அடிச்சு தூக்குது ஆர்டர்.. வெறும் ரூ.10000 பட்ஜெட்ல 6000mAh பேட்டரி.. 50MP கேமரா.. 1TB மெமரி.. எந்த மாடல்?
ஐக்யூ இசட்9எக்ஸ் 5ஜி (iQOO Z9x 5G) போனின் டிசைனுக்கே ரூ.10,000 கொடுக்கலாம் போலயே என்று சொல்லும்படியான பிரீமியம் லுக் மட்டுமல்லாமல், 50 எம்பி மெயின் கேமரா, 120Hz ரெஃப்ரெஷ் ரேட் டிஸ்பிளே, 44W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 6000mAh பேட்டரி போன்ற பக்கா பீச்சர்களை அந்த மாடல் கொடுக்கிறது. இப்போது, அமேசான் (Amazon) தளத்தில் அசத்தலான டிஸ்கவுண்ட்டில் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த ஐக்யூவின் பழைய விலை, புது விலை மற்றும் முழு பீச்சர் விவரங்களை இப்போது பார்க்கலாம்.
இந்திய மார்கெட்டில் ரூ.15,000 பட்ஜெட் செக்மெண்டில் இந்த ஐக்யூ இசட்9எக்ஸ் 5ஜி போன் வெளியாகியது. 4 ஜிபி ரேம் (4 ஜிபி விர்ச்சுவல் ரேம்) + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.12,999ஆக இருந்தது. ஆனால், இப்போது, அமேசான் விற்பனையில் (Amazon Sale) வெறும் ரூ.12,499 பட்ஜெட்டில் கிடைக்கிறது. இதுபோக பேங்க் டிஸ்கவுண்ட், கூப்பன் டிஸ்கவுண்ட் கிடைக்கிறது.

ஆகவே, ரூ.500 கூப்பன் டிஸ்கவுண்ட் மற்றும் ரூ.1,250 பேங்க் டிஸ்கவுண்ட் பெற்று கொள்ளலாம். ரூ.10,749 பட்ஜெட்டில் ஆர்டர் செய்து கொள்ளலாம். இந்த ரூ.10000 பட்ஜெட்டில் பேட்டரி, டிஸ்பிளே, கேமரா மற்றும் சிப்செட் பீச்சர்களில் பட்டையை கிளப்பி இருக்கிறது. இந்த பீச்சர்களை பார்த்துவிட்டு பட்ஜெட்டுக்கு ஏற்ற மாடலாக இருக்கிறதா என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
ஐக்யூ இசட்9எக்ஸ் 5ஜி அம்சங்கள் (iQOO Z9x 5G Specifications): இந்த ஐக்யூ 5ஜி மாடலாக கிடைப்பதால், அதற்கு ஏற்ற பர்ஃபாமென்ஸ் கொடுக்கும் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 6 ஜென் 1 4என்எம் (Octa Core Snapdragon 6 Gen 1 4nm) சிப்செட் மற்றும் அட்ரினோ 710 ஜிபியு (Adreno 710 GPU) கிராபிக்ஸ் கார்டுடன் கிடைக்கிறது. ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) குறிப்பிடத்தக்கது.
மேலும், ஐக்யூவின் பட்ஜெட் மாடல்களுக்கு கிடைக்கும், ஃபன்டச்ஓஎஸ் 14 (FuntouchOS 14) இந்த போனிலும் கிடைக்கிறது. ஆகவே, பர்ஃபாமென்ஸ் பக்கம் பார்த்தால், பக்காவாகவே இருக்கிறது. இந்த பட்ஜெட்டில் டிஸ்பிளேவில் அமோலெட் கிடைக்காது. இருப்பினும், ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷனும், 120Hz ரெஃப்ரெஷ் ரேட்டும் மேட்ச் செய்யப்பட்டு இருக்கிறது.
1000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொண்ட 6.72 இன்ச் (2408 × 1080 பிக்சல்கள்s) எல்சிடி (LCD) பேனல் கிடைக்கிறது. இந்த ஐக்யூ இசட்9எக்ஸ் 5ஜி போனின் பேட்டரி சிஸ்டம் பட்ஜெட்டை தூக்கி சாப்பிடும்படி இருக்கிறது. ஏனென்றால், 5ஜி சிப்செட்டுடன் 6000mAh பேட்டரியை கொடுத்துள்ளது. இந்த பேட்டரிக்கு வழக்கமாக டைப்-சி போர்ட் மற்றும் 44W ஃபாஸ்ட் சார்ஜிங் கிடைக்கிறது.
பிரீமியம் லுக் கொடுக்கும் பம்ப் டிசைனில் 50 எம்பி மெயின் கேமரா மற்றும் 2 எம்பி டெப்த் கேமரா கிடைக்கிறது. பொக்கெ எஃபெக்ட்ஸ் மற்றும் போர்ட்ராய்டு பீச்சர்களை கொடுக்கிறது. 8 எம்பி செல்பீ ஷூட்டரும், 4K வீடியோ ரெக்கார்டிங் சப்போர்ட்டும் கிடைக்கிறது. ஆடியோ பூஸ்ட் (Audio Boost) மற்றும் டூயல் ஸ்பீக்கர்கள் (Dual Speakers) வருகின்றன.
இந்த ஐக்யூ இசட்9எக்ஸ் 5ஜி போனில் சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் (Side Mounted Fingerprint), IP64 டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ட் மற்றும் 3.5 எம்எம் ஆடியோ ஜாக் கிடைக்கிறது. டொர்னாடோ கிரீன் (Tornado Green) கலரில் ஆர்டருக்கு கிடைக்கிறது. மேலும் ஸ்டார்ம் கிரே (Storm Grey) கலரிலும் விற்பனைக்கு வருகிறது. ரூ.10000 பட்ஜெட்டில் பக்கா மாடலாகும்.


Click it and Unblock the Notifications








