பட்டிதொட்டியெல்லாம் பறக்கும் ஆர்டர்.. சோனி கேமரா.. 80W சார்ஜிங்.. ஆஃபரில் Oneplus 5ஜி போன்.. எந்த மாடல்?
அமேசானில் ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 5ஜி (Oneplus Nord CE 3 5G) ஸ்மாரட்போனுக்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த போன் சோனி கேமரா, 80 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங், ஸ்னாப்டிராகன் சிப்செட் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் வெளிவந்துள்ளது.
மேலும் தற்போது அமேசானில் ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 5ஜி ஸ்மார்ட்போனுக்கு 30 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.18,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ.500 தள்ளுபடியும் உள்ளது. எனவே இந்த போனை ரூ.18499 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 5ஜி அம்சங்கள் (Oneplus Nord CE 3 5G Specifications): 6.7-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் அமோலெட் டிஸ்பிளே வசதியுடன் இந்த ஒன்பிளஸ் போன் வெளிவந்தது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 2412 x 1080 பிக்சல்ஸ், எச்டிஆர் 10 பிளஸ், 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 950 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 2160Hz PWM டிம்மிங் உள்ளிட்ட பல்வேறு டிஸ்பிளே அம்சங்கள் உள்ளன.
இதுதவிர 240Hz டச் சாம்பிளிங் ரேட் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 (Corning Gorilla Glass 5) புரொடெக்சன் கொண்டுள்ளது இதன் டிஸ்பிளே. மேலும் ஆக்ஸிஜன்ஓஎஸ் 13.1 (OxygenOS 13.1) சார்ந்த ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) மூலம் இந்த போன் இயங்குகிறது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.
50எம்பி சோனி ஐஎம்எக்ஸ்890 (Sony IMX890) சென்சார் + 8எம்பி சோனி ஐஎம்எக்ஸ்355 (Sony IMX355) சென்சார் + 2எம்பி மேக்ரோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த போன். மேலும் 20x டிஜிட்டல் ஜூமிங், 4K வீடியோ ரெக்கார்டிங் சப்போர்ட், அல்ட்ரா ஸ்டெடி மோட் (Ultra Steady Mode), டூயல் வியூ வீடியோ (Dual-view Video), எச்டிஆர் (HDR), நைட்ஸ்கேப் (Nightscape), போர்ட்ராய்டு மோட் (Portrait Mode), வீடியோ போர்ட்ராய்டு (Video Portrait) போன்ற கேமரா அம்சங்கள் இதில் உள்ளன.
செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கொண்டுள்ளது இந்த போன். குறிப்பாக 1080p வீடியோ ரெக்கார்டிங் மற்றும் ஸ்டெடி மோட் சப்போர்ட்கொண்டுள்ளது இதன் செல்பி கேமரா. அதேபோல் இந்த போனில் அட்ரினோ 642எல் ஜிபியு (Adreno 642L GPU) கிராபிக்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும் ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 782ஜி 6என்எம் மொபைல் (Octa Core Snapdragon 782G 6nm Mobile) சிப்செட் வசதியுடன் இந்த அசத்தலான ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும்.

5000எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது இந்த ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 5ஜி ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 80 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. எனவே இந்த போனை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும்.
8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்டுள்ளது இந்த ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 5ஜி மாடல். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இதில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது. இதுதவிர பல சிறப்பு அம்சங்கள் இந்த போனில் உள்ளது.


Click it and Unblock the Notifications








