தட்டி தூக்குறாங்க.. ரூ.6000 விலை குறைப்பு.. 50எம்பி Eye Autofocus கேமராவை கொண்ட 5G போன்.. என்ன மாடல்?
50எம்பி ஐ ஆட்டோஃபோகஸ் மெயின் கேமரா, 5000எம்ஏஎச் பேட்டரி, 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் ஆதரவு உடனான ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே போன்ற முக்கிய அம்சங்களை கொண்டிருக்கும் ஒரு 5ஜி ஸ்மார்ட்போனின் மீது முழுதாக ரூ.6000 தள்ளுபடி கிடைத்தால்.. சும்மா விட முடியுமா?
பிரபல இ-காமர்ஸ் வலைத்தளமான அமேசான் இந்தியாவானது (Amazon India) ஐக்யூ இஸட்6 லைட் 5ஜி (iQOO Z6 Lite 5G) ஸ்மார்ட்போனின் மீது 30% நேரடி தள்ளுபடியை அறிவித்துள்ளது. இதன் மூலம் குறிப்பிட்ட ஐக்யூ 5ஜி மாடலானது ரூ.6000 குறைவான விலைக்கு வாங்க கிடைக்கிறது.

நினைவூட்டும் வண்ணம் ஐக்யூ இஸட்6 லைட் 5ஜி போனின் அறிமுக விலை ரூ.19,999 ஆகும். அமேசான் வழங்கும் 30% நேரடி தள்ளுப்படிக்கு பிறகு இது ரூ.13,999 க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதோடு சேர்த்து, எக்ஸ்சேஞ்ச் ஆஃபர் (Exchange Offer) மற்றும் வங்கி சலுகைகளை (Bank Offer) பயன்படுத்தும் பட்சத்தில் ஐக்யூ இஸட்6 லைட் 5ஜி போனின் விலையை மேலும் குறைக்கலாம்.
அமேசான் வலைத்தளமானது ஐக்யூ இஸட்6 லைட் 5ஜி ஸ்மார்ட்போனின் மீது ரூ.13,100 வரையிலான எக்ஸ்சேஞ்ச் தள்ளுபடியை வழங்குகிறது. இந்த தள்ளுபடியானது நீங்கள் எக்ஸ்சேன்ஜ் செய்யும் ஸ்மார்ட்போனின் மாடல் மற்றும் அது வேலை செய்யும் நிலைமைகளை பொறுத்தே நிர்ணயம் செய்யப்படும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளவும்.
வங்கி சலுகைகளை பொறுத்தவரை, யெஸ் பேங்க் கிரெடிட் கார்டு இஎம்ஐ (Yes Bank Credit Card EMI) பரிவர்த்தனையின் கீழ் ஐக்யூ இஸட்6 லைட் 5ஜி ஸ்மார்ட்போனை வாங்கினால் ரூ.1500 வரையிலான தள்ளுபடி கிடைக்கும். இதேபோல எச்எஸ்பிசி கிரெடிட் கார்டு இஎம்ஐ (HSBC Bank Credit Card EMI) பரிவர்த்தனையின் ரூ.2000 வரையிலான தள்ளுபடி கிடைக்கும்.
முக்கிய அம்சங்களை பொறுத்தவரை, ஐக்யூ இஸட்6 லைட் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 240ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் (240Hz Touch Sampling Rate) உடனான 6.58-இன்ச் எஃப்எச்டி+ டிஸ்பிளேவை கொண்டுள்ளது. ஸ்னாப்டிராகன் 4 ஜென் 1 சிப்செட் (Snapdrogan 4 Gen 1 Processo) உடன் வந்த உலகின் முதல் ஸ்மார்ட்போன் இதுவாகும்.
கேமராக்களை பொறுத்தவரை, இது 50எம்பி ஐ ஆட்டோஃபோகஸ் மெயின் கேமரா (50MP Eye Autofocus Main Camera) உடனான 2எம்பி கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா செட்டப்பை பேக் செய்கிறது. இதன் கேமரா செட்டப்பில் சூப்பர் நைட் மோட் (Super Night Mode) அம்சமும் உள்ளது. முன்பக்கத்தில், 8எம்பி செல்பீ கேமராவை கொண்டுள்ளது.
பேட்டரியை பொறுத்தவரை, இது 5000எம்ஏஎச் உடன் வருகிறது. ஐக்யூ நிறுவனத்தின் கூற்றுப்படி, இது நீண்ட நேர கேமிங் மற்றும் வீடியோ பிளே டைமை வழங்கும். இன்னும் சரியாக சொல்ல வேண்டுமென்றால் இது 127 மணிநேர மியூசிக் பிளேபேக் டைம், 21.6 மணிநேர சோஷியல் மீடியா ஸ்க்ரோலிங், 14.5 மணிநேர ஓடிடி ஸ்ட்ரீமிங் மற்றும் 8.3 மணிநேர கேமிங் ஆகியவற்றை வழங்கும்.


Click it and Unblock the Notifications








