சூப்பர் ஆஃபர் கொடுத்த பிளிப்கார்ட்.. ரூ.6,999 போதும்.. 50எம்பி கேமரா.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
பிளிப்கார்ட் தளத்தில் மோட்டோரோலா ஜி04எஸ் ஸ்மார்ட்போனுக்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக டால்பி அட்மாஸ், 50எம்பி கேமரா, 5000எம்ஏஎச் பேட்டரி மற்றும் பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் இந்த மோட்டோரோலா ஜி04எஸ் (Motorola g04s) போன் வெளிவந்துள்ளது. இப்போது இந்த புதிய ஸ்மார்ட்போனுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் அம்சங்களை இங்கே சற்று விரிவாகப் பார்க்கலாம்.
பிளிப்கார்ட் தளத்தில் மோட்டோரோலா ஜி04எஸ் ஸ்மார்ட்போனுக்கு 30 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.6.999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் 5 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. எனவே இந்த போனை மிகவும் குறைந்த விலையில் வாங்க முடியும்.

மோட்டோரோலா ஜி04எஸ் அம்சங்கள்: 6.6-இன்ச் எச்டி பிளஸ் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளேவை (IPS LCD Display) கொண்டு வெளிவந்துள்ளது இந்த மோட்டோரோலா ஜி04எஸ் ஸ்மார்ட்போன். மேலும் 1612 x 720 பிக்சல்ஸ், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே. பெரிய டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.
எல்இடி பிளாஷ் ஆதரவு கொண்ட 50எம்பி சிங்கிள் ரியர் கேமராவைக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த மோட்டோரோலா ஜி04எஸ் ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட் உதவியுடன் துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 5எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த போன்.
யுனிசாக் டி606 சிப்செட் (UniSoC T606 SoC) மோட்டோரோலா ஜி04எஸ் போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும செயல்திறன் வழங்கும். மேலும் மாலி ஜி57 ஜிபியு (Mali G57 GPU) ஆதரவு கொண்டுள்ளது இந்த போன். எனவே கேமிங் பயனர்கள் இந்த போனை நம்பி வாங்கலாம்.
ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ்(Android 14 OS) அடிப்படையிலான மை யுஎக்ஸ் (My UX) மூலம் இயக்கப்படுகிறது மோட்டோரோலா ஜி04எஸ் ஸ்மார்ட்போன். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். குறிப்பாக இந்த போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது மோட்டோரோலா நிறுவனம்.
டால்பி அட்மோஸ் சவுண்ட் ஆதரவு கொண்டுள்ளது மோட்டோரோலா ஜி04எஸ் ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும். மேலும் தூசி மற்றும் ஸ்பிளாஸ் (Dust and splash) எதிர்ப்பிற்கான ஐபி52 ரேட்டிங்கை (IP52 Rating)பெற்றுள்ளது இந்த அசத்தலான மோட்டோரோலா போன்.

4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி ஸ்டோரேஜ் கொண்டுள்ளது இந்த மோட்டோரோலா ஜி04எஸ் ஸ்மார்ட்போன். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு உள்ளது.
5000எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது இந்த மோட்டோரோலா ஜி04எஸ் போன். எனவே இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் 10 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது. பின்பு சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் (Side-mounted Fingerprint Scanner) ஆதரவு கொண்டுள்ளது இந்த போன்.


Click it and Unblock the Notifications








