Home
Mobile

மிரட்டிவிட்டாப்ல.. வெறும் ரூ.6999 போதும்.. 50MP கேமரா.. 5000mAh பேட்டரி.. 25W ஃபாஸ்ட் சார்ஜிங்.. எந்த மாடல்?

என்னங்க சொல்றீங்க? ரூ.10000 கூட இல்லையா? என்று சாம்சங் பிரியர்களே மூக்கில் விரல் வைக்கும்படியான பட்ஜெட்டில் எச்டிபிளஸ் ரெசொலூஷன் டிஸ்பிளே, ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ், 50 எம்பி மெயின் கேமரா, 25W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 5000mAh பேட்டரி போன்ற பீச்சர்களுடன் சாம்சங் கேலக்ஸி எம்05 (Samsung Galaxy M05) விற்பனைக்கு வந்துள்ளது. நேரடி விலை குறைப்பில் கிடைப்பதால், கிரெடிட் அல்லது டெபிட் கார்டுகள் தேவையில்லை. இந்த சாம்சங் கேலக்ஸி எம்05 போனின் பீச்சர்கள், விலை இதோ.

ரூ.10000 பட்ஜெட்டில் பிராண்ட் போன்களை எதிர்பார்க்க முடியாது என்று சொல்லும் காலம் மலையேறி போய்விட்டது. இப்போது, சாம்சங் போன்ற மிகப்பெரும் நிறுவனத்தின் மாடல்களே ரூ.10000 பட்ஜெட்டுக்கு வந்துவிட்டது. ஆனால், இப்போது பார்க்கப்போகும் சாம்சங் கேலக்ஸி எம்05 போனானது, அதைவிட மலிவான விலைக்கு பக்கா பீச்சர்களுடன் விற்பனைக்கு கிடைக்கிறது.

மிரட்டிவிட்டாப்ல.. வெறும் ரூ.6999 போதும்.. 50MP கேமரா.. எந்த மாடல்?

பட்ஜெட்டைவிட கூடுதலாக பிரீமியம் லுக் கொடுக்கும் டிசைனில் வருகிறது. டூயல் ரியர் கேமரா சிஸ்டம் மற்றும் வாட்டர் டிராப் நாட்ஜ் செல்பீ ஷூட்டர் வருகிறது. மின்ட் கிரீன் (Mint Green) கலரில் ஆர்டர் செய்து கொள்ளலாம். இந்த சாம்சங் போனுக்கு 2 ஓஎஸ் அப்டேட்கள் கிடைக்கிறது. இப்போது, முழு பீச்சர்களை தெரிந்துகொண்டு பட்ஜெட்டுக்கு ஏற்ப இருக்கிறதா என்பதை பார்ப்போம்.

சாம்சங் கேலக்ஸி எம்05 அம்சங்கள் (Samsung Galaxy M05 Specifications): இந்த சாம்சங் போனில் 2 ஓஎஸ் அப்டேட் மட்டுமல்லாமல், 4 வருடங்களுக்கான செக்யூரிட்டி அப்டேட்களுடன் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) வருகிறது. சாம்சங் நிறுவனத்தின் ஒன் யுஐ கோர் 6.0 (One UI Core 6.0) மற்றும் மாலி ஜி52 ஜிபியு (Mali G52 GPU) கிராபிக்ஸ் கார்டு கிடைக்கிறது.

பட்ஜெட்டில் பட்டையை கிளப்பும் பர்ஃபாமென்ஸ் கொடுக்கும் 4ஜி வெர்ஷனான ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி85 12என்எம் (Octa Core MediaTek Helio G85 12nm) சிப்செட் வருகிறது. இந்த சாம்சங் கேலக்ஸி எம்05 போனில் 4 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் ஆர்டருக்கு கிடைக்கிறது. 64 ஜிபிக்கு பிறகு 1 டிபிக்கு மைக்ரோஎஸ்டி பயன்படுத்தலாம்.

டிஸ்பிளேவில் மிட்-ரேஞ்ச் அவுட் எதிர்பார்க்க முடியாது. இருப்பினும், எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன் கொண்ட 6.7 இன்ச் (720 x 1600 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவுக்கு 60Hz ரெஃப்ரெஷ் ரேட் பேக் செய்யப்பட்டுள்ளது. அடிமட்ட பட்ஜெட்டிலும் 50 எம்பி மெயின் கேமராவுடன் டூயல் ரியர் கேமரா சிஸ்டம் (Dual Rear Camera System) கிடைக்கிறது.

ஆகவே, 2 எம்பி டெப்த் சென்சார் மற்றும் 8 எம்பி செல்பீ ஷூட்டர் வருகிறது. இந்த சாம்சங் கேலக்ஸி எம்05 போனில் சைடு-பேசிங் ஃபிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் (Side-facing Fingerprint Scanner), 3.5 எம்எம் ஆடியோ ஜாக் (Audio Jack) மற்றும் டைப்-சி சார்ஜிங் (Type-C Charging) கிடைக்கிறது. பேட்டரி சிஸ்டம் குறை சொல்வதற்கில்லை. ஆகவே, 5000mAh பேட்டரி மற்றும் 25W ஃபாஸ்ட் சார்ஜிங் உள்ளது.

இந்த சாம்சங் கேலக்ஸி எம்05 போனின் 4 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.7999ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. இப்போது, வெறும் ரூ.6,999 பட்ஜெட்டில் ஆர்டருக்கு கிடைக்கிறது. அமேசான் விற்பனையில் (Amazon Sale) ஆர்டர் செய்து கொள்ளலாம். இந்த ரூ.1000 டிஸ்கவுண்ட் பெற எந்தவித கார்டுகளும் தேவையில்லை. மேலும், ரூ.6,600 எக்ஸ்சேஞ்ச் சலுகை கிடைக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
30 Percent Discount on Samsung Galaxy M05 With 50MP Camera in Amazon Sale Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X