Home
Mobile

அடிச்சு புடிச்சு வாங்கிய இந்தியர்கள்.. ஒரே நாளில் 300,000 யூனிட்கள் விற்பனை.. இந்த Redmi போனில் என்ன ஸ்பெஷல்?

"அட்றா சக்கை.. ஆரம்பமே அட்டகாசமா இருக்கே!" என்று கூறும்படியாக, சமீபத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட ரெட்மி (Redmi) நிறுவனத்தின் 2 புதிய ஸ்மார்ட்போன்களும், முதல் நாள் விற்பனையிலேயே 300,000 யூனிட்களை (Units) விற்று ஒட்டுமொத்த மொபைல் சந்தையையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.

ஷாவ்மீ நிறுவனமானது கடந்த ஆகஸ்ட் 1 ஆம் தேதியன்று அதன் ரெட்மி 12 சீரீஸின் கீழ் ரெட்மி 12 5ஜி (Redmi 12 5G) மற்றும் ரெட்மி 12 4ஜி (Redmi 12 4G) என்கிற 2 புதிய பட்ஜெட்-விலை ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்தது. அதனை தொடந்து விற்பனைக்கும் வந்தன.

ஒரே நாளில் 300,000 யூனிட்கள் விற்பனை.. இந்த Redmi போனில் என்ன ஸ்பெஷல்?

இவ்விரு ஸ்மார்ட்போன்களுமே மிட்-ரேன்ஜ் பையர்கள் (Mid-range Buyers) மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. விற்பனைக்கு வந்த முதல் நாளிலேயே இவ்விரு ஸ்மார்ட்போன்களுமே 300,000 யூனிட்டுகளுக்கு மேல் விற்பனை செய்து குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியுள்ளதாக்கி ஷாவ்மீ அறிவித்துள்ளது.

அடிச்சு புடிச்சு வாங்கும் அளவிற்கு இந்த போன்களில் அப்படி என்ன ஸ்பெஷல்? ரெட்மி 12 சீரிஸின் 2 ஸ்மார்ட்போன்களுமே பிரீமியம் ஸ்மார்ட்போன் எக்ஸ்பீரியன்ஸை (Premium smartphone experience) வழங்குகிறது. இந்த ஸ்மார்ட்போன்கள் ஃபிளாக்ஷிப்-கிரேடு கிரிஸ்டல் கிளாஸ் பேக் டிசைனை (Flagship-grade crystal glass back design) கொண்டுள்ளன.

அதுமட்டுமல்ல விலையை மீறிய.. விதிவிலக்கான செயல்திறனை (Exceptional performance) வழங்குகிறது; அதுவம் மிகவும் நேர்மையான மலிவு விலையில் வழங்குகிறது; இப்படியாகத்தான் ரெட்மி 12 5ஜி மற்றும் ரெட்மி 12 4ஜி ஸ்மார்ட்போன்கள் ஆனது இந்திய மொபைல் சந்தையில் புதிய தரத்தை (New standard) செட் செய்டுள்ளன!

குறிப்பாக ரெட்மி 12 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது வாடிக்கையாளர்களை சுண்டி இழுக்கும் சிறப்பம்சங்களை கொண்டுள்ளது. இது ஸ்னாப்டிராகன் 4 ஜென் 2 5ஜி ப்ராசஸர் (Snapdragon 4 Gen 2 5G Processor) உடன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள முதல் ஸ்மார்ட்போன் ஆகும். இந்த ப்ராசஸர் ஒரு முதன்மை நிலை 4என்எம் கட்டமைப்பை (Flagship-level 4nm architecture) கொண்டுள்ளது.

இதெல்லாம் வெறும் ரூ.10,999 என்கிற சலுகை விலைக்கு (Offer Price) கிடைத்தால்.. யார் தான் விடுவார்கள்? நினைவூட்டும் வண்ணம் ரெட்மி 12 5ஜி ஆனது 3 ஸ்டோரேஜ் ஆப்ஷன்களில் வெளியாகியுள்ளது: 4ஜிபி ரேம் + 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ரூ.10,999 க்கும், 6ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ஸ்டோரேஜ் ரூ.12,499 க்கும் மற்றும் 8ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் ரூ.14,499 க்கும் வாங்க கிடைக்கிறது.

ரெட்மி 12 5ஜி ஸ்மார்ட்போன் மீதான மேற்கண்ட சலுகை விலைகள் ஆனது ஷாவ்மீ நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான வலைத்தளமான எம்ஐ.காம் (Mi.com), அமேசான்.காம் (Amazon.com) எம்ஐ ஹோம் (Mi Home), எம்ஐ ஸ்டூடியோ (Mi Studio) மற்றும் அங்கீகரிக்கப்பட்ட ரீடெய்ல் பார்ட்னர் ஸ்டார்களில் கிடைக்கிறது.

மறுகையில் உள்ள ரெட்மி 12 4ஜி ஸ்மார்ட்போன் ஆனது 2 ஸ்டோரேஜ் ஆப்ஷன்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 4ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.8,999 க்கும், 6ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ரூ.10,499 க்கும் வாங்க கிடைக்கிறது. இன்னும் சுவாரசியமான விஷயம் என்னவென்றால் இவ்விரு போன்கள் மீதும் பேங்க் மற்றும் எக்ஸ்சேன்ஜ் ஆபர்களும் (Bank and Exchange Offers) கிடைக்கிறது.

உங்களிடம் ஐசிஐசிஐ கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் (ICICI Creadit and Debit Cards) இருந்தால், ரெட்மி 12 4ஜி அல்லது ரெட்மி 12 5ஜி ஸ்மார்ட்போனின் 4ஜிபி ரேம் வேரியண்ட்டின் மீது ரூ.1000 உடனடி தள்ளுபடி கிடைக்கும். இதுதவிர்த்து ரெட்மி 12 4ஜி மற்றும் ரெட்மி 12 5ஜி ஸ்மார்ட்போனின் மீது எக்ஸ்சேஞ்ச் போனஸும் (Exchange Bonus) கிடைக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
300000 Units Of Redmi 12 5G and Redmi 12 4G Smartphone Sold On First Day Sale
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X