Amazon-ல அள்ளுங்க.. 200எம்பி கேமரா.. 67W சார்ஜிங்.. ஆஃபரில் Redmi 5ஜி போன்.. எந்த மாடல்?
அமேசான் தளத்தில் ரெட்மி நோட் 13 ப்ரோ (Redmi Note 13 Pro) ஸ்மார்ட்போன் தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. 1.5K அமோலெட் (AMOLED) டிஸ்பிளே, ஸ்னாப்டிராகன் சிப்செட், ஃபாஸ்ட் சார்ஜிங் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் இந்த போன் வெளிவந்துள்ளது. இப்போது ரெட்மி நோட் 13 ப்ரோ 5 போனுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் இதன் சிறப்பு அம்சங்களைப் பார்க்கலாம்.
அதன்படி அமேசான் தளத்தில் ரெட்மி நோட் 13 ப்ரோ ஸ்மார்ட்போனுக்கு 31 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.19,805 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ.2000 தள்ளுபடியும் உள்ளது. எனவே இந்த போனை ரூ.17805 விலையில் வாங்கிவிட முடியும்.

ரெட்மி நோட் 13 ப்ரோ 5ஜி அம்சங்கள் (REDMI Note 13 Pro 5G specifications): சக்திவாய்ந்த ஸ்னாப்டிராகன் 7s ஜென் 2 சிப்செட் (Snapdragon 7s Gen 2 SoC) சிப்செட் உடன் ரெட்மி நோட் 13 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. அதேபோல் ஆண்ட்ராய்டு 13 இயங்குதள வசதியுடன் இந்த போன் அறிமுகமானது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் கிடைக்கும்.
குறிப்பாக 6.67-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் 1.5K அமோலெட் (AMOLED) டிஸ்பிளே வசதியுடன் ரெட்மி நோட் 13 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. 2712 x 1220 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், டால்பி விஷன், 1800 நிட்ஸ் ப்ரைட்னஸ், கொரில்லா கிளாஸ் விக்டஸ்
(Corning Gorilla Glass Victus) புரொடெக்சன் உள்ளிட்ட பல டிஸ்பிளே கொண்டுள்ளது இந்த போன்.
8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கொண்டுள்ளது இந்த ரெட்மி நோட் 13 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் மாடல். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
200எம்பி பிமைரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி மேக்ரோ லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் கொண்டுள்ளது ரெட்மி நோட் 13 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமரா கொண்டு வெளிவந்துள்ளது இந்த ரெட்மி நோட் 13 5ஜி ஸ்மார்ட்போன். இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

அதேபோல் 5100mAh பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது இந்த ரெட்மி நோட் 13 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன். எனவே இந்த போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரி சார்ஜ் செய்ய 67W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் இந்த போனில் உள்ளது.
இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) ஆதரவுடன்ரெட்மி நோட் 13 ப்ரோ 5ஜி போன் வெளிவந்துள்ளது. மேலும் இந்த ரெட்மி போனுக்கு IP54 தர டஸ்ட் மற்றும் ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் (Dust And Splash Resistant) கொடுக்கப்பட்டுள்ளது. ஆர்க்டிக் ஒயிட் (Arctic White), கோரல் பர்பிள் (Coral Purple) மற்றும் மிட்நைட் பிளாக் (Midnight Black) நிறங்களில் இந்த போன் வாங்க கிடைக்கிறது


Click it and Unblock the Notifications








