வெச்சான் பாரு Samsung.. 30 சதவீத ஆஃபரில் 6000mAh பேட்டரி.. 45W ஃபாஸ்ட் சார்ஜிங்.. 50MP கேமரா.. எந்த மாடல்?
லேட்டஸ்ட் வெர்ஷன் சாம்சங் மாடலை வாங்க திட்டமிட்ட கஸ்டமர்களுக்கு பிளிப்கார்ட் தளத்தில் பக்காவான தள்ளுபடி கிடைக்கிறது. 6000mAh பேட்டரி, 45W சார்ஜிங் 50 எம்பி கேமரா கொண்ட சாம்சங் கேலக்ஸி எப்70 ப்ரோ 5ஜி (Samsung Galaxy F70 Pro 5G) ஸ்மார்ட்போனுக்கு தள்ளுபடி விலைக்கு கிடைக்கிறது. இந்த மாடலின் முழு விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட மாடலுக்கு 30 சதவீத தள்ளுபடி கிடைக்கிறது. இந்த தள்ளுபடியுடன் ரூ.32,999 விலைக்கு வாங்கலாம். மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கார்டுகளுக்கு ரூ.1,650 தள்ளுபடி கிடைக்கிறது. ஆகவே, ரூ.31,349 விலைக்கு இந்த சாம்சங் கேலக்ஸி எப்70 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனை வாங்கி கொள்ளலாம். இப்போது, பீச்சர்களை பார்க்கலாம்.

சாம்சங் கேலக்ஸி எப்70 ப்ரோ 5ஜி அம்சங்கள் (Samsung Galaxy F70 Pro 5G Specifications): ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 6 ஜென் 3 (Octa Core Snapdragon 6 Gen 3) சிப்செட் கொண்ட மாடலாக இந்த சாம்சங் கேலக்ஸி எப்70 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் கிடைக்கிறது. ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) மற்றும் 6 வருடங்களுக்கு ஆண்ட்ராய்டு ஓஎஸ் அப்டேட்கள் கிடைக்கின்றன.
மேலும், 6 வருடங்களுக்கு செக்யூரிட்டி அப்டேட்களை பெற்று கொள்ளலாம். ஏஐ வாய்ஸ் டிரான்ஸ்கிரிப்ஷன் (AI Voice Transcription), சாம்சங் க்நாக்ஸ் செக்யூரிட்டி (Samsung Knox Security), பிரைவேட் ஆல்பம் (Private Album), டைரெக்ட் வாய்ஸ்மெயில் (Direct voicemail) உள்ளிட்ட பீச்சர்களுடன் ஒன் யுஐ 8.5 (One UI 8.5) கொடுக்கப்பட்டு இருக்கிறது.
அதேபோல கேமராவுக்கு ஆப்ஜெக்ட் எரைசர், மை ஃபில்டர்ஸ் மற்றும் ஏஐ எடிட் உள்ளிட்ட பீச்சர்கள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. 6 ஜிபி ரேம் வேரியண்ட் மட்டுமல்லாமல், 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்களும் கிடைக்கின்றன. 50 எம்பி மெயின் கேமரா + 5 எம்பி அல்ட்ரா வைடு கேமரா உள்ளது.
மேலும், 2 எம்பி மேக்ரோ கேமரா கொண்ட டிரிபிள் ரியர் கேமரா சிஸ்டம் கொண்ட மாடலாக இந்த சாம்சங் கேலக்ஸி எப்70 ப்ரோ 5ஜி கிடைக்கிறது. இந்த கேமராவுக்கு ஓஐஎஸ் (OIS) என்கிற ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் டெக்னாலஜி மற்றும் 4K வீடியோ ரெக்கார்டிங் கிடைக்கிறது. 10எக்ஸ் ஜூமிங் மற்றும் ஆட்டோ போகஸ் கிடைக்கிறது.
12 எம்பி செல்பீ கேமராவை இந்த சாம்சங் கேலக்ஸி எப்70 ப்ரோ 5ஜி கொடுக்கிறது. 6.7 இன்ச் (1080 x 2340 பிக்சல்கள்) சூப்பர் அமோலெட் (Super AMOLED) டிஸ்பிளேவை கொடுத்துள்ளது. இந்த டிஸ்பிளேவுக்கு கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் பிளஸ் புரொடெக்சன் கிடைக்கிறது. மேலும், ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலுஷன் மற்றும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் உள்ளது.
45W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 6000mAh பேட்டரி கிடைக்கிறது. IP64 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ஸ் (Dust & Splash Resistance) கொடுக்கிறது. ஆல்பா பிளாக் (Alpha Black), ஆரா கிரீன் (Aura Green) ஆகிய கலர்களில் இந்த சாம்சங் கேலக்ஸி எப்70 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனை வாங்கி கொள்ளலாம். இந்த பட்ஜெட்டுக்கு ஏற்ற மாடலாகும்.


Click it and Unblock the Notifications