வெளுத்து கட்டுது ஆர்டர்.. ரூ.9999 பட்ஜெட்ல 50MP கேமரா.. 5000mAh பேட்டரி.. 18W ஃபாஸ்ட் சார்ஜிங்.. எந்த மாடல்?
போக்கோ பிரியர்கள் மட்டுமல்லாமல், மற்ற பட்ஜெட் ஸ்மார்ட்போன் பிரியர்களும் அவ்ளோதானா என்று கேட்கும்படியான பட்ஜெட்டில் இப்போது போக்கோ எம்6 ப்ரோ 5ஜி (POCO M6 Pro 5G) போன் கிடைக்கிறது. 50 எம்பி மெயின் கேமரா, 1 டிபி மெமரி சப்போர்ட், 5000mAh பேட்டரி, 18W ஃபாஸ்ட் சார்ஜிங் போன்ற பீச்சர்களுடன் பர்ஃபாமென்ஸ் கொடுக்கும்படி ஸ்னாப்டிராகன் 4 ஜென் 2 சிப்செட்டை கொடுத்துள்ளது. இந்த போக்கோ போனுக்கு கிடைக்கும் டிஸ்கவுண்ட், விலை மற்றும் பீச்சர்களின் விவரங்கள் இதோ.
போக்கோ எம்6 ப்ரோ 5ஜி அம்சங்கள் (POCO M6 Pro 5G Specifications): இந்த போக்கோவில் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் கிடைக்காது. ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) பேஸ்டு எம்ஐயுஐ 14 (MIUI 14) மட்டுமே கிடைக்கிறது. இருப்பினும், அட்ரினோ 613 ஜிபியு (Adreno 613 GPU) மற்றும் 4என்எம் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 4 ஜென் 2 (4nm Octa Core Snapdragon 4 Gen 2) சிப்செட்டை கொடுக்கிறது.

4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் விற்பனைக்கு கிடைக்கிறது. இந்த வேரியண்ட்டில் 1 டிபிக்கான மைக்ரோஎஸ்டி கார்டு (microSD Card) பயன்படுத்தி கொள்ளலாம். இந்த போக்கோ எம்6 ப்ரோ 5ஜி போனில் 6.79 இன்ச் (2460 x 1080 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே வருகிறது. 90Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன் கிடைக்கிறது.
மேலும், 550 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 (Corning Gorilla Glass 3) பாதுகாப்பை கொடுத்துள்ளது. பஞ்ச்-ஹோல் டிசைனில் 240Hz டச் சாம்பிளிங் ரேட் கொடுக்கிறது. 1080p வீடியோ ரெக்கார்டிங் சப்போர்ட் கொண்ட 50 எம்பி மெயின் கேமரா மற்றும் 2 எம்பி டெப்த் கேமராவை கொடுக்கிறது. போர்ட்ராய்டு (Portrait), நைட் (Night) போன்ற கேமரா பீச்சர்கள் கிடைக்கிறது.
இந்த போக்கோ எம்6 ப்ரோ 5ஜி போனில் 8 எம்பி செல்பீ ஷூட்டர் வருகிறது. இந்த அடிமட்ட பட்ஜெட்டில் இன்பிராரெட் சென்சார் (Infrared Sensor) கொடுக்கிறது. மேலும், சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor), 3.5 எம்எம் ஆடியோ ஜாக் (Audio Jack) மற்றும் பாட்டம் ஃபயரிங் ஸ்பீக்கர் (Bottom Firing Speaker) பேக் செய்து கொடுக்கிறது.
இந்த போனில் 18W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 5000mAh பேட்டரி கொண்ட பேக்கப் சிஸ்டம் கிடைக்கிறது. இந்த பேட்டரிக்கு டைப்-சி போர்ட் (Type-C Port) இருக்கிறது. ஓரளவுக்கு ஸ்லிம் பாடி கொடுக்கும்படி 8.17 மிமீ தடிமனில் இருக்கிறது. 199 கிராம் எடை வருகிறது. 5ஜி எஸ்ஏ/எஸ்என்ஏ (5G SA/NSA), 4ஜி வோஎல்டிஇ (Dual 4G VoLTE) மற்றும் வை-பை 6 (Wi-Fi 6) கிடைக்கிறது.
போக்கோ எம்6 ப்ரோ 5ஜி அமேசான் விலை (POCO M6 Pro 5G Amazon Price): இந்த போக்கோவின் 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.10,999 ஆக இருக்கிறது. இந்த பட்ஜெட்டிலேயே விற்பனையில் மிகப்பெரும் வரவேற்பு பெற்றது. ஆனால், இப்போது அமேசான் தளத்தில் ரூ.1000 உடனடி டிஸ்கவுண்ட் போக ஆர்டருக்கு கிடைக்கிறது.
ஆகவே, ரூ.9,999 பட்ஜெட்டில் வாங்கி கொள்ளலாம். எஸ்பிஐ கிரெடிட் கார்டுக்கு டிஸ்கவுண்ட் கிடைக்கும். இந்த டிஸ்கவுண்ட் மட்டுமல்லாமல், ரூ.10,400 மதிப்பில் எக்ஸ்சேஞ்ச் போனஸ் பெற்று கொள்ளலாம். பிரீமியம் கிளாஸ் பேக் (Premium Glass Back) டிசைனில் பவர் பிளாக் (Power Black) மற்றும் ஃபாரஸ்ட் கிரீன் (Forest Green) ஆகிய கலர்களில் ஆர்டர் செய்து கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications








