அதிர போகுது ஆர்டர்.. 50எம்பி கேமரா... 128ஜிபி மெமரி.. ஆஃபரில் Realme 5ஜி போன்.. எந்த மாடல்?
பிளிப்கார்ட் தளத்தில் ரியல்மி சி65 5ஜி (realme C65 5G) ஸ்மார்ட்போனுக்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. 6.67-இன்ச் டிஸ்பிளே, 50எம்பி கேமரா, 5000mAh பேட்டரி உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் இந்த ரியல்மி போன் வெளிவந்துள்ளது. இப்போது ரியல்மி சி65 5ஜி ஸ்மார்ட்போனுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் இதன் சிறப்பு அம்சங்களை இங்கே பார்க்கலாம்.
அதன்படி பிளிப்கார்ட் தளத்தில் ரியல்மி சி65 5ஜி ஸ்மார்ட்போனுக்கு 30 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.10,448 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் 5 சதவீதம் கேஷ்பேக் சலுகையும் உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை குறைந்த விலையில் வாங்கிவிட முடியும்.

ரியல்மி சி65 5ஜி அம்சங்கள் (realme C65 5G specifications): தரமான ஆக்டா-கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 சிப்செட் (octa-core MediaTek Dimensity 6300) கொண்டுள்ளது ரியல்மி சி65 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் இந்த போனில் ஏஆர்எம் மாலி-ஜி57 ஜிபியு(Arm Mali-G57 MC2 GPU) வசதியும் உள்ளது.
அதேபோல் 6.5-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ள இந்த ரியல்மி ஸ்மார்ட்போன். மேலும் இதன் டிஸ்பிளேவில் 1604 x 720 பிக்சல்ஸ் ரெசல்யூஷன், 120 ஹெர்ட்ஸ் ரெப்ரெஷ் ரேட், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட், 625 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் மற்றும் பல்வேறு சிறப்பான அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். பெரிய டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.
குறிப்பாக 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் வசதியைக் கொண்டுள்ளது ரியல்மி சி65 5ஜி ஸ்மார்ட்போன் மாடல். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது. குறிப்பாக இந்த போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.
50 மெகாபிக்சல் மெயின் கேமரா கொண்டுள்ளது இந்த ரியல்மி சி65 5ஜி ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த போன். இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இதில் உள்ளன.
5000mAh பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது ரியல்மி சி65 5ஜி ஸ்மார்ட்போன். எனவே இந்த போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். அதேபோல் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 15 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் இதில் உள்ளன. மேலும் டஸ்ட் மற்றும் ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ஸிற்கான ஐபி54 ரேட்டிங்கையும் பெற்றுள்ளது இந்த போன்.
5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, ப்ளூடூத் 5.3, ஜிபிஎஸ், க்ளோனாஸ், கலிலியோ, க்யூஇஸட்எஸ்எஸ் (QZSS) மற்றும் யூஎஸ்பி டைப்-சி போன்ற கனெக்டிவிட்டி ஆதரவுகளும் கொண்டுள்ளது இந்த போன். மேலும் ரியல்மி நிறுவனம் இந்த ஆண்டு பல அசத்தலான ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் ஒவ்வொரு போனுக்கும் நல்ல வரவேற்பு உள்ளது.


Click it and Unblock the Notifications








