ஆர்டர் தூள் பறக்க போகுது.. வெறும் ரூ.8100 போதும்.. 50MP கேமரா.. ஆஃபரில் போக்கோ 5ஜி போன்..எந்த மாடல்?
அமேசான் தளத்தில் போக்கே எம்6 5ஜி போனுக்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக 50எம்பி கேமரா, 5000எம்ஏஎச் பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் இந்த அசத்தலான போக்கோ ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் இப்போது போக்கோ எம்6 5ஜி போனுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் அம்சங்களை இந்த பதிவில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.
அமேசான் தளத்தில் தற்போது போக்கோ எம்6 5ஜி ஸ்மார்ட்போனுக்கு 31 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.8999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ.899 தள்ளுபடியும் உள்ளது. எனவே இந்த போனை ரூ.8100 விலையில் வாங்கிவிட முடியும்.

போக்கோ எம்6 5ஜி அம்சங்கள்: தரமான ஆக்டோ-கோர் மீடியாடெக் 6100 பிளஸ் 6என்எம் (Octa Core MediaTek Dimensity 6100+ 6nm) சிப்செட் வசதியுடன் இந்த போக்கோ எம்6 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்தது. இந்த போனக்கு வழங்கப்பட்ட சிப்செட் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். மேலும் ஆர்ம் மாலி-ஜி57 எம்சி2 ஜிபியு (Arm Mali-G57 MC2 GPU) கிராபிக்ஸ் கொண்டிருக்கிறது இந்த அசத்தலான போன்.
எனவே கேமிங் பயனர்கள் இந்த போனை நம்பி வாங்கலாம். அதேபோல் 6.74-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியுடன் இந்த போக்கோ போன் வெளிவந்தது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 600 நிட்ஸ் ப்ரைட்னஸ், கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு, 20:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ மற்றும் பல்வேறு அம்சங்கள் உள்ளன. குறிப்பாக இந்த போனின் டிஸ்பிளே சிறந்த திரை அனுபவம் வழங்கும்.
50எம்பி ஏஐ டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த போக்கோ எம்6 5ஜி ஸ்மார்ட்போன். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் அட்டகாசமான படங்களை எடுக்க முடியும். செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 5எம்பி கேமரா உடன் இந்த போன் வெளிவந்துள்ளது. இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இதில் உள்ளன.
குறிப்பாக மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார்(Side-mounted Fingerprint Sensor), 3.5எம்எம் ஆடியோ ஜாக், எப்எம் ரேடியோ, டஸ்ட் மற்றும் ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் (Dust And Splash Resistant) உள்ளிட்ட பல சிறப்பான வசதிகளுடன் இந்த போக்கோ எம்6 5ஜி போன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்டுள்ளது இந்த போக்கோ எம்6 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இதில் உள்ளது. அதாவது நீங்கள் 1 டிபி வரை மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.

அதேபோல் 5000எம்ஏஎச் பேட்டரியுடன் இந்த போக்கோ போன் வெளிவந்துள்ளது. எனவே இந்த போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு 18 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் இதில் உள்ளது. குறிப்பாக இந்த போனை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும்.
5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11 ஏசி, புளூடூத் 5.3, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த போக்கோ எம்6 5ஜி ஸ்மார்ட்போன். குறிப்பாக இந்த போனின் வடிவமைப்பு மற்றும் சிப்செட் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.


Click it and Unblock the Notifications