மிரளுது சேல்.. ரூ.17,249 பட்ஜெட்ல 3D டிஸ்பிளே.. QUAD கேமரா.. 16GB ரேம்.. 4700mAh பேட்டரி.. எந்த போன்?
அமேசான் வேலடைன்ஸ் டே விற்பனையில் (Amazon Valentines Day Sale) 16ஜிபி ரேம், 256ஜிபி மெமரி, குவாட் கேமரா சிஸ்டம், 4700mAh பேட்டரி அம்சங்களை கொண்ட லாவா அக்னி 2 5ஜி (Lava Agni 2 5G) போன் மலிவாக கிடைக்கிறது.
லாவா அக்னி 2 5ஜி அம்சங்கள் (Lava Agni 2 5G Specifications): இந்த லாவா போனில் 6.78 இன்ச் (2400 × 1080 பிக்சல்கள்) ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) டிஸ்பிளே வருகிறது. இதுவொரு 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 3டி கர்வ்ட் அமோலெட் (3D Curved AMOLED) டிஸ்பிளே மாடலாகும்.

இந்த டிஸ்பிளேவில் 950 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் எச்டிஆர்10பிளஸ் (HDR10+) சப்போர்ட் வருகிறது. ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) கொண்ட ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7050 6என்எம் (Octa Core MediaTek Dimensity 7050 6nm) சிப்செட் வருகிறது.
இந்த லாவா அக்னி 2 5ஜி மாடலில் 8 ஜிபிக்கான டைனாமிக் ரேம் (Dynamic RAM) வருகிறது. ஆகவே, 16 ஜிபி ரேம் + 256 மெமரி கொண்ட வேரியண்ட் விற்பனைக்கு கிடைக்கிறது. மாலி ஜி68 எம்சி ஜிபியு (Mali G68 MC4 GPU) கிராபிக்ஸ் கார்டு கொண்டிருக்கிறது. ஆகவே, பர்ஃபாமென்ஸ் பக்காவாக இருக்கும்.
குவாட் ரியர் கேமரா சிஸ்டம் (Quad Rear Camera System) கொண்டுள்ளது. 50 எம்பி மெயின் கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா + 2 எம்பி டெப்த் + 2 எம்பி மேக்ரோ கேமரா வருகிறது. இந்த கேமராவில் 4K வீடியோ ரெக்கார்டிங் சப்போர்ட் உள்ளது.

பியூட்டி மோட் (Beauty Mode), எச்டிஆர் மோட் (HDR Mode), நைட் மோட் (Night Mode), போர்ட்ராய்டு மோட் (Portrait Mode) போன்ற கேமரா பீச்சர்கள் வருகின்றன. 16 எம்பி செல்பீ கேமரா வருகிறது. இந்த பட்ஜெட்டில் குவாட் கேமரா, 4K வீடியோ ரெக்கார்டிங் வருவது வரவேற்கத்தக்கதாகும்.
இந்த லாவா அக்னி 2 5ஜி போனில் 66W ஃபாஸ்ட் சார்ஜிங் (Fast Charging) சப்போர்ட் கொண்ட 4700mAh பேட்டரி வருகிறது. வெறும் 16 நிமிடங்களில் 50 சதவீத சார்ஜ் செய்து கொள்ளலாம். டைப்-சி சார்ஜிங் (Type-C Charging) கொண்டுள்ளது. இந்த பேட்டரியோடு 210 கிராம் எடை கொண்டிருக்கிறது.
அதேபோல 8.75 மிமீ தடிமன் வருகிறது. இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor), பேஸ் அன்லாக் (Face Unlock) சப்போர்ட் வருகிறது. 3.5 மிமீ ஆடியோ ஜாக் (Audio Jack) வருகிறது. 5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ, டூயல் 4ஜி வோஎல்டிஇ, ப்ளூடூத் 5.2, ஜிபிஎஸ் கனெக்டிவிட்டிகள் வருகின்றன.
இந்த லாவா அக்னி 2 5ஜி போனில் விரிடியன் கிளாஸ் (Viridian Glass), அயர்ன் கிளாஸ் (Iron Glass) மற்றும் ஹீத்தர் கிளாஸ் (Heather Glass) ஆகிய 3 கலர்கள் விற்பனைக்கு வருகின்றன. இந்த போன் வெளியான போது, இதன் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.21,999ஆக நிர்ணயம் செய்யப்பட்டது.
இப்போது, அமேசான் வேலடைன்ஸ் டே விற்பனையை முன்னிட்டு வெறும் ரூ.17,999க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த தள்ளுபடி விரிடியன் கிளாஸ் வேரியண்ட்டுக்கு மட்டும் வழங்கப்படுகிறது. அதோடு சிட்டி பேங்க் டெபிட் கார்டுக்கு ரூ.750 தள்ளுபடி வழங்கப்படுகிறது. ஆகவே, இந்த போனை ரூ.17,249 விலைக்கு வாங்கலாம்.


Click it and Unblock the Notifications








