முரட்டு டிஸ்கவுண்ட்.. SONY கேமரா.. AMOLED டிஸ்பிளே.. 80W ஃபாஸ்ட் சார்ஜிங்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
பீச்சர்கள் மட்டுமல்ல, டிஸ்கவுண்ட்டிலும் பட்டையை கிளப்பும்படி ஓப்போ ரெனோ12 5ஜி (OPPO Reno12 5G) போனானது, பிளிப்கார்ட் விற்பனையில் (Flipkart Sale) கிடைக்கிறது. குவாட் கர்வ்ட் டிஸ்பிளே, ஏஐ பீச்சர்கள், சோனி சென்சார் மெயின் கேமரா, சாம்சங் சென்சார் செல்பீ கேமரா, 80W சூப்பர்வூக் சார்ஜிங், 5000mAh பேட்டரி, 360 டிகிரி டேமேஜ் ப்ரூப் ஆர்மர் பாடி போன்ற அல்ட்ரா பிரீமியம் பீச்சர்களை இந்த ஓப்போ ரெனோ12 5ஜி கொடுக்கிறது. இந்த ஓப்போவுக்கு கிடைக்கும் டிஸ்கவுண்ட் விவரங்கள் இதோ.
ஓப்போ ரெனோ12 5ஜி விற்பனை (OPPO Reno12 5G Sale): இந்த ரெனோ போனின் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.36,999ஆக இருக்கிறது. இப்போது, பிளிப்கார்ட் தளத்தில் ரூ.2000 உடனடி பேங்க் டிஸ்கவுண்ட் மற்றும் ரூ.9,600 மதிப்பில் எக்ஸ்சேஞ்ச் சலுகையில் விற்பனைக்கு கிடைக்கிறது. ஆகவே, ரூ.34,999 பட்ஜெட்டில் ஆர்டர் செய்து கொள்ளலாம்.

எச்டிஎப்சி மற்றும் எஸ்பிஐ பேங்க் கிரெடிட் கார்டுகள் மட்டுமல்லாமல், டெபிட் கார்டுகளுக்கும் இந்த ரூ.2000 டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. ஈஎம்ஐ மூலம் ஆர்டர் செய்தால், எஸ்பிஐ கிரெடிட் கார்டுக்கு ரூ.3,600 மதிப்பில் டிஸ்கவுண்ட் கிடைக்கும். இப்படி பக்கா டிஸ்கவுண்ட்டில் ஆர்டருக்கு கிடைக்கிறது. முழு பீச்சர்களை இப்போது தெரிந்து கொள்ளுங்கள்.
ஓப்போ ரெனோ12 5ஜி அம்சங்கள் (OPPO Reno12 5G Specifications): இந்த ஓப்போ போனில் பிரீமியம் லுக் கொடுக்கும் ஸ்பேஸ் பிரவுன் (Space Brown) மற்றும் சன்செட் கோல்டு (Sunset Gold) ஆகிய 2 கலர்கள் விற்பனைக்கு கிடைக்கின்றன. 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட் மட்டுமல்லாமல், 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி வேரியண்ட்டும் ஆர்டருக்கு கிடைக்கிறது.
கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 (Corning Gorilla Glass Victus 2) மற்றும் 360 டிகிரி டேமேஜ் ப்ரூப் ஆர்மர் பாடி புரொடெக்சன் கிடைக்கிறது. ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன், 1200 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 394 பிபிஐ (PPI) பிக்சல் டென்சிட்டி கொண்ட 6.7 (2412 × 1080 பிக்சல்கள்) குவாட் கர்வ்ட் அமோலெட் (AMOLED) டிஸ்பிளே பேனல் கிடைக்கிறது.
மேலும், 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 1.07 பில்லியன் கலர் டெப்த் மற்றும் 240Hz டச் சாம்பிளிங் ரேட் கிடைக்கிறது. இதுபோக எச்டிஆர்10பிளஸ் (HDR10+), ஸ்பிளாஷ் டச் கன்ட்ரோல் கிடைக்கிறது. ஆகவே, டிஸ்பிளே மற்றும் பாடியில் பிரீமியம் குவாலிட்டி கிடைக்கும். ஆக்டா கோர் 4என்எம் மீடியாடெக் டைமன்சிட்டி 7300 எனர்ஜி (Octa Core 4nm MediaTek Dimensity 7300 Energy) உள்ளது.
இந்த ஓப்போ ரெனோ12 5ஜி போனில் கலர்ஓஎஸ் 14.1 (ColorOS 14.1) மற்றும் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) கிடைக்கிறது. கேமராவில் ஏஐ பீச்சர்கள் மற்றும் பிரீமியம் சென்சார்கள் பேக் செய்யப்பட்டுள்ளன. சாம்சங் ஜேஎன்5 (Samsung JN5) சென்சாருடன் செல்பீ கேமராவும், சோனி எல்ஒய்டி 600 (Sony LYT 600) சென்சாருடன் மெயின் கேமராவும் வருகிறது.
20எக்ஸ் டிஜிட்டல் ஜூமிங் கொடுக்கும் 50 எம்பி டெலிபோட்டோ கேமரா மற்றும் 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா வருகிறது. இந்த ஓப்போ போனில் 80W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 5000mAh பேட்டரி வருகிறது. 5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ கனெக்டிவிட்டி, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டைப்-சி ஆடியோ மற்றும் IP65 டஸ்ட் மற்றும் ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








