சர்ர்னு இறங்கிய SAMSUNG விலை.. 50MP கேமரா.. 5000mAh பேட்டரி.. 25W சார்ஜிங்.. 1TB மெமரி.. எந்த மாடல்?
சாம்சங் பிரியர்களே நம்ப முடியாத விலைக்கு 50 எம்பி கேமரா, 1 டிபி மெமரி, 25W ஃபாஸ்ட் சார்ஜிங், 5000mAh பேட்டரி போன்ற பீச்சர்களுடன் வெளியான சாம்சங் கேலக்ஸி எம்06 5ஜி (Samsung Galaxy M06 5G) போனின் விலை மேலும் குறைந்துள்ளது. இப்போது ஆளுக்கு 2 ஆர்டர் போடும்படியான விலைக்கு விற்பனைக்கு கிடைக்கிறது. இந்த அடிமட்ட பட்ஜெட்டில் என்னென்ன பீச்சர்களை கொடுக்கிறது? மார்கெட் விலை மற்றும் டிஸ்கவுண்ட் விலை எவ்வளவு? முழு விவரங்களையும் இப்போது பார்க்கலாம்.
இந்த சாம்சங் கேலக்ஸி எம்06 5ஜி போன் மார்கெட்டில் வெளியான போது 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.9,999ஆகவும், 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.11,499ஆகவும் இருந்தது. ஆனால், இப்போது அமேசான் தளத்தில் எந்தவித கார்டு பரிவர்த்தனைகளும் இல்லாமலேயே விலை குறைப்பு கிடைக்கிறது. அதாவது, 6 ஜிபி ரேம் மாடலின் விலை ரூ.10,699ஆக இருக்கிறது.

இதுபோக அமேசான் ஐசிஐசிஐ பேங்க் கார்டுக்கு ரூ.321 டிஸ்கவுண்ட் மற்றும் ரூ.10,150 மதிப்பில் எக்ஸ்சேஞ்ச் ஆஃபர் கிடைக்கிறது. ஆகவே, பட்ஜெட்டில் சாம்சங் போனை வாங்க திட்டமிட்ட கஸ்டமர்களுக்கு இப்போது பக்காவான நேரமாக இருக்கிறது. ஏனென்றால், சாம்சங் என்னும் பிராண்ட் மட்டுமல்லாமல், ஓஎஸ், சிப்செட் மற்றும் பேட்டரியில் பட்டையை கிளப்பும் பீச்சர்களை இந்த சாம்சங் கேலக்ஸி எம்06 5ஜி கொடுக்கிறது.
சாம்சங் கேலக்ஸி எம்06 5ஜி அம்சங்கள் (Samsung Galaxy M06 5G Specifications): அடிமட்ட பட்ஜெட்டில் கிடைத்தாலும் பிரீமியம் லுக் கொடுக்கும்படி பிளேசிங் பிளாக் (Blazing Black) மற்றும் சேஜ் கிரீன் (Sage Green) ஆகிய கலர்களில் ஆர்டருக்கு கிடைக்கிறது. 444K அன்டுடு ஸ்கோர் கொண்ட ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 6என்எம் (Octa Core MediaTek Dimensity 6300 6nm) சிப்செட் கிடைக்கிறது.
இந்த அடிமட்ட பட்ஜெட்டில் 4 ஜெனரேஷன் ஓஎஸ் அப்டேட் மட்டுமல்லாமல், லேட்டஸ்ட் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) கிடைக்கிறது. இதுபோக 4 வருடங்களுக்கான செக்யூரிட்டி அப்டேட்களையும் சாம்சங் கஸ்டமர்கள் பெற்று கொள்ளலாம். இந்த சாம்சங் கேலக்ஸி எம்06 5ஜி போனில் மாலி ஜி57 ஜிபியு (Mali G57 GPU) கிராபிக்ஸ் கார்டு கிடைக்கிறது. வழக்கமான ஒன் யுஐ 7 (One UI 7) உள்ளது.
பிரீமியம் லுக் கொடுக்கும்படி 50 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி டெப்த் கேமரா கொண்ட டூயர் ரியர் கேமரா சிஸ்டம் (Dual Rear Camera System) வருகிறது. இந்த சாம்சங் போனில் 8 எம்பி செல்பீ ஷூட்டர் பேக் செய்யப்பட்டுள்ளது. மெயின் கேமராவில் ஓஐஎஸ் (OIS) கிடையாது. இருப்பினும், 10X டிஜிட்டல் ஜூமிங் (Digital Zooming) மற்றும் ஃபுல்எச்டி (FHD) வீடியோ ரெக்கார்டிங் சப்போர்ட் கிடைக்கிறது.
இந்த சாம்சங் கேலக்ஸி எம்06 5ஜி போனில் 1 டிபி மெமரிக்கான மைக்ரோஎஸ்டி கார்டு சிலாட் வருகிறது. அதோடு டுயல் சிம் சிலாட் (Dual SIM Slot), பாட்டம் போர்டெட் ஸ்பீக்கர் (Bottom Ported Speaker) மற்றும் 3.5 எம்எம் ஹெட்போன் ஜாக் (Headphone Jack) கிடைக்கிறது. எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன், 90Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 16 மில்லியன் கலர் டெப்த் கிடைக்கிறது.
மேலும், 800 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொண்ட 6.7 இன்ச் (720 x 1600 பிக்சல்கள்) பிஎல்எஸ் எல்சிடி (PLS LCD) டிஸ்பிளே வருகிறது. இந்த போனில் சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor), 5000mAh பேட்டரி மற்றும் 25W ஃபாஸ்ட் சார்ஜிங் கிடைக்கிறது. 12 பேண்ட் சப்போர்ட் கொண்ட 5ஜி கனெக்டிவிட்டி மற்றும் 4ஜி வோஎல்டிஇ சப்போர்ட் கொடுக்கப்பட்டு இருக்கிறது.


Click it and Unblock the Notifications








