இப்படி இருக்கனும் டிஸ்கவுண்ட்.. ரூ.7,000 ரேட் கட்ல 100W சார்ஜிங்.. 5200mAh பேட்டரி.. SONY கேமரா.. எந்த மாடல்?
100W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5200mAh பேட்டரி, சோனி சென்சார் கொண்ட டெலிபோட்டோ கேமரா, 4000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொண்ட குவாட் கர்வ்ட் டிஸ்பிளே போன்ற பீச்சர்களை கொண்ட ஹானர் 200 (HONOR 200) போனுக்கு நேரடியாக ரூ.7,000 விலை குறைப்பு கிடைக்கிறது. ஆகவே, பிரீமியம் பீச்சர்களை இப்போது பட்ஜெட்டில் பெற்று கொள்ளலாம். இந்த ஹானர் போனின் விலை, விற்பனை மற்றும் பீச்சர்களை தெரிந்த கொள்ளலாம்.
இந்திய மார்கெட்டில் களமிறங்கிய போது, 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.34,999ஆகவும், 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.39,999ஆகவும் இருந்தது. இப்போது, அமேசான் விற்பனையில் (Amazon Sale) 8 ஜிபி ரேம் வேரியண்ட்டானது, ரூ.27,998 பட்ஜெட்டில் கிடைக்கிறது. இது நேரடி விலை குறைப்பு சலுகையாகும்.

ஆகவே, இந்த விலைக்கு வாங்குவதற்கு கிரெடிட் கார்டுகள் அல்லது டெபிட் கார்டுகள் தேவையில்லை. ஆகவே, 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டை ரூ.7,001 விலை கம்மியாக வாங்கி கொள்ளலாம். அதேபோல 12 ஜிபி ரேம் வேரியண்ட்டானது, இப்போது ரூ.31,210 விலைக்கு கிடைக்கிறது. இது ரூ.8,789 விலை குறைப்பில் கிடைப்பதாகும்.
ஹானர் 200 அம்சங்கள் (HONOR 200 Specifications): இந்த ஹானர் போனில் குவாட் கர்வ்ட் டிசைன் கொண்ட 6.7 இன்ச் (2664 x 1200 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவில் 4,000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் ஹைப்பர்-டைனாமிக் கலர் டெக்னாலஜி கிடைக்கிறது. 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 435 பிபிஐ பிக்சல் டென்சிட்டி கிடைக்கிறது.
மேலும், ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன், 3840Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி, எச்டிஆர் விவிட் (HDR Vivid) மற்றும் வெட் டச் என்ஹான்ஸ்மெண்ட் கிடைக்கிறது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் வெளியாகியதால், ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) மட்டுமே வருகிறது. இருப்பினும், ஆண்ட்ராய்டு 17 ஓஎஸ் வரையில் அப்டேட்களை பெற்று கொள்ளலாம்.

மிட்-ரேஞ்ச் பட்ஜெட்டில் வெளியாகியதால், அதற்கு ஏற்ப பர்ஃபாமென்ஸ் கொடுக்கும்படி குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 3 4என்எம் (Qualcomm Snapdragon 7 Gen 3 4nm) சிப்செட் மற்றும் அட்ரினோ 720 ஜிபியு (Adreno 720 GPU) கிராபிக்ஸ் கார்டு கிடைக்கிறது. லேட்டஸ்ட் ஏஐ பீச்சர்களுடன் ஹானரின் இன்-ஹாவுஸ் யுஐ-ஆன மேஜிக்ஓஎஸ் 8.0 (MagicOS 8.0) கிடைக்கிறது.
பிரீமியம் சென்சார்களுடன் டிரிபிள் ரியர் கேமரா சிஸ்டம் (Triple Rear Camera System) கிடைக்கிறது. ஆகவே, சோனி ஐஎம்எக்ஸ்906 சென்சாரும், ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் டெக்னாலஜியும் கொண்ட 50 எம்பி மெயின் கேமரா உள்ளது. அதேபோல மேக்ரோ ஆப்ஷன் கொண்ட 12 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + சோனி ஐஎம்எக்ஸ்856 சென்சாருடன் 50 எம்பி டெலிபோட்டோ உள்ளது.
இந்த டெலிபோட்டோவில் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் டெக்னாலஜி மற்றும 50X டிஜிட்டல் ஜூமிங் கிடைக்கிறது. ரியர் கேமராவில் 4K வீடியோ ஷூட் கிடைக்கிறது, அதேபோல 50 எம்பி செல்பீ ஷூட்டரிலும் 4K வீடியோ ஷூட் மற்றும் சோனி ஐஎம்எக்ஸ்906 சென்சார் கிடைக்கிறது. ஏஐ இமேஜிங் (AI Imaging) பீச்சர்கள் கிடைக்கின்றன.
ஆகவே, ஏஐ எரைசர், ஏஐ பொக்கெ அட்ஜெட்ஸ், இன்ஸ்டன்ட் மூவி போன்ற பீச்சர்கள் வருகின்றன. இந்த ஹானர் 200 போனில் 100W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 5200mAh பேட்டரி கிடைக்கிறது. ஆகவே, டிஸ்பிளே, கேமரா, சிப்செட் போன்ற ஒட்டுமொத்த பீச்சரகளிலும் பிரீமியம் எதிர்பார்க்கும் ஸ்மார்ட்போன் பிரியர்களுக்கு இந்த போன் பக்கா ஆப்ஷனாக இருக்கும்.


Click it and Unblock the Notifications








