Home
Mobile

தூக்குங்கடா அந்த தங்கத்த.. ரூ.18,499-க்கு இறங்கிய விலை.. 3D டிஸ்பிளே.. 64MP கேமரா.. 66W சார்ஜிங்.. எந்த மாடல்?

ஐக்யூ பிரியர்கள் மட்டுமல்லாமல், 3டி கர்வ்ட் அமோலெட் டிஸ்பிளே பிரியர்களும் அடிச்சு புடிச்சு ஆர்டர் போடும்படியான விலை குறைப்பில் ஐக்யூ இசட்7 ப்ரோ (iQOO Z7 Pro) ஆர்டருக்கு கிடைக்கிறது. இப்போது, அமேசான் விற்பனையில் (Amazon Sale) ரூ.5,500 விலை குறைப்பில் வருகிறது. இந்த விலை நேரடி விலை குறைப்பு சலுகையாக இருக்கிறது. ஆகவே, ஆர்டர் செய்வதற்கு டெபிட் கார்டு அல்லது கிரெடிட் கார்டு தேவையில்லை. இந்த ஐக்யூ இசட்7 ப்ரோ போனின் முழு விவரங்கள் இதோ.

இந்திய மார்கெட்டில் அல்ட்ரா ஸ்லிம் ஸ்மார்ட்போன்களில் ஐக்யூ இசட்7 ப்ரோ போனும் இருக்கிறது. வெறும் 7.36 எம்எம் தடிமனில் பிரீமியம் லுக் கொடுக்கிறது. இந்த ஐக்யூவின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் மார்கெட் விலை ரூ.23,999ஆக இருக்கிறது. ஆனால், இப்போது அமேசான் தளத்தில் வெறும் ரூ.18,499 பட்ஜெட்டில் கிடைக்கிறது.

தூக்குங்கடா அந்த தங்கத்த.. ரூ.18,499-க்கு இறங்கிய விலை.. 3D டிஸ்பிளே!

ஆகவே, ரூ.5,500 விலை குறைப்பில் ஆர்டர் செய்து கொள்ள முடிகிறது. இதே விலையில் எந்த கார்டு ஆப்ஷனும் இல்லாமல் வாங்கி கொள்ளலாம். ஒருவேளை உங்களிடம் அமேசான் பே ஐசிஐசிஐ பேங்க் கிரெடிட் கார்டு இருந்தால் கூடுதலாக ரூ.555 உடனடி டிஸ்கவுண்ட் கொடுக்கப்படும். அதேபோல ரூ.17,400 மதிப்பில் எக்ஸ்சேஞ்ச் சலுகை கிடைக்கிறது.

ஐக்யூ இசட்7 ப்ரோ அம்சங்கள் (iQOO Z7 Pro Specifications): இந்த ஐக்யூ போனில் 3டி கர்வ்ட் டிசைன் மட்டுமல்லாமல், ஃபுல்எச்டிபிளஸ் (FHD) ரெசொலூஷன் மற்றும் எச்டிஆர்10பிளஸ் (HDR10+) சப்போர்ட் கொண்ட 6.78 இன்ச் (2400 × 1080 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவில் 1300 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் உள்ளது.

மேலும், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 300Hz டச் சாம்பிளிங் ரேட் கொடுக்கப்பட்டுள்ளது. ஆகவே, டிஸ்பிளேவில் மிட்-ரேஞ்ச் அவுட்புட் எதிர்பார்க்கலாம். 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மட்டுமல்லாமல், 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட் மற்றும் 2 வேரியண்ட்களிலும் 8 ஜிபி விர்ச்சுவல் ரேம் (Virtual RAM) சப்போர்ட் கிடைக்கிறது.

இந்த ஐக்யூ இசட்7 ப்ரோவில் மற்றும் மாலி ஜி610 ஜிபியு (Mali G610 GPU) உடன் ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7200 4என்எம் (Octa Core MediaTek Dimensity 7200 4nm) சிப்செட் கிடைக்கிறது. ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) மற்றும் ஃபன்டச்ஓஎஸ் 13 (FuntouchOS 13) கிடைக்கிறது. ஆகவே, மிட்-ரேஞ்ச் லெவலுக்கு பர்ஃபாமென்ஸ் கிடைக்கும்.

சிம்பிள் மற்றும் பிரீமியம் லுக் கொடுக்கும்படி ஆரா எல்இடியுடன் 64 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி பொக்கெ கேமரா கொண்ட டூயல் ரியர் கேமரா சிஸ்டம் (Dual Rear Camera System) கிடைக்கிறது. இந்த கேமராவில் சாம்சங் ஜிடபுள்யூ3 (Samsung GW3) சென்சாரும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் டெக்னாலஜியும் பேக் செய்யப்பட்டுள்ளது.

இந்த ஐக்யூ இசட்7 ப்ரோ போனில் 16 எம்பி செல்பீ ஷூட்டர் கிடைக்கிறது. அல்ட்ரா ஸ்லிம் டிசைனுக்கு ஏற்ப 4600mAh பேட்டரி மற்றும் 66W ஃபாஸ்ட் சார்ஜிங் கிடைக்கிறது. ஏஜி கிளாஸ் பேக் (AG Glass Back) பாடியில் ப்ளூ லாகூன் (Blue Lagoon) மற்றும் ஃகிராஃபைட் மேட் (Graphite Matte) ஆகிய கலர்கள் ஆர்டருக்கு கிடைக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
31 Percent Discount on iQOO Z7 Pro 5G With 8GB RAM in Amazon Sale Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X