TRENDING ON ONEINDIA
-
தொகுதி பங்கீடு.. திமுக-மதிமுக நடுவே இழுபறி.. அடுத்தகட்ட பேச்சுவார்த்தைக்கு முடிவு
-
5 கோடி ரூபாய் கார் மோதி பெண் பலி... விபத்தை ஏற்படுத்தியது யார் என தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்...
-
‘கூழுக்கும் ஆசை.. மீசைக்கும் ஆசை’.. சத்தமில்லாமல் பாய்பிரண்டுகளுக்கு பார்ட்டி வைக்கும் நடிகை!
-
எவ்வளவு சோதனை வந்தாலும் இந்த ராசிக்காரர் அசால்டா சமாளிப்பாராம்
-
10 ஆயிரம் கோடியில் 173 கோடி காலி; தீயாக வேலை செய்யும் இஸ்ரோ! எதில்?
-
ரியல் ஹீரோஸுக்கு இவ்வளவு தான் சம்பளமா? 1983 உலகக்கோப்பை பயோபிக் திரைப்படத்தில் சம்பள பிரச்சனை!
-
தம்பி இந்தியா... நீ என்ன பண்ணாலும் பாகிஸ்தான ஒன்னும் பண்ண முடியாது..? ஏன்..? அரசியல் சொல்வதென்ன..?
-
பக்தோரா பயண வழிகாட்டி - செய்யவேண்டியவை மற்றும் எப்படி செல்வது
ஸ்மார்ட்போன் வசதிகளுடன் வரும் மைக்ரோமேக்ஸ் போன்கள்
மார்க்கெட்டின் தேவையை புரிந்துகொண்டு சரியான விலையில், அதிக வசதிகளுடன் வரும் மைக்ரோமேக்ஸ் போன்களுக்கு சாதாரண மக்களிடையே அதிக வரவேற்பு உள்ளது.
இந்த நிலையில், ஸ்மார்ட்போன்களுக்கு சமமான வசதிகளுடன் மைக்ரோமேக்ஸ் அறிமுகப்படுத்தியுள்ள க்யூ 80 மற்றும் க்யூ 50 போன்களின் சிறப்பம்சங்களை காணலாம்.
மைக்ரோமேக்ஸ் க்யூ50 மல்டிமீடியா ரகத்தை சார்ந்தது. கீபேடு மூலம் அப்ளிகேஷன்களை இயக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. டியூவல் சிம் கார்டும் பொருத்திக்கொள்ளலாம்.
க்யூ80 கீபேடில் அதிக இடைவெளியுடன் கீ பட்டன்கள் பொருத்தப்பட்டுள்ளதால், இயக்குவதற்கும், டைப் செய்வதற்கும் எளிதாக உள்ளது. டிஸ்பிளே ஸ்கிரீனும் பெரிதாக இருக்கிறது.
இரண்டிலும் லேட்டஸ்ட் மல்டிமீடியா பார்மெட்டுகள் அப்லோடு செய்யப்பட்டுள்ளது. வீடியோ பார்மெட்டுகளையும் இயக்க முடியும். ஹைடெபினிஷனில் ப்ளேபேக் செய்யும் வசதியும் உண்டு.
க்யூ50 போனில் டிஜிட்டல் ஜூம் கொண்ட 2 மெகா பிக்செல் கேமராவும், க்யூ 80 போனில் 3 மெகாபிக்செல் பின்பக்க கேமராவும், முன்புறத்தில் வீடியோ காலிங் வசதி கொண்ட கேமராவும் உள்ளது.
சேமிப்பு திறனில் இரண்டு போன்களும் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு இல்லை. அதேவேளை, கூடுதல் மெமரி கார்டை பொருத்திக்கொள்ளும் வசதி உள்ளது.
க்யூ50யில் புளூடுத், யுஎஸ்பி பிசி கனெக்டிவிட்டி, 2ஜி இணைப்பை பெறும் வசதியும் இருக்கிறது. க்யூ 80 போனில் புளூடூத், வை-பை மற்றும் அதிவேக 3ஜி இன்டர்நெட் கனெக்டிவிட்டியை பெற முடிகிறது.
மைக்ரோமேக்ஸ் க்யூ 50 ரூ.2,800 விலையிலும், க்யூ 80 ரூ.4,800 விலையிலும் விற்பனை செய்யப்படுகிறது.