Home
Mobile

முடிச்சு விட்டீங்க போங்க.. ரூ.6,999 பட்ஜெட்ல 50MP கேமரா.. 5000mAh பேட்டரி.. ஆஃபரில் Samsung போன்.. எந்த மாடல்?

பிளிப்கார்ட் தளத்தில் சாம்சங் கேலக்ஸி எப்05 (Samsung Galaxy F05) ஸ்மார்ட்போனுக்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக மீடியாடெக் சிப்செட், 50எம்பி கேமரா, எல்சிடி டிஸ்பிளே உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் மலிவு விலையில் வெளிவந்தது இந்த சாம்சங் போன். இப்போது சாம்சங் கேலக்ஸி எப்05 போனுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் இதன் அம்சங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

அதாவது பிளிப்கார்ட் தளத்தில் சாம்சங் கேலக்ஸி எப்05 போனுக்கு 30 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.6999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் 5 சதவீதம் கேஷ்பேக் சலுகையும் வழங்கப்படுகிறது. எனவே இந்த ஸ்மார்ட்போனை மிகவும் குறைந்த விலையில் வாங்கிவிட முடியும்.

முடிச்சு  விட்டீங்க போங்க.. ஆஃபரில் Samsung போன்.. எந்த மாடல்?

சாம்சங் கேலக்ஸி எப்05 அம்சங்கள் (Samsung Galaxy F05 specifications): 6.7 இன்ச் எச்டிபிளஸ் (HD+) எல்சிடி (LCD) டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது இந்த சாம்சங் போன். மேலும் இதன் டிஸ்பிளேவில்720 x 1600 பிக்சல்கள், 60Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி வழங்கப்படுகிறது. குறிப்பாக பெரிய டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி85 12என்எம் (Octa Core MediaTek Helio G85 12nm)சிப்செட் உடன் இந்த சாம்சங் கேலக்ஸி எப்05 ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. இந்த சிப்செட் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். பின்பு ஒன்யுஐ கோர் 6.0 (OneUI Core 6.0) சார்ந்த ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) மூலம் இந்த போன் இயங்குகிறது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.

மேலும் கேமிங் பயனர்களை கவரும் வகையில் ஆர்ம் மாலி ஜி52 ஜிபியு (ARM Mali G52 GPU) கிராபிக்ஸ் கார்டு உடன் இந்த சாம்சங் போன் வெளிவந்துள்ளது. டால்பி அட்மோஸ் (Dolby Atmos) ஆதரவு கொண்டுள்ளது சாம்சங் கேலக்ஸி எப்05 ஸ்மார்ட்போன். குறிப்பாக இந்த போன் சிறந்த ஆடியோ அனுபவத்தைக் கொடுக்கும்.

50 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி டெப்த் கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது சாம்சங் கேலக்ஸி எப்05 ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் அசத்தலான படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமரா கொண்டுள்ளது இந்த போன். இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

முடிச்சு  விட்டீங்க போங்க.. ஆஃபரில் Samsung போன்.. எந்த மாடல்?

5000mAh பேட்டரி உடன் சாம்சங் கேலக்ஸி எப்05 ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய ல் 25W ஃபாஸ்ட் சார்ஜிங் (Fast Charging) வசதியும் உள்ளது. அதேபோல் சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor) வசதி கொண்டுள்ளது இந்த சாம்சங் போன்.

குறிப்பாக 4ஜி, வைஃபை, ஜிபிஎஸ், 3.5 எம்எம் ஆடியோ ஜாக் (Audio Jack) உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன. 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்டுள்ளது இந்த சாம்சங் போன். மேலும் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.

Best Mobiles in India

English summary
30 Percent Discount on Samsung Galaxy F05 with 4GB Ram in Flipkart Sale Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X