அள்ளி வீசும் அமேசான்.. 50எம்பி கேமரா.. AMOLED டிஸ்பிளே.. ஆஃபரில் தரமான Samsung 5ஜி போன்.. எந்த மாடல்?
அமேசான் சிறப்பு விற்பனையில் சாம்சங் கேலக்ஸி எம்55எஸ் 5ஜி (Samsung Galaxy M55s 5G) ஸ்மார்ட்போனுக்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஸ்னாப்டிராகன் சிப்செட், 50எம்பி ட்ரிபிள் ரியர் கேமரா, 5000எம்ஏச் பேட்டரி உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுடன் இந்த போன் வெளிவந்துள்ளது. இப்போது கேலக்ஸி எம்55எஸ் 5ஜி போனுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் இதன் சிறப்பு அம்சங்களை இப்போது பார்க்கலாம்.
சாம்சங் கேலக்ஸி எம்55எஸ் 5ஜி ஸ்மார்ட்போனுக்கு அமேசான் தளத்தில் 31 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ19,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் இந்த போனுக்கு ரூ.2000 கூப்பன் சலுகையும் உள்ளது. எனவே இந்த போனை ரூ.17999 விலையில் வாங்கிவிட முடியும்.

சாம்சங் கேலக்ஸி எம்55எஸ் 5ஜி அம்சங்கள் (Samsung Galaxy M55s 5G Specifications ): குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 1 (Qualcomm Snapdragon 7 Gen 1) சிப்செட் உடன் இந்த புதிய சாம்சங் போன் வெளிவந்துள்ளது. மேலும் One UI 6.1 சார்ந்த ஆண்ட்ராய்டு 14 இயங்குதளத்தைக் கொண்டுள்ளது இந்த போன். ஆனாலும் ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் இந்த போனுக்கு கிடைக்கும்.
அதேபோல் 6.67-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் சூப்பர் அமோலெட் (Super AMOLED) டிஸ்பிளே உடன் சாம்சங் கேலக்ஸி எம்55எஸ் போன் வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளே 1080 X 2400 பிக்சல்ஸ், 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz refresh rate), 1000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி கொண்டுள்ளது.
50எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2எம்பி மேக்ரோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் கொண்டுள்ளது சாம்சங் கேலக்ஸி எம்55எஸ் 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் 4கே வீடியோக்களை பதிவு செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் இதன் செல்பி கேமராவுக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது சாம்சங் நிறுவனம்.
அதன்படி செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 50எம்பி கேமரா கொண்டுள்ளது இந்த போன். இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த சாம்சங் கேலக்ஸி எம்55எஸ் 5ஜி போனில் உள்ளன. இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) உள்ளிட்ட பல சிறப்பான வசதிகள் இந்த போனில் உள்ளன.

8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி வசதியைக் கொண்டுள்ளது இந்த சாம்சங் கேலக்ஸி எம்55எஸ் 5ஜி ஸ்மார்ட்போன் மாடல். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு உள்ளது. கோரல் கிரீன் (Coral Green) மற்றும் தண்டர் பிளாக் (Thunder Black) நிறங்களில் இந்த போனை வாங்கலாம்.
அதேபோல் சாம்சங் கேலக்ஸி எம்55எஸ் 5ஜி ஸ்மார்ட்போன் 5000mAh பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது. பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 45W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. எனவே இந்த போனை வேகமாக சார்ஜ் செய்துவிட முடியும். டூயல் சிம், 5ஜி, 4ஜி எல்டிஇ, டூயல்-பேண்ட் வைஃபை 6, ப்ளூடூத் 5.2, யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன. குறிப்பாக இந்த போனின் எடை 180 கிராம் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








