Home
Mobile

பொளக்குது ஆர்டர்.. ரூ.15,790 போதும்.. 18GB ரேம்.. 5200mAh பேட்டரி.. 18W சார்ஜிங்.. 50MP கேமரா.. எந்த மாடல்?

பிளிப்கார்ட் விற்பனையில் (Flipkart Sale) 18 ஜிபி ரேம், 5200mAh பேட்டரி, 18W ஃபாஸ்ட் சார்ஜிங், 50 எம்பி கேமரா போன்ற பீச்சர்கள் மட்டுமல்லாமல், மேஜிக் எடிட்டர், போட்டோ அன்பிளர், மேஜிக் எரைசர் போன்ற ஏஐ பீச்சர்களை கொடுக்கும் 50 எம்பி கேமரா கொண்ட அல்காடெல் வி3 ப்ரோ 5ஜி (Alcatel V3 Pro 5G) போனானது பட்ஜெட்டில் கிடைக்கிறது. இந்த அல்காடெல் வி3 ப்ரோ 5ஜி போனின் பீச்சர்கள், விலை விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

இந்திய மார்கெட்டில் புது மாடல்களாக அல்காடெல் நிறுவனத்தின் அல்காடெல் வி3 ப்ரோ 5ஜி, அல்காடெல் வி3 அல்ட்ரா 5ஜி (Alcatel V3 Ultra 5G) மற்றும் அல்காடெல் வி3 கிளாசிக் 5ஜி (Alcatel V3 Classic 5G) ஆகியவை வெளியாகின. இந்த மாடல்களின் விற்பனை பிளிப்கார்ட் தளத்தில் தொடங்கி இருக்கிறது. இதில் ரூ.15,000 பட்ஜெட்டில் கிடைக்கும் வி3 ப்ரோ 5ஜி போன் கவனம் பெற்றுள்ளது.

பொளக்குது ஆர்டர்.. ரூ.15,790 போதும்.. 18GB ரேம்.. 5200mAh பேட்டரி!

அல்காடெல் வி3 ப்ரோ 5ஜி அம்சங்கள் (Alcatel V3 Pro 5G Specifications): இந்த புதிய மாடலில் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) மட்டுமல்லாமல், 3 ஜெனரேஷன் ஓஎஸ் அப்டேட்கள் மற்றும் 4 வருடங்களுக்கு செக்யூரிட்டி அப்டேட்கள் வருகிறது. பக்கா பர்ஃபாமென்ஸ் கொண்ட ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 6என்எம் (Octa Core MediaTek Dimensity 6300 6nm) சிப்செட் வருகிறது.

6.7 இன்ச் (720 x 1600 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவில் எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 480 பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. 2.5D கிளாஸ் சப்போர்ட் கிடைக்கிறது. 8 ஜிபி ரேம் + 10 ஜிபிக்கான விர்ச்சுவல் ரேம் சப்போர்ட் கிடைக்கிறது. ஆகவே, 18 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் கிடைக்கிறது.

இந்த அல்காடெல் வி3 ப்ரோ 5ஜி போனுக்கு 2 டிபிக்கான மைக்ரோஎஸ்டு கார்டு (microSD Card) சப்போர்ட் கிடைக்கிறது. இந்த பட்ஜெட்டில் எதிர்பார்க்க முடியாதபடி நானோ சிம் சிலாட் (NANO SIM Slot) மட்டுமல்லாமல், ஈசிம் (eSIM) சப்போர்ட் கிடைக்கிறது. 50 எம்பி கேமரா மற்றும் 5 எம்பி அல்ட்ரா வைடு கேமராவை கொடுக்கிறது. 8 எம்பி செல்பீ ஷூட்டர் உள்ளது.

இந்த போனில் 5200mAh பேட்டரி மற்றும் 18W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கிடைக்கிறது. IP54 டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ட் வருகிறது. பட்ஜெட் மாடலாக இருப்பதால், சைடு-பிங்கர்பிரிண்ட் மட்டுமே கிடைக்கிறது. மேலும், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) சப்போர்ட் வருகிறது. மேட்ச்சா கிரீன் (Matcha Green) மற்றும் மெட்டாலிக் கிரே (Metalic Grey) கலர்களில் வருகிறது.

பில்ட்-இன் ஜெமினி ஏஐ சப்போர்ட் கிடைக்கிறது. இதுபோக பிக்சல் மாடல்களில் கிடைப்பதை போலவே, மேஜிக் எடிட்டர், போட்டோ அன்பிளஸ், மேஜிக் எரைசர் போன்ற பீச்சர்கள் கிடைக்கின்றன. இந்த அல்காடெல் வி3 ப்ரோ 5ஜி போனின் விலை ரூ.17,999ஆக இருக்கிறது. இப்போது, ரூ.2,209 உடனடி டிஸ்கவுண்ட் போக ரூ.15,790 பட்ஜெட்டில் கிடைக்கிறது. பிளிப்கார்ட்டில் வாங்கலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
30 Percent Discount on Alcatel V3 Pro 5G With 50MP Camera in Flipkart Sale Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X