முதல் விற்பனையிலே 3 லட்சம் யூனிட்கள் காலி.. இந்தியர்கள் அடிச்சுபிடிச்சு வாங்கிய Redmi போன்.. ஏன் தெரியுமா?
மிகவும் சமீபத்தில் இந்தியாவில் அறிமுகமான 2 ரெட்மி ஸ்மார்ட்போன்கள் முதல் விற்பனையிலேயே 3 லட்சம் யூனிட்கள் விற்று தீர்ந்துள்ளது. அதென்ன மாடல்கள்? இப்படி அடித்து பிடித்து வாங்கும் அளவிற்கு இந்த 2 ரெட்மி ஸ்மார்ட்போன்களில் அப்படி என்ன ஸ்பெஷல்? இதோ விவரங்கள்:
அதென்ன மாடல்கள்? நாம் இங்கே பேசுவது ரெட்மி 13சி சீரீஸ் (Redmi 13C Series) ஸ்மார்ட்போன்களை பற்றித்தான். இது கடந்த டிச.6 ஆம் தேதியன்று இந்தியாவில் அறிமுகமானது. இதன்கீழ் ரெட்மி 13சி 5ஜி மற்றும் ரெட்மி 13சி 4ஜி என மொத்தம் 2 ஸ்மார்ட்போன்கள் வெளியானது.

இவ்விரு பட்ஜெட்-விலை ஸ்மார்ட்போன்களும் கடந்த வாரம் முதல் முறையாக விற்பனைக்கு வந்தன. அதை தொடர்ந்து, ரெட்மி 13சி சீரிஸின் கீழ் மொத்தம் எத்தனை யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டன என்கிற எண்ணிக்கையை ஷாவ்மீ இந்தியா (Xiaomi India) நிறுவனம் அதிகாரபூர்வமாக வெளியிட்டு உள்ளது.
ஷாவ்மீ இந்தியாவின் கூற்றுப்படி, விற்பனை தொடங்கப்பட்ட ஆரம்ப நாட்களிலேயே 3,00,000 யூனிட்களுக்கு மேலான ரெட்மி 13 சீரீஸ் ஸ்மார்ட்போன்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதில் 5ஜி வேரியண்ட்டின் எண்ணிக்கை எவ்வளவு, 4ஜி வேரியண்ட்டின் எண்ணிக்கை எவ்வளவு என்பதை ஷாவ்மீ இந்தியா நிறுவனம் "தனித்தனியாக" குறிப்பிடவில்லை.

நினைவூட்டும் வண்ணம் ரெட்மி 13சி 4ஜி ஸ்மார்ட்போனின் முதல் விற்பனை டிசம்பர் 12 அன்று தொடங்கியது. அதை தொடர்ந்து டிசம்பர் 16 ஆம் தேதி முதல் ரெட்மி 13சி 5ஜி ஸ்மார்ட்போனின் விற்பனை தொடங்கியது. ஆக எப்படி பார்த்தாலும் வெறும் 10 நாட்களுக்குள் 3 லட்சம் யூனிட்கள் விற்பனையாகி உள்ளது.
ரெட்மி 13சி 5ஜி மொத்தம் 3 ஸ்டோரேஜ் ஆப்ஷன்களில் வாங்க கிடைக்கிறது. 4ஜிபி ரேம் + 128ஜிபி ரூ.10,999 க்கும், 6ஜிபி ரேம் + 128ஜிபி ரூ.12,499 க்கும் மற்றும் 8ஜிபி ரேம் + 256ஜிபி ரூ.14,499 க்கும் வாங்க கிடைக்கிறது.

மறுகையில் உள்ள ரெட்மி 13சி 4ஜி ஸ்மார்ட்போனும் கூட மொத்தம் 3 ஸ்டோரேஜ் ஆப்ஷன்களில் வாங்க கிடைக்கிறது. 4ஜிபி ரேம் + 128ஜிபி ரூ.8,999 க்கும், 6ஜிபி ரேம் + 128ஜிபி ரூ.9,999 க்கும் மற்றும் 8ஜிபி ரேம் + 256ஜிபி ரூ.11,499 க்கும் வாங்க கிடைக்கிறது. இரண்டுமே எம்ஐ.காம் (Mi.com), அமேசான் இந்தியா (Amazon India) மற்றும் ஷாவ்மீ ரீடெயில் ஸ்டோர்கள் வழியாக விற்பனை செய்யப்படுகின்றன.
ரெட்மி 13சி 5ஜி ஸ்மார்ட்போனில் அப்படி என்ன ஸ்பெஷல்? சில நாட்கள் நடந்த முதல் விற்பனையின் ஒரு பகுதியாகா ரெட்மி 13சி 5ஜி ஸ்மார்ட்போனின் மீது ரூ.1000 தள்ளுபடி அறிவிக்கப்பட்டு இருந்தது. இதன்கீழ் ரெட்மி 13சி 5ஜி-யின் பேஸிக் வேரியண்ட் வெறும் ரூ.9999 க்கு வாங்க கிடைத்தது. இந்த தள்ளுபடி பெரும்பாலான வாடிக்கையாளர்களை சுண்டி இழுத்தது போல் தெரிகிறது.
"ரூ.10,000 க்குள் இப்படி ஒரு 5ஜி ஸ்மார்ட்போனா?" என்று கூறி அடித்து பிடித்து ஆர்டர் செய்துள்ளது போல் தெரிகிறது. வரும் நாட்களிலும் கூட இந்த ஸ்மார்ட்போன் நல்ல முறையில் விற்பனையாகும் என்பது போல் தெரிகிறது. ஏனென்றால் இது ரூ.11,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் சில அட்டகாசமான அம்சங்களை பேக் செய்கிறது.
ரெட்மி 13சி 5ஜி-ன் முக்கிய அம்சங்கள்: இது 90ஹெர்ட்ஸ் 6.74-இன்ச் எச்டி+ எல்சிடி டிஸ்பிளே, ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ், மீடியாடெக் டைமன்சிட்டி 6100+ சிப்செட், 50எம்பி டூயல் ரியர் கேமரா, 5எம்பி செல்பீ கேமரா, 18W சார்ஜிங் ஆதரவு உடனான 5,000mAh, ரீடெயில் பாக்ஸில் 10W சார்ஜர் போன்றவைகளை கொண்டுள்ளது.
ரெட்மி 13சி 4ஜி-ன் முக்கிய அம்சங்கள்: இது 90ஹெர்ட்ஸ் 6.74-இன்ச் எச்டி+ எல்சிடி டிஸ்பிளே, ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ், மீடியாடெக் ஹீலியோ ஜி85 சிப்செட், 50எம்பி ட்ரிபிள் ரியர் கேமரா, 8எம்பி செல்பீ கேமரா, 18W சார்ஜிங் ஆதரவு உடனான 5,000mAh, ரீடெயில் பாக்ஸில் 10W சார்ஜர் போன்றவைகளை கொண்டுள்ளது.


Click it and Unblock the Notifications








