நிமிஷத்துக்கு நிமிஷம் எகிறும் டிமாண்ட்.. முழுசா 30% நேரடி தள்ளுபடி.. ஆர்டர்களை பறக்கவிடும் OnePlus போன்!
2 புதிய ஸ்மார்ட்போன்கள் மற்றும் 1 புதிய கலர் வேரியண்ட் என ஒன்பிளஸ் (OnePlus) நிறுவனம் இந்த 2024 ஜூன் மாதத்தில் மொத்தம் 3 புதிய போன்களை அறிமுகம் செய்யவுள்ள நிலையில்.. ஓராண்டு பழைய ஒன்பிளஸ் மாடலின் மீது முழுதாக 30% நேரடி தள்ளுபடி (Direct Discount) அறிவிக்கப்பட்டுள்ளது. அமேசான் இந்தியா (Amazon India) வலைத்தளம் வழியாக கிடைக்கும் இந்த சலுகை எந்த மாடலின் மீது கிடைக்கிறது? அதன் அசல் விலை என்ன? ஆபர் விலை என்ன? இதோ விவரங்கள்:
என்ன மாடல்? ஒன்பிளஸ் 11ஆர் மீது தான் 30% டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. நினைவூட்டும் வண்ணம், கடந்த பிப்ரவரி 2023-ல் ஒன்பிளஸ் 11ஆர் ஸ்மார்ட்போனின் பேஸிக் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.39,999 க்கு அறிமுகப்படுத்தப்பட்டது. இருப்பினும் தற்போது இது அமேசானில் ரூ.27,999 க்கு வாங்க கிடைக்கிறது. அதாவது இது 30 சதவீதம் தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

நேரடி டிஸ்கவுண்ட் தவிர்த்து, ஒன்பிளஸ் 11ஆர் ஸ்மார்ட்போன் மீது மேலும் 3 பிரத்யேக சலுகைகள் கிடைக்கிறது. அமேசான் பே ஐசிஐசிஐ கிரெடிட் கார்டை (Amazon Pay ICICI credit card) பயன்படுத்தி ஒன்பிளஸ் 11ஆர் ஸ்மார்ட்போனை வாங்கினால் ரூ.1,260.76 வரையிலான நோ-காஸ்ட் இஎம்ஐவிருப்பம் அணுக கிடைக்கும்
மேலும் அமேசான் பே ஐசிஐசிஐ கார்டை பயன்படுத்துவது இதுவே முதல் முறை என்றால், நீங்கள் வரவேற்பு சலுகையையும் பெறுவீர்கள். கடைசியாக உங்களிடம் கனரா பேங்க் கிரெடிட் கார்டு இருந்தால், நீங்கள் ரூ.500 வரையிலான தள்ளுபடியை பெறலாம். இதுதவிர்த்து ஒன்பிளஸ் 11ஆர் ஸ்மார்ட்போன் மீது 7 நாள் இலவச சர்வீஸ் சென்டர் ரீப்ளேஸ்மென்ட் (7-day free service centre replacement) விருப்பம் மற்றும் 1 வருட உத்தரவாதமும் கிடைக்கிறது.

ஒன்பிளஸ் 11ஆர் 5ஜி அம்சங்கள்: சோனிக் பிளாக் மற்றும் கேலடிக் சில்வர் என்கிற 2 கலர் ஆப்ஷன்களில் வாங்க கிடைக்கும் ஒன்பிளஸ் 11ஆர் 5ஜி ஆனது 120ஹெர்ட்ஸ் வரையிலான அடாப்டிவ் டைனமிக் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.74-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் கர்வ்டு அமோஎல்இடி டிஸ்பிளேவுடன் வருகிறது.
இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 5ஜி சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. முன்னரே குறிப்பிட்டபடி இது 16ஜிபி வரையிலான ரேம் உடன் இணைக்கப்பட்டுள்ளது. பேட்டரியை பொறுத்தவரை இது 100W சூப்பர்வூக் எஸ் ஃபிளாஷ் ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 5,000எம்ஏஎச் பேட்டரியை பேக் செய்கிறது.

கேமராக்களை பொறுத்தவரை, இது ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது. அதில் 50 மெகாபிக்சல் சோனி ஐஎம்எக்ஸ்890 சென்சார் + 8 மெகாபிக்சல் அல்ட்ரா வைட் ஆங்கிள் சென்சார் + 2 மெகாபிக்சல் மேக்ரோ கேமராவை கொண்டுள்ளது. முன்பக்கத்தை பொறுத்தவரை, ஹோல்-பஞ்ச் கட்அவுட்டில் 16 மெகாபிக்சல் செல்பீ கேமரா உள்ளது.
புதிய கலர் ஆப்ஷனில் அறிமுகமாகும் ஒன்பிளஸ் மாடல் எது? ஒன்பிளஸ் 12 (OnePlus 12) ஸ்மார்ட்போனின் மூன்றாவது கலர் ஆப்ஷன் வருகிற ஜூன் 6 ஆம் தேதி அன்று இந்தியாவில் அறிமுகமாகும் என்று ஒன்பிளஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஒன்பிளஸ் நிறுவனம் இந்த கலர் ஆப்ஷனை க்ளேஷியல் ஒயிட் (Glacial White) என்று அழைக்கிறது. அறிமுகமான அதே நாளில் இது விற்பனைக்கும் வரும்.
ஜூன் மாதம் அறிமுகமாகும் 2 புதிய ஒன்பிளஸ் போன்கள் என்னென்ன? அது ஒன்பிளஸ் நோர்ட் 4 (OnePlus Nord 4) மற்றும் ஒன்பிளஸ் நோர்ட் சிஇ லைட் (OnePlus Nord CE 4 Lite) மாடல்கள் ஆகும். இவ்விரு ஒன்பிளஸ் இரண்டு ஸ்மார்ட்போன்களும் முன்னதாக வெளியான மாடல்களை விட மாறுபட்ட மற்றும் மேம்படுத்தப்பட்ட சிப்செட்டை கொண்டிருக்கும்.
நோர்ட் 4 மாடலானது குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 பிளஸ் ஜென் 3 சிப்செட் (Qualcomm Snapdragon 7+ Gen 3 SoC) மூலம் இயக்கப்படலாம், நோர்ட் சிஇ 4 லைட் மாடல் குவால்காம் ஸ்னாப்டிராகன் 6 ஜென் 1 சிப்செட் (Qualcomm Snapdragon 6 Gen 1 SoC) கொண்டு இயங்கலாம்.


Click it and Unblock the Notifications