Home
Mobile

மிரளுது விற்பனை.. பட்ஜெட்ல 3D டிஸ்பிளே.. OV கேமரா.. 68W சார்ஜிங்.. 4400mAh பேட்டரி.. எந்த மாடல்?

பிளிப்கார்ட் விற்பனையில் (Flipkart Sale) ஓம்னிவிஷன் கேமரா, 3டி கர்வ்ட் டிஸ்பிளே, 68W சார்ஜிங், 4400mAh பேட்டரி போன்ற அம்சங்களை கொண்ட மோட்டோரோலா எட்ஜ் 30 ஃப்யூஷன் (Motorola Edge 30 Fusion) 5ஜி போனுக்கு நம்ப முடியாத தள்ளுபடி கொடுக்கப்படுகிறது.

மோட்டோரோலா எட்ஜ் 30 ஃப்யூஷன் அம்சங்கள் (Motorola Edge 30 Fusion Specifications): இந்த மோட்டோவில் 6.55 இன்ச் (2400 × 1080 பிக்சல்கள்) ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) டிஸ்பிளே வருகிறது. இதுவொரு 144Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 3டி கர்வ்ட் ஓஎல்இடி (3D Curved OLED) டிஸ்பிளே மாடலாகும். இந்த டிஸ்பிளேவில் எச்டிஆர்10பிளஸ் (HDR10+) சப்போர்ட் உள்ளது.

பட்ஜெட்ல 3D டிஸ்பிளே.. OV கேமரா.. 68W சார்ஜிங்.. 4400mAh பேட்டரி!

அதோடு 360Hz டச் சாம்பிளிங் ரேட், டிசி டிம்மிங் (DC Dimming) மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 (Corning Gorilla Glass 5) பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 888 பிளஸ் 5என்எம் மொபைல் (Octa Core Snapdragon 888 Plus 5nm Mobile) சிப்செட் மற்றும் அட்ரினோ 660 ஜிபியு (Adreno 660 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது.

ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ் (Android 12) கொண்டிருக்கிறது. 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் விற்பனைக்கு வருகிறது. டூயல் நானோ சிம் சிலாட் வருகிறது. பிரீமியம் சென்சார்கள் கொண்ட டிரிபிள் ரியர் கேமரா சிஸ்டம் (Triple Rear Camera System) வருகிறது. ஆகவே, 50 எம்பி மெயின் கேமரா கொண்டுள்ளது.

இந்த கேமராவில் ஓம்னிவிஷன் ஓவி50ஏ (OmniVision OV50A) சென்சார் கொடுக்கப்பட்டுள்ளது. அதோடு மேக்ரோ ஆப்ஷன் கொண்ட 13 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா + 2 எம்பி டெப்த் கேமரா வருகிறது. 32 எம்பி ஏஎஃப் செல்பீ கேமரா கொண்டிருக்கிறது. IP52 தர டஸ்ட் மற்றும் ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் வருகிறது.

இந்த மோட்டோவில் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor), யுஎஸ்பி டைப்-சி ஆடியோ (USB Type-C Audio), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers), டால்பி அட்மோஸ் (Dolby Atmos) சப்போர்ட் வருகிறது. 68W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 4400mAh பேட்டரி வருகிறது.

பட்ஜெட்ல 3D டிஸ்பிளே.. OV கேமரா.. 68W சார்ஜிங்.. 4400mAh பேட்டரி!

ஆகவே, ஸ்லிம் டிசைனில் 175 கிராம் எடை மற்றும் 7.45 மிமீ தடிமன் கொண்டுள்ளது. இதுவொரு 5ஜி மாடலாகும். ஆகவே, 5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ (5G SA/NSA) மற்றும் டூயல் 4ஜி வோஎல்டிஇ (Dual 4G VoLTE) சப்போர்ட் வருகிறது. அதேபோல கனெக்டிவிட்டியை பார்க்கையில், வை-பை 6இ (Wi-Fi 6E), ப்ளூடூத் 5.2 (Bluetooth 5.2), ஜிபிஎஸ் (GPS) மற்றும் என்எப்சி (NFC) ஆகிவை வருகின்றன.

இந்த மோட்டோவில் காஸ்மிக் கிரே (Cosmic Grey), சோலார் கோல்டு (Solar Gold) மற்றும் விவிட் மெஜந்தா (Vivid Magenta) ஆகிய 3 கலர்கள் விற்பனைக்கு வருகிறது. இந்த போனின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.34,999ஆக இருக்கிறது. இருப்பினும், பிளிப்கார்ட்டில் ரூ.1,750 தள்ளுபடியோடு ரூ.33,249க்கு கிடைக்கிறது.

இந்த தள்ளுபடியை ஆக்சிஸ் பேங்க் கிரெடிட் கார்டு பயன்படுத்தி பெற்று கொள்ளலாம். பட்ஜெட்டில் அல்ட்ரா பிரீமியம் டிஸ்பிளே, பிளாக்சிப் கேமரா சிஸ்டம், பக்கா பர்ஃபமென்ஸ் கொண்ட சிப்செட் மட்டுமல்லாமல், பிரீமியம் லுக் கொண்ட போன் வேண்டுமானால், இந்த மோட்டோரோலா எட்ஜ் 30 ஃப்யூஷன் மாடலை தேர்ந்தெடுக்கலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
30 Percent Discount on Motorola Edge 30 Fusion in Flipkart Sale Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X