Home
Mobile

வெளுத்துக் கட்டும் பிளிப்கார்ட்.. 108எம்பி கேமரா.. 128ஜிபி மெமரி.. ஆஃபரில் Redmi 5ஜி போன்.. எந்த மாடல்?

ரெட்மி நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்களுக்கு இந்தியா முழுவதும் நல்ல வரவேற்பு உள்ளது. அதாவது தனித்துவமான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் இந்நிறுவனத்தின் போன்கள் வெளிவருகின்றன. எனவே தான் இந்நிறுவனத்தின் போன்களுக்கு இந்தியா முழுவதும் நல்ல வரவேற்பு உள்ளது. இந்நிலையில் ரெட்மி நோட் 13 5ஜி (Redmi Note 13 5G) போனுக்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.

அதாவது பிளிப்கார்ட் தளத்தில் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ரெட்மி நோட் 13 5ஜி போனுக்கு 30 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ,14,499 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் 5 சதவீதம் தள்ளுபடியும் உள்ளது. எனவே இந்த போனை குறைந்த விலையில் வாங்கிவிட முடியும்.

வெளுத்துக் கட்டும் பிளிப்கார்ட்.. ஆஃபரில் Redmi 5ஜி போன்.. எந்த மாடல்?

ரெட்மி நோட் 13 5ஜி அம்சங்கள் (Redmi Note 13 5G Specifications): 6.67-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே வசதியைக்
கொண்டுள்ளது ரெட்மி நோட் 13 5ஜி போன். மேலும் 1080x2400 பிக்கசல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1000 நிட்ஸ் ப்ரைட்னஸ், கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு உள்ளிட்ட பல டிஸ்பிளே அம்சங்கள் இந்த போனில் உள்ளன. குறிப்பாக இந்த போன் சிறந்த டிஸ்பிளே அனுபவத்தை வழங்கும்.

சக்திவாய்ந்த மீடியாடெக் டைமன்சிட்டி 6080 ஆக்டோ-கோர் 5ஜி (Mediatek Dimensity 6080 6nm Octa-core 5G) சிப்செட் கொண்டுள்ளது இந்த ரெட்மி போன். அதேபோல் MIUI 14 சார்ந்த ஆண்ட்ராய்டு 14 இயங்குதள வசதியுடன் இந்த போன் வெளிவந்தது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.

6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்டுள்ளது ரெட்மி நோட் 13 5ஜி மாடல். கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

108எம்பி பிமைரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி மேக்ரோ லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா
செட்டப் கொண்டுள்ளது ரெட்மி நோட் 13 5ஜி ஸ்மார்ட்போன் . செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமரா கொண்டுள்ளது இந்த ரெட்மி நோட் 13 5ஜி ஸ்மார்ட்போன். இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த ரெட்மி போனில் உள்ளன.

5000mAh பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது ரெட்மி நோட் 13 5ஜி ஸ்மார்ட்போன். எனவே இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். குறிப்பாக 33W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி இதில் உள்ளது. எனவே இந்த போனின் பேட்டரியை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும். மேலும் இந்த போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.

IP54 தர டஸ்ட் மற்றும் ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் (Dust And Splash Resistant), சைடு மவுண்ட்டெட் ஃபிங்கர் பிரிண்ட் ஸ்கேனர் (Side Mounted Fingerprint Scanner), இன்பிராரெட் சென்சார் (Infrared Sensor) உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்கள் ரெட்மி நோட் 13 5ஜி ஸ்மார்ட்போனில் கொடுக்கப்பட்டுள்ளது.

அஃபிலியேட் லிங்க் வெளிப்படுத்துதல்: இந்த வலைத்தளத்தில் உள்ள அஃபிலியேட் லிங்க் மூலம் செய்யப்படும் கொள்முதல்களில் இருந்து கிஸ்பாட் வலைத்தளம் கமிஷன்களை சம்பாதிக்கிறது. தயாரிப்புகள் நேர்மையான கருத்துக்கள் மற்றும் தனிப்பட்ட அனுபவத்தின் அடிப்படையில் பரிந்துரைக்கப்படுகின்றன, உங்களுக்கு எந்த கூடுதல் செலவும் இல்லாமல்!

More from GizBot

Best Mobiles in India

English summary
30 Percent Discount on Redmi Note 13 5G in Flipkart sale check specification, price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X