடியோ பூஸ்டர் ( 300% audio booster), 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுடன் விவோ ஒய்58 5ஜி போன் வெளிவந்துள்ளது.

6000mAh பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது விவோ ஒய்58 5ஜி போன். இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 44W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. டூயல் சிம், 5ஜி (5G), டூயல்-பேண்ட் வைஃபை (Dual-band WiFi), புளூடூத் 5.1 (Bluetooth 5.1), ஜிபிஎஸ் (GPS), யுஎஸ்பி டைப்-சி (USB Type-C) உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இதில் உள்ளன.

More from GizBot

Best Mobiles in India

English summary
31 Percent Discount on vivo Y58 5G with 8GB Ram in Flipkart Sale Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X