Home
Mobile

பிளிப்கார்ட் அதிரும்.. ரூ.7699 பட்ஜெட்ல 5160mAh பேட்டரி, 50எம்பி கேமரா.. ஆஃபரில் Poco 5ஜி போன்.. எந்த மாடல்?

போக்கோ நிறுவனம் அவ்வப்போது பட்ஜெட் விலையில் அசத்தலான 5ஜி ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்கிறது. அதுவும் இந்நிறுவனம் தனித்துவமான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் போன்களை அறிமுகம் செய்வதால் அதிக வரவேற்பு உள்ளது. இந்நிலையில் போக்கோ சி75 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது சலுகை விலையில் கிடைக்கிறது. இது குறித்த தகவல்களை இங்கே பார்க்கலாம்.

தற்போது பிளிப்கார்ட் தளத்தில் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட போக்கோ சி75 5ஜி ஸ்மார்ட்போன் மாடலுக்கு 30 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.7699 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் 5 சதவீதம் கேஷ்பேக் சலுகையும் உள்ளது. எனவே இந்த போனை குறைந்த விலையில் வாங்கிவிட முடியும்.

பிளிப்கார்ட் அதிரும்..ஆஃபரில் போக்கோ 5ஜி போன்.. எந்த மாடல்?

போக்கோ சி75 5ஜி அம்சங்கள் (POCO C75 5G Specifications): சியோமி ஹைப்பர்ஓஎஸ் (Xiaomi HyperOS) மற்றும் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) மூலம் இந்த போன் இயங்குகிறது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.

சக்திவாய்ந்த 4என்எம் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 4எஸ் ஜென் 2 (4nm Octa Core Snapdragon 4s Gen 2) எஸ்ஓசி சிப்செட் உடன் இந்த போன் வெளிவந்துள்ளது. பின்பு அட்ரினோ 611 ஜிபியு (Adreno 611 GPU) கிராபிக்ஸ் கார்டு இதில் உள்ளது. எனவே இந்த போன் மேம்பட்ட கேமிங் அனுபவத்தை வழங்கும்.

அதேபோல் 6.88 இன்ச் எச்டிபிளஸ் (HD+) எல்சிடி (LCD) டிஸ்பிளே கொண்டுள்ளது இந்த போன். இந்த டிஸ்பிளேவில் 1600 x 720 பிக்சல்கள், 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 240Hz டச் சாம்பிளிங் ரேட் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் உள்ளன. பெரிய டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

குறிப்பாக 4 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி உடன் போக்கோ சி75 5ஜி போன் வெளிவந்துள்ளது. மேலும் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.

இந்த போக்கோ சி75 5ஜி ஸ்மார்ட்போன் 50 எம்பி மெயின் கேமரா மற்றும் செகண்டரி கேமரா கொண்ட டூயல் கேமரா (Dual Camera System) அமைப்புடன் வெளிவந்துள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் அசத்தலான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 5எம்பி கேமரா இதில் உள்ளது.

அதுவும் 5160mAh பேட்டரி உடன் போக்கோ சி75 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்தது. எனவே இந்த ஸ்மார்ட்போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 18W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் இந்த போனில் உள்ளது. 5ஜி எஸ்ஏ கனெக்டிவிட்டி ஆதரவு இந்த போனில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் என்சேஞ்ச்டு க்ரீன் (Enchanted Green), சில்வர் ஸ்டார்டஸ்ட் (Silver Stardust) மற்றும் அக்வா ப்ளூ (Aqua Blue) ஆகிய நிறங்களில் இந்த போக்கோ சி75 5ஜி ஸ்மார்ட்போன் வாங்க கிடைக்கிறது. அனைத்து சிறப்பான அம்சங்களுடன் இந்த போன் கம்மி பட்ஜெட்டில் கிடைப்பதால் நம்பி வாங்கலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
30 Percent Discount on POCO C75 5G in Flipkart sale check specification, price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X